பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 179

பௌர்ணமியிலும் அவர் நிருவாணம் அடைந்த பங்குனி மாத பௌர்ணமியிலும், அவர் பரிநிருவாணம் அடைந்து நித்தியநிலைப்பெற்ற மார்கழி பௌர்ணமியிலும் அறப்பள்ளியைத் தீப கிருதஞ்செய்து கண்டாமணி ஓசையால் ஏழைகளைத் தருவித்து அன்னதானம், வஸ்திரதானம், கனிவர்க்கதானஞ்செய்வதற்கும், பணவுதவி வேண்டியதாதலின் சங்கத்தோர் சக்திக்குத் தக்கவாறு விகிதமிட்டுப் பணத்தைச் சேர்த்துப் பொக்கிஷாதிபரிடம் அளித்து குறித்துள்ள பொக்கிஷச்சாலைக்கு அனுப்பிவிடல் வேண்டும்.

சங்கச் செலவு செய்யும் விவரம்

சேருந் தொகையை சபாநாயகரும், காரியதரிசியும், பொக்கிஷாதிபரும் கையெழுத்து வைத்து பொக்கிஷ சாலைக்கு அனுப்பவும் சங்கத்தின் ஏழுபெயர் கூடி முடிவு செய்தவாறு மேற்குறித்த மூவருங் கையெழுத்திட்டு பணத்தை எடுத்துக் கூட்டத்தோர் செய்துள்ள முடிவுபடி செலவு செய்யல் வேண்டும்.

மடவிஷயம்

அறப்பள்ளிகள் கட்டவேண்டிய விஷயங்களுக்கும், சமண முநிவர்களுக்கும் அன்னமளிக்கவேண்டிய விஷயங்களுக்கும் சமயம் நேர்ந்தவழியில் காரியாதிகளைக் கூட்டத்தோரைக் கொண்டு நடத்திக்கொள்ளல் வேண்டும். சங்கவிருத்தி சகலத்திற்கும் தலைமெய்ச் சபையினின்று வெளிவரும் “தமிழன்” பத்திரிகையே ஆதாரமாயுள்ள படியாக அன்னிய தேசங்களிலுள்ள சாக்கைய புத்தக் கிளைச்சங்கத்தோர்கள் யாவரும் அன்புகூர்ந்து வருடந்தோரும் தங்களாலியன்ற பொருளுதவிச்செய்து ஆதரித்தல் வேண்டும்.

சங்கத்தின் செயல்

சங்கமானது தன்மத்தையே ஆதாரமாகக்கொண்டு சீர்திருத்தத்தை நாடியுள்ளதால் சங்கத்தவர் ஒவ்வொருவரும் அந்தந்த கிராமங்களுக்குச்சென்று நீதிநெறிகளைப் போதித்து சன்மார்க்கத்தில் நிலைபெறச் செய்யல் வேண்டும்.

சங்கத்தோர் விரதம்

சங்கத்தோர் பஞ்சசீலத்தை உறுதிபடுத்திக் கொள்ளுவதற்கு மதியைக்கெடுக்கும் மதுவினையும், கொழுமெய்க் கொடுக்கும் மாமிஷத்தையும் இச்சிக்காது சங்கத்தோர் அகற்றவேண்டியதே அத்தியந்தச் செயலாகும்.

சாதிபேதமுள்ளோர் சங்கத்திற் சேர்தல்

சாதிபேதமுள்ளோர் சங்கத்திற் சேர விரும்புவார்களாயின் சமண முநிவர்களிடம் சீலம்பெற்று சாதிபேதமில்லாக் கூட்டத்தோர் மத்தியில் தங்கள் சாதிபேதத்தை அகற்றி சகல சம்பந்தங்களிலும் பொருந்திய வாழ்க்கை புரிதல் வேண்டும்.

தன்மம் பொதுவாயது

மக்களுள் ஏழைகளாயினும், கனவானாயினும், பிணியாளனாயினும், சுகதேகியாயினும், கற்றவனாயினும், கல்லாதவனாயினும் இத்தன்மம் பொதுவாதலின் யாதொரு பேதமுமின்றி சகலருக்கும் பொதுவாகப் போதித்தல் வேண்டும்.

விவாகக்கிரியை மரணக்கிரியை

சங்கத்தோருள் சீலம் பெற்றவர்களின் விவாகக்கிரியைகளையும், மரணக்கிரியைகளையும் சுருக்கமாகவும் அந்தஸ்தாகவும் வீண்செலவின்றியும் நடத்திக் கொள்ளுவதற்கு வேறு புத்தகங்கள் அனுப்பப்படும்.

கிளைசங்கத்தோர்களுக்கு மற்றும் வேண்டிய சங்கதிகளை எழுதித் தெரிந்துக் கொள்ளலாம்.

- 5:52, சூன் 5, 1912 -