பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192/ அயோத்திதாசர் சிந்தனைகள்

வர்களுக்கும் என்றுமழியா நிதிகளாகும் பதுமநிதி, தன்ம நிதி, சங்கநிதி மூன்றையுந் திரட்டி "பூர்வத்தமிழொளியாம் புத்தரது ஆதிவேத" மென வெளியிட்டிருக்கின்றோம்.

இவ்வேதப்போதகனும் வேதியனுமான விண்ணவர்க்கரசனாம் புத்த பிரானையே ஆதிதெய்வமென்றும், ஆதி கடவுளென்றும், ஆதிபகவனென்றும், ஆதிசிவனென்றும் ஆதியீசனென்றும், ஆதிநாதனென்றும் ஆதிவேதனென்றும் ஆயிர நாமங்களால் வந்தித்தும் சிந்தித்தும் வந்திருப்பதை சகல பௌத்த நூற்களிலும் வரைந்திருக்கின்றார்கள். அவைகளின் அந்தரார்த்தம் அறியாதோர் அப்பெயர்களை தங்கள் தங்கள் மனம்போனவாறு மாறுகொள ஏற்றுக் கொண்டதுமன்றி அவ்வாயிர நாமங்களை இயற்றி சிந்தித்துவரும் பௌத்தர்கள் கடவுளரில்லை என்று கூறுவதாகப் பட்டாங்கடித்து நாமங்களின் மொழிபுரட்டை உண்டு செய்துவருகின்றார்கள். அத்தகையோர் புறட்டிற்கு நூலாதாரம் ஏதுமில்லாதபடியால் அவர்கள் கூறுங் கூற்றை மெய்யென நம்பி மோசம்போகாமலும் தங்கள் தங்கள் மனங்கொண்டவாறு தாங்களே சிருஷ்டித்துக்கொள்ளும் கடவுளர்களை நம்பாமலும், மாதா பிதா குருவையே தெய்வமென சிந்தித்துவருவது பௌத்தர்களின் பூரணக் கொள்கையாதலின் இதனது பெரும்பலனை தமிழொளியில் நன்கு தெரிந்துக்கொள்ளுவதுடன் புத்ததன்ம நான்கு வாய்மெயின் செயல்கள் சகல மக்களுக்கும் நன்குவிளங்காது அவர் பரிநிருவாணமுற்ற ஆயிரவருடங்களுக்கு உட்படவே அறுசமயங்களெனக் காலத்திற்குக்காலம் வேறாகி உபாசக தன்மமட்டிலும் நிலைத்து தென்புலத்தார் தன்மம் நிலைகுலைந்து நாளதுவரையில் மாறுபட்டிருக்கின்றது. அதனால் மெய்ப்பொருளுண்டென்போர் சிலரும், மெய்ப்பொருள் இல்லை என்போர் சிலருமாக மலைவுற்றிருக்கின்றார்கள். அவைகள் யாவையும் இவ்வாதிவேதத்தால் அறிந்துக் கொள்ளலாம்.

க. அயோத்திதாஸ பண்டிதர்

சரித்திர அட்டவணை

1.சித்தார்த்தர் உற்பவக் காதை
2.சித்தார்த்தர் திருமணக் காதை
3.சித்தார்த்தர் வாய்மெ விசாரிணைக் காதை
4.சித்தார்த்தர் மகாராஜ துறவு காதை
5.சித்தார்த்தர் பஞ்சவிந்தியத்தை வென்று இந்திரரும் மெய்கண்டு புத்தருமாய காதை
6.ஆதிவேத வாக்கிய விவரக் காதை சதுர் சத்தியக் காதை
7.சங்கங்களின் ஸ்தாபனக் காதை
8.மானைக் காத்து மழுவேந்திய காதை
9.சதுரக்கிரிக் காதை
10.தந்தைக்கு மைந்தன் குருவாகிய காதை
11.புரத்துவாசருக்கு வியாதிக்குத்தக்க ஓடதிகளோதிய காதை
12.விசாகா காதை
13.குருஷேத்திர காதை
14.தரும சக்கிர பிரவர்த்தன காதை
15.கோசல நாட்டரசன் காதை
16.கலக விவாத காதை
17.தந்தையின் இரண்டாமுறை தரிசன காதை
18.சிகாளா விசாரிணைக் காதை
19.மத்திம பதிபதா காதை
20.சதுர் பரமார்த்த காதை