பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சாகையென்றும், சுருதி என்றும், இருக்கென்றும். ஏழு பேதமொழிகளாக வழங்கிவந்தார்கள்.

பின்கலை நிகண்டு

ஆதிநூ லெழுதாக்கேள்வி யாரண மொத்து சாகை
யேதமில் சுருதிதன்னோடிருக்கிவை யேழும்வேதம்
வேதநூற் பொருளினாமம் விதித்திடு ஞானபாகை
ஆதியாங் கருமபாகை அறுத்தபாகையு மாமென்ப
மெய்தெரி யாரணந்தான் வேத தின் ஞானபாகை
மையலுட் பொருளினாம மற்றுப நிடதமென்ப
வைதிக வேதமுற்ற மார்க்கமே பார்க்குங்காலை
பையமா லிருக்கினோடு பிடகமே யாதிவேதம்

நன்னூல் - பாயிரம்

மனவிருளிரிய மாண்பொருள் முழுவது, முநிவறனருளிய மூவரு மொழியுளுங்

அதன் காரணமோவென்னில்:- பாபஞ்செய்யாதிருங்கள், நன்மெய்க் கடைபிடியுங்கள், உங்கள் இதயத்தை சுத்திசெய்யுங்கோளென்னும் மூன்று வாக்கியங்களும் மூன்று வகையாயிருந்தபடியால் மூன்று பேதவாக்கியங் களென்றும், உலக சீர்த்திருத்தத்திற்கு இம்மூன்று வாக்கியங்களே ஆதிபீடமா யிருந்தபடியால் திரிபீடவாக்கியமென்றும், திரிபீடக வாக்கியமென்றும், சகலகலை நீதி நூல் ஒழுக்க ஆலோசனைகளுக்கும் மதியூக வாக்கியங்களா யிருந்தபடியால் திரிமந்திர வாக்கியங்களென்றும் பகவன் நிருவாணமுற்று உலகமக்களுக்கு நீதிவாக்கியம் போதிக்குங்கால் வரிவடிவமாம் அட்சரங்களில்லாமல் மகடபாஷையாம் பாலிபாஷை ஒலிவடிவிலிருந்தபடியால் போதித்த மும்மொழிகள் செவிகளில் கேழ்க்கவும் சிந்திக்கவும் தெளியவுமிருந்தது கண்டு 'சுருதி சிந்தனா பாவனா தரிசன'மென்னும் பாலிபாஷைப்படி திரிசுருதி வாக்கியங்களென்றும், என்றுமுண்டாய அந்தர் அங்கமாம் மெய்ப்பொருள் யாவராலும் வெளிப்படாது இறைவனால் ஓதிய எழுதாக் கேள்வியாம் முச்சுருதிவாக்கியத்தால் வெளிப்பட்டபடியால் ஆதிவேதமென்றும், முதனூலென்றும் இருக்கென்றும் வழங்கிவந்தார்கள்.

சீவக சிந்தாமணி

ஆதிவேதம் பயந்தோய் நீ யலர் பெய்மாரி யமர்ந்தோய் நீ
நீதி நெறியை யுணர்ந்தோய் நீ நிகரில் காட்சிக் கிரையோய் நீ

அருங்கலைச்செப்பு - ஆதிநூற் பத்து

திருமறை யென்னுந் திரிமொழியாகி அருங்கலையாயது நூல்
என்று முண்டாகி யிறையால் வெளிப்பட்டு நின்றது நூலென்றுணர்
மூவருமொழியால் மூவுலகளந்து தேவரு மாக்கிய நூல்
எல்லாமுடையான் குருவாகி வந்து முச் சொல்லாகி நின்றது நூல்
 மெய்பொருட்காட்டி யுயிர்கட் கறணாகி துக்கங் கெடுப்பது நூல்
பிடகமும் மொழியே பிறவியை யகற்றும் திடமுறு ஞான முந்நூல்
சாதுயர் நீக்கத் தவமுதலுய்யு மாதவன் கண்ட முன்னூல்
காநிலந்தோயா கடவுளராக்குங் கோனவனீய்ந்த நன்னூல்
பேதமும் மொழியே பீடமதாகி நாதமெய் கண்டது நூல்
பிறவியை வெல்லும் பெருவழி காட்டும் அறன் மொழியாய முந்நூல்

உலக சீர்திருத்த மும்மணிகளாகும் பாபஞ் செய்யாதிருங்கோளென்னும் மொழியைக் கர்ம்மபாகையாகவும், நன்மெய்க் கடைபிடியுங்கோ ளென்னுமொழியை அர்த்தபாகையாகவும், இதயத்தை சுத்தி செய்யுங்கோ ளென்னும் மொழியை ஞானபாகையாகவும் பிரித்து, பாபஞ்செய்யாதிருங் கோளென்னும் மெய்யறநிலைக்கு இருக்கென்றும், நன்மைக்கடை பிடியுங்கோளென்னும் உட்பொருணிலைக்கு யசுரென்றும், இதயத்தை சுத்தி செய்யுங்கோளென்னும் பேரின்ப நிலைக்கு சாமமென்றும் பெயர்களை அளித்து திரிபேத வாக்கியங்களென ஆதியில் வழங்கிவந்தபோது சுருதியாயதால் மக்கள் மனதில் பதியாது சிந்திப்பதற்கும் பாவிப்பதற்கும் மறைமொழியாயிருந்தபடியால் அருங்கலை நாயகனாம் அறவாழியான் கருணைகூர்ந்து வடமொழி என்னும் சகடபாஷையையும், தென்மொழி என்னும் திராவிட பாஷையையும் வரிவடிவால் இயற்றி, அட்சரங்களை உண்டு செய்து