பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அத்தகைய மாறுள தோற்றத்துள் வாலற்ற நரரென்னும் மானிட வகுப்பில் பேமானிகளென்னும் அஞ்ஞானமுற்று தாழ்ந்தபிறவிக்கு ஏகாது மானிகளாகும் அற்ப விவேக முதிர்ச்சியில் விட்டகுறையால் நெடுங்காலத்திற்குக்காலம் அனந்தம் பிறப்பிற்றோன்றி அறுவகை சங்கத்தவரானார்கள்.

முதலாவது சங்கம் : இறப்பும், பிறப்பும், உயர்வும், தாழ்வும், நன்மெயும், தீமெயும் பஞ்சபூதங்களால் உண்டானபடியால் பஞ்சபூதங்களை வணங்கு வோமென்னும் ஓர் வகுப்பினர் தோன்றினார்கள்.

இரண்டாவது சங்கம் : இறந்தபிறகு மனிதன் மிருகமாகவும், மிருகம் மனிதனாகவும், பிறக்கமாட்டான். மனிதன் மனிதனாகவும், மிருகம் மிருகமாகவும் பிறக்கும். ஆதலின் ஒன்றை வணங்குவதால் பலனுமில்லை , வணங்காமலிருப்பதினால் கெடுதியுமில்லை என்னும் இரண்டாவது கூட்டத்தார் தோன்றினார்கள்.

மூன்றாவது சங்கம் : மனிதனுக்கு யாதொரு சுகமுங் கிடையாது. பிறப்பது ஆதி, இறப்பது அந்தம். இறந்தப்பின் சகலமும் சூன்யமாதலால் விழித்திருப்பவன் சூனியத்தை விசாரிப்பதில் யாதொரு சுகமுங் கிடையாதென மூன்றாவது வகுப்பார் தோன்றினார்கள்.

நான்காவது சங்கம் : சீவர்களுக்கு ஆதியுங் கிடையாது, அந்தமுங் கிடையாது. நன்மெயுங் கிடையாது, தீமெயுங் கிடையாது. எல்லாந் தானே ஏற்றுக் கொள்ளுவதால் யாவுந் தற்செயலென நான்காவது வகுப்பார் தோன்றினார்கள்.

ஐந்தாவது சங்கம் : புசிப்பை விரும்பாதவனும், தாகத்தை அடக்குவோனும், அக்கினியின் கொதிப்பை சகிப்பவனும், சூரியன் வெப்பத்தைத் தாங்குகிறவனும் எக்காலும் சுகமடைவான். இவைகளைத் தாங்காதவன் சுகமடைய மாட்டானென ஐந்தாவது வகுப்பார் தோன்றினார்கள்.

ஆறாவது சங்கம் : கிழமை வாரமென்னும் பலன் தரும் உலகில் முதனாளாகும் சூரியனும், இரண்டானாளாகுஞ் சந்திரனும், மூன்றானாளாகும் செவ்வாயும், நான்கானாளாகும் புதனும், ஐந்தானாளாகும் வியாழமும், ஆறானாளாகும் வெள்ளியும், ஏழானாளாகும் சனியும் ஆகிய சூரியன், சந்திரன், பூமி, நீர், காற்று, வெளி, இருள் ஏழுவாரத்தின் சுழலையும், ஏழுவாரத்துள் தோற்றும் பதினைந்து திதிகளின் சுழலையும், பதினைந்து திதிகளின் வடனோக்கு தென்னோக்குகளால் மாறும் பூரண சந்திரன் அபூரண சந்திரனென்னும் இரு பட்சங்களையும், இருபட்சங்களாகும் நாள் முப்பதில் தோன்றும் முக்கிய நட்சத்திரங்கள் இருபத்தியேழும், இருபத்தியேழு நட்சத்திரங்களில் இரண்டேகால் நட்சத்திர பீடங்கொண்ட இராசி பனிரண்டையும் அதிற் றங்கி யாடும் வலவோட்டுக் கிரகங்கள் ஏழும், இடவோட்டுக் கிரகங்கள் இரண்டும் ஆக ஒன்பதுக் கிரகங்களையும் மழைகாலம், வெய்யல்காலம், பனிகாலமாகும் முக்காலங்களையும் சோதிகளின் இடங்களைக்கொண்டே சோதித்து கணிதங்களில் நிறுத்தி கணிதமாகும் பெருக்கினாலும், குறிக்கினாலும் உண்டாகும் குணிப்பால் மழையின் திக்குகளையும், காலங்களையும்; காற்றின் திக்குகளையும், அதன் காலங்களையும் உலகத்தாருக்கு விளக்கி தேச சுபாசுபங்களைப் போதித்ததுமன்றி உலகில் ஆறாவது தோற்றமான மநுக்களின் பிண்டோற்பவக் காலவரையில் குழவியின் சிரவுதயம் எந்த விராசியில் உதித்ததோ அதையே லக்கிடமாகவும், ஒன்பது கிரகங்களின் நிலைகளைக்கொண்டு குழவிக்கு நேரிட்ட செல்கால பலன்களையும், வருங்கால பலன்களையும் திடமாகக்கூறும் வல்லபத்தினால் சாக்கையனென்னுங் காரணப்பெயரைப் பெற்றான். அவன் தாய் தந்தையரால் கொடுத்தப் பெயர் (கலியன்) ஈகையிலுங் கணிதத்திலும் பேர்பெற்றிருந்தது மன்றி வாகுவல்லயமென்னும் ஆயுதங்களைக்கொண்டு புஜபலபராக்கிரமத்தினால் சகல அரசர்களையுஞ் செயித்து வட அயோத்தியாபுரி என்னும் மகததேசத்திற்குத் தலைத்தார் வேந்தனென்னும் சக்கிரவர்த்தியாக விளங்கினபடியால், வாகுவென்னும்