பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயம் / 11

அவருடைய போதகங்களை வழி காட்டிகளாய்த் துணைக் கொள்ளுகிறேன். அவரைப் பின்பற்றிய சங்கத்தவர்களை வழிகாட்டிகளாய்த் துணைக்கொள்ளுகிறேன்.

2-வது முறை - புத்தசுவாமியை
2-வது அவரைப் பின்பற்றிய சங்கத்தவர்களை
2-வது அவருடைய போதகங்களை
3-வது முறை - புத்தசுவாமியை
3-வது முறை - அவருடைய போதகங்களை
3-வது முறை - அவரைப்பின் பற்றிய சங்கத்தவர்களை

1. யாதாமொரு சீவபிராணியினுயிரைக் கொலை செய்வதில்லை என்று பிரதிக்கினை பண்ணுகிறேன்.
2. பிறர் பொருளைக் களவாய் கவர்தல் செய்வதில்லை என்று வாக்கு தத்தம் பண்ணுகிறேன்.
3. பரஸ்திரீகமனங் கொள்ளுவதில்லை என்று பிரதிக்கினை பண்ணுகிறேன்.
4. பொய் சொல்லுவதில்லை என்று வாக்கு தத்தம் பண்ணுகிறேன்.
5. மதுபானம் அருந்துதலில்லை என்று உறுதி வாக்களிக்கிறேன்.

விசேஷக்குறிப்பு

உலகெங்கும் புத்தரென்று வழங்கும் நமது குலகுருவாகிய ஒப்பிலா அப்பன் சகல தேசங்களிலுஞ் சென்று ஞான நீதிகளைப் போதித்து மனிதன் கடைத்தேறும்படியான பேரின்பானுபவத்தை அருளிச்செய்தார் என்பவற்றிற்கு ஆதரவென்ன என்றால் நெடுங்காலம் அந்தந்த தேசங்களில் புதைப்பட்டிருந்து தற்காலம் வெளிக்குக் கண்டெடுக்கப்படும் சாக்கைய முநிவர் உருவத்தைப் போன்ற சிலைகளும் அங்கங்கு தோன்றியிருக்கும் மதஸ்தர்களின் தொகைகளையும் புத்தமதஸ்தர் தொகைகளையும் கண்டு பார்க்குங்கால் புத்த மதத்தைச் சார்ந்த ஒரு வகுப்பினர் மட்டிலும் உலகத்திலுள்ள ஜனத்தொகையில் அரையே அரிக்கால் பாகமிருக்கும் காட்சியும் போது மானசாட்சியாம்.

அந்தந்த மதஸ்தர்கள் அநுசரித்துவரும் ஞானவாக்கியங்களும் நீதி வாக்கியங்களும் புத்தமதத்திலிருந்து கிரகிக்கப்பெற்றதென்று கண்டு தெளிந்தவர்கள் யாரென்றால் தங்கள் அறிவை மென்மேலும் விருத்தி செய்து நீராவி மரக்கலம், புகைரதம், மின்சாரத்தந்தி, மின்சாரரதம் முதலியவைகளைக் கண்டுபிடித்து உலோகோபகாரஞ் செய்துவரும் மேன்மக்களும் உயர்ந்த சாதியோருமாகிய ஆங்கிலேயர்களும் அமேரிக்கர்களுமாம்.

நமோபுத்தா புத்தரென்னும் இரவு பகலற்ற வொளி
ஆதிபகவன்துதி
சாக்கைய முநிவர் சரித்திர சுருக்கம்

அங்கண் வானத் தவரரசரும்
வெங்களியானை வேல்வேந்தரும்
வடிவார் கூந்தன் மங்கையருங்
கடி மல ரேந்திக் கதழ்ந்திறைஞ்சச்
சிங்கஞ் சுமந்த மணியணை மிசைக்
கொங்கவி ரசோகின் குளிர் நிழற் கீழச்
செழு நீர்ப்பவளத் திரள் காம்பின்
முழுமதியுரையு முக்குடை நீழல்
வெங்கண் வினைப்பகை விளி வெய்தப்
பொன்புனை நெடு மதில் புடைவளைப்ப
அனந்த சதுட்டய மவை யெய்த
நனந்தலை யுலகுட னவை நீங்க
மந்த மாருத மருங்கசைப்ப
அந்தர துந்துமி நின்றியம்ப
இலங்கு சாமரை யெழுந்தலமர
நலங்கிளா பூமழை நனிசொரிதர - இனிதிருந்
தருனெறி நடாத்திய வாதிதன்
திருவடி பரவுதுஞ் சித்தி பெறற் பொருட்டே

.

-- யா - உ - 9.