பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 187

துக்கத்தையும், மூப்பின் துக்கத்தையும், மரண துக்கத்தையுங் கண்டு சகியாது இத்தகைய துக்கத்திற்கான எதிரடை சுகம் ஒன்றிருத்தல் வேண்டும். அதைக் கண்டடைவதே மானுஷீகதன்மமென்று சகல ராஜபோகங் களையும் விட்டுத் துறவடைந்து சகல பற்றுக்களும் அற்று பேரானந்தமுற்று அரசமரத்தடியில் நிருவாணம் பெற்றுக் காமனையுங் காலனையும் - வென்று பிறவியின் துக்கத்தையும், பிணியின் துக்கத்தையும், மூப்பின் துக்கத்தையும், மரண துக்கத்தையும் தான் செயித்து பரிநிருவாணமுற்று பரமானந்தத்தில் இருப்பதுடன் தனது சங்கத்தோர்கள் யாவருக்கும் அந்நான்கு வகை சத்திய தன்மங்களை ஊட்டி பிறப்பு, பிணி, மூப்பு சாக்காட்டினால் உண்டாந் துக்கங் களை ஜெயிக்கச் செய்ததுடன் நாளது வரையிலும் அவற்றை ஜெயிக்கத்தக்க சங்கங்களை நாட்டி சாதனைகளையும் அநுஷ்டிக்கும்படிச் செய்திருக்கின்றார்.

வீரசோழியம்
காமனை கடிந்தனை காலனை காய்ந்தனை
மணிமேகலை
காமற் கடந்த வாமன் பாதம்.

அத்தகையப் பெரியோனது ஞானவழியிற் செல்லாதவர்களும் அவரது சாதனத்தில் நில்லாதவர்களும் அனந்தம்பேருண்டு. அவற்றுள் ஞானவழியும் ஞானசாதனமுமில்லாதவர்கள் பாலிபாஷையையும் ஆங்கில பாஷையையுங் கற்றுக்கொண்டு மொழிபெயர்ப்பதாயின் ஞானசாதன ரகசியங்கள் விளங்காது தாங்களடைந்துவரும் பிறவியின் துக்கத்தையும், பிணியின் துக்கத்தையும், மூப்பின் துக்கத்தையும், மரண துக்கத்தையும் புத்தரென்னும் மெய்யரடைந் திருப்பாரென்று எண்ணி தங்கள் தங்கள் மனம் போனவாறு பன்றியினிறைச்சி யைத் தின்றாரென்றும், பேதி கண்டு தள்ளாடி நடந்து ஓரரசமரத்தடியில் இறந்தாரென்றும் புத்ததன் மத்திற்கு எதிரடையாய அபுத்ததன்மத்தை மொழிபெயர்த்து வரைந்து வைத்திருக்கின்றார்கள்.

ஆதலின் பூர்வத்தமிழொளியுள் வரைந்துள்ள ஞானசாதன சத்தியதன்மத் திற்கும், ஞானசாதனமில்லார் வரைந்துள்ள அசத்திய தன்மத்திற்கும் பொருந்தவே பொருந்தாது.

பௌத்த தன்மத்தைச் சார்ந்த அன்னியமதஸ்த்தர்கள் பொருள்படுத்தியுள்ள செய்யுட்பேதங்கள் யாதெனில், ஆதிவேதம் பயந்தோய் நீ என்றும், ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை என்றும் புத்தபிரானை சிந்தித்திருக்கும் செய்யுட்களின் பொருள் பேதமறியாது வேதமென்றால் பெரிய புத்தகமென்றும், ஒரு ஆட்சுமை யாயிருக்குமென்றும், வருணனை சிந்திப்பது பலவாயிரம் பாடலென்றும், இந்திரனை பூசிப்பது பலவாயிரம் பாடலென்றும், குபேரனை பூசிப்பது பலவாயிரம் பாடலென்றும் அவைகளே சுருதிகளாயிருந்தனவென்றும் மாறுபடக் கூறித்திரிகின்றார்கள்.

வேதவாக்கியமென்னும் மொழிகள் பேதவாக்கியமென்னும் மொழி களிலிருந்து பிரிந்தவைகளாகும். அதாவது பண்டி என்பது வண்டி என்றும், பரதனென்பது வரதனென்றும், பைராக்கி என்பது வைராக்கி என்றும், பங்காள மென்பது வங்காளமென்றும், பாலபருவமென்பது - வாலபருவமென்றும் திரிவதுபோல் பேதவாக்கியங்களென்பது வேதவாக்கியங்களெனத் திரிவதாகும்.

திருக்கலம்பகம்

ஓதாது லகிற் பொருளனைத்து முடனே யுணர்ந்தா னுணர்ந்தவற்றை
வேதாகமங்களா ரேழால் விரித்தான் விமலன் விரித்தளவே
கோதார் நெஞ்சத்தவர் தெளியக் கொண்டே கற்றோர் மும்மொழியை
பேதா, பேதம்; பேதமெனப் பிணங்கானின்றார் பிரமித்தே
சப்பபாபஸ்ஸ அகரணம் குசலஸ உபசம்பதா
சஸித்தபரியோதபனம் ஏதங் புத்தானஸாஸனங்

என்றும் ஆதிதேவனாம் புத்தபிரானால் போதித்துள்ள மூன்று அருமொழிகளையே திரிபேதவாக்கியங்களென்றும், திரிபீட வாக்கியங் களென்றும், திரிமந்திரவாக்கியங்களென்றும், திரிசுருதிவாக்கியங்களென்றும், ஆதி நூலென்றும், எழுதாக் கேள்வி என்றும், ஆரணமென்றும், ஒத்தென்றும்,