பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 193


21.கன்ம காதை
22. புக்கசாதி துறவு பூண்ட காதை
23. பிருமன் தரிசின காதை
24. மகா மங்கள காதை உபதேச காதை
25. சுகவர்க்க காதை
26. பரிநிருவாண காதை
27. ஆதிவேத விளக்கம்.

1. சித்தார்த்தர் உற்பவக் காதை
புத்த மாலிகா

யோவடதங் பவரோ மனு ஜேசு / சாக்யேமுநி பகவா கதகிச்சோ
பாரகதோ பலவிரிய ஸமங்கி / தங்ஜுகதங் ஸரணத்த முபேமி.

(இதன் பொருள்) மநுக்களுட் பெருமெயும், அருமெயுமான வாசான் ஆதிபகவன் சாக்கைய முநிவரேயாவர். அவரே சகலருக்கும் குருவாக விளங்கி உலகில் முடிக்கவேண்டியதை முடித்து கரையேறி நிருவாணமடைந்த மங்களகர பெரியோன் புத்தபிரானை சரணாகதியடைந்து, அவரது சத்தியதன்மத்தை விவரிக்கின்றோம்.

>பொறையதே யுலகிற் பொருளெனத் தோன்றி
போன்ற சத்துவமதே முதலா
மிறையென வகுத்து யினிதரசாளு
மின்பமு மகற்றி பற்றற்று
பிறையெனுங் கலைநூற் பிரமுகர்க் கூட்டி
பின்னுமுள்ளொளியதா முண்மெய்
மறையவனென்ன மதமெலாம் போற்றும்
வள்ளலை யுள்ளம துணர்வாம்.

அகஸ்தியர் பரிபாஷை

அங்கிடத்தில் வந்தது தான் மண்ணேயாச்சு, அப்பூதத் தொருமுளையங் குதிக்கலாச்சு,
பங்குபண்ணி அம்முளையே இலைபூவாச்சுப், பருமலரே காய்பழமாய் வித்து மாச்சு
திங்களெனும் வித்ததுவே ரசமு மாச்சு, தெளிந்த ரசந் தானுருண்டு உதிரமாச்சு,
சங்கையில்லா உடலாச்சு உயிருமாச்சு, தன்னுடலில் சீவசெந்துக் கோடி யாச்சே

எக்காலுமுள்ள பூதபௌதிகங்களினின்று சூரியன் தோன்றி ஆதிவாரம் உண்டாகி, சந்திரன் தோன்றி சோமவாரம் உண்டாகி, பூமி தோன்றி மங்களவாரம் உண்டாகி, நீர் தோன்றி புதவாரமுண்டாகி, காற்று தோன்றி குருவாரம் உண்டாகி, ஆகாய விரிவாகும் வெளிதோன்றி சுக்கிரவாரம் உண்டாகி, இருள் தோன்றி சனிவாரம் உண்டாகி வாரங் கிழமையென்னும் நற்பல தோற்ற உலகமாய் விரிவதியல்பாம்.

இத்தகைய விரிவும் மறைவுமாய உலகில் தோற்றமாகும் நான்கு பூதங்களின் நல்லேதுவின் நிகழ்ச்சியால் என்றும் நிலையாயுள்ள நிலமென்னும் பூமியின்கண் நீர் தோய்ந்து விருட்சங்களென்னும் தாபரங்களாம் முதற்பிறப்பு தோன்றி, விருட்சங்களினின்று புழுக்கீடாதிகளென்னும் ஊர்வனங்களாம் இரண்டாம் பிறப்புத் தோன்றி, ஊர்வனங்களினின்று நீர்வாழ்வனங்களென்னும் மட்சங்களாகும் மூன்றாம் பிறப்புத் தோன்றி, மட்சங்களினின்று பட்சிகளென் னும் பறவைகளாகும் நான்காம் பிறப்புத்தோன்றி, பறவைகளினின்று விலங்குகளென்னும் மிருகங்களாகும் ஐந்தாம் பிறப்புத் தோன்றி, மிருகங்களில் அஃறிணையாகும் வானரரென்னுங் குரங்குகளினது நல்லேதுவினிகழ்ச்சியால் வாலற்ற நரர்களாம் மக்களில் மானமுண்டாகி மானிடரென்னும் ஆறாம்பிறப்புத் தோற்றமாம் உலகத்தில் தோன்றும் பொருட்களில் இதுவே ஆறாவது தோற்றமாகி, தோற்றமாம் பிறப்புக்கேதுவாய வித்து, வியர்வை, முட்டை, கருப்பை என்னும் நான்குவகை யோனிகளின் நல்லேதுவினிகழ்ச்சியால் தாவரம், ஊர்வனம், நீர்வாழ்வனம், பட்சி, மிருகம், மானிடரென்னும் அறுவகைத் தோற்றங்கள் தோன்றி க்ஷணத்திற்கு க்ஷணம் மாறுகொளல் இயல்பாம்.