பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தேறவிசாரித்துத் தெளிவார்களாயின் தற்காலம் மதக்கடைப்பரப்பி சீவிப்போ ரெல்லாந் தங்கள் தங்கள் கோவில் கதவுகளை மூடிவிட வேண்டியதேயாம்.

- 5:37, பிப்ரவரி 21, 1912 –


81. சென்னை சாக்கைய புத்த சங்க சட்டதிட்டங்கள்

இதுவே சென்னைத் தலைமெய்ச் சபையோரின் அநுட்டானமாதலின் மற்றதேசங்களில் ஆரம்பிக்குங் கிளைச்சபையோரும் இதனை அநுசரித்து தேச வசதிக்கும், மக்கள் சுகத்துக்குத் தக்கவாறு திருத்தி சங்க காரியாதிகளை நடத்திக் கொள்ளும்படி இதனைப் பத்திரிகையில் வெளியிட்டுள்ளோம்.

சங்கத்தின் பெயர் - சென்னை சாக்கிய புத்த சங்கம்

சாக்கைய புத்தசங்கமென்னும் பெயர் வந்த காரணம் -மணிமேகலையின் பொருளறியாதும் சரித்திர ஆதாரமின்றியும் பகவனுக்கு முன்பு சில புத்தர்கள் இருந்தாகக் கூறுகின்றபடியால் அக்கூற்றிற்கு இடந்தராது சரித்திர ஆதரவாலும் சிலாசாஸனங்களின் ஆதரவாலுங் காணக்கூடிய சாக்கைய வம்மிஷ வரிசையிற் தோன்றிய புத்தரே ஆதிபுத்தரென்பதை விளக்குவான் வேண்டி இச்சங்கத்திற்கு சாக்கைய புத்த சங்கம் என்னும் பெயரை அளித்துள்ளோம்.

சங்கத்தின் நோக்கம் - சாதிபேதமில்லா பூர்வீக திராவிடாள் புத்த தன்மத்தைச் சார்ந்தே நாளதுவரையில் சாதிபேதம் இல்லாதிருந்தபோதினும் குலகுருவையும் குருவின் சரித்திரத்தையும் மறந்து தாய் தந்தையரை இழந்தப் பிள்ளைப்போல் நூதனமாகத் தோன்றியுள்ளப் பலமதங்களைத் தாவித்தாவி பிடித்து சம்பாதிக்கும் பொருளை பொய்க்குருக்களுக்கு அளித்து பஞ்சபாதகத் திற்கு உள்ளாவதுடன் நூதன சாதிபேதங்களை ஏற்படுத்திக்கொண்டுள்ள சத்துருக்களாலும் நிலைகுலைந்துப் பாழ்பட்டு வருகின்றபடியால் இவர்களது பூர்வ சரித்திரங்களையும், நீதிநெறி ஒழுக்கங்களையும் நன்கு விளக்கித் தெளிவுபெறச் செய்து அங்கங்கு சங்கங்கள் நிலைபெற்றவுடன் கல்வி சாலை களையும், கைத்தொழிற்சாலைகளையும், விவசாய சாலைகளையும், வியாபார சாலைகளையும் எற்படுத்தி சகலவிருத்தியிலும் முன்னேறச்செய்வதுடன் விவேகவிருத்திப் பெற்றோர் சங்கத்து சமணமுநிவர்களிடம் பொன்னாடை பெற்றுக் கரபோலேந்தி இராகத்துவேஷ மோகங்களை அகற்றி அன்பு ஈகை சாந்தத்தைப் பெருக்கி என்றும் அழியா நித்தியானந்த நிலையாம். நிருவாணத்தைப் பெறுவதற்கேயாம்.

சங்கத்தின் அங்கங்கள்

இச்சங்கத்திற்கு புத்ததன்மம் போதிக்கத்தக்க ஓர் சபாநாயகரும், உதவி சபாநாயகரும், ஓர் காரியதரிசியும், ஒரு பொக்கிஷாதிபரும், தன்ம விவகாரம் அறிந்த பனிரண்டு அங்கங்களும் இருத்தல் வேண்டும். இவர்கள் யாவரும் தன்மத்தைப் பரவச்செய்யும் தன்மகர்த்தாக்களாதலின் சத்திய தன்மத்தை ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் வேண்டும் என்பது கருத்து.

சங்கஞ் சேருங்கால் செய்ய வேண்டிய விதி

சங்கத்தோர் யாவரும் வந்து சேர்ந்தவுடன் சபாநாயகரெழுந்து சற்குருவை சிந்தித்து தன்னாலாயினும், சமணமுநிவரைக் கொண்டாயினும் பஞ்சசீல பிரதிக்கினை முடிந்தவுடன், நம்மெயாண்டு ரட்சித்துவரும் பிரிட்டிஷ் ஆட்சியாருக்கு நன்றியறிந்த வந்தன வாழ்த்தல் கூறி சங்கக்காரியாதிகளை நடத்தல் வேண்டும்.

சங்கத்திற் சேருவோர்

சங்கத்திற் சேரவிரும்புவோர் பஞ்சசீலம் பெற்றே சேரல் வேண்டும். அப்போதே பஞ்சபாதகங்களை அகற்றி நித்திய சீவனை அடைய வழியுண்டாகும்.

சங்கத்தின் செலவு

சங்கத்திற்கு வாடகை வீடெடுத்திருப்பினும் சங்கத்தின் செலவுகளுக்கும் பகவன் பிறந்த வைகாசிமாதம் பௌர்ணமியிலும் அவர் துறவடைந்த மாசிமத