பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 201

முகமலர்ச்சியுடன் அரசே, உமக்கோர் ஆண்குழந்தை பிறக்கும் அது யானையின் உரத்தைப்பெற்று ஞானசூரியன்போற் பிரகாசிக்குமென்று சொல்லிப் போய்விட்டார். அதே சாக்கையர் அசோதரை பிறந்த காலக்கணிதங்களை வகுத்து இவ்வற்புதக்காட்சிகளையுங் குறிப்பிட்டிருக்கின்றார். ஆதலின் நாமனைவரும் மங்கல முரசுடன் மலையரசன் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று நித்திய சகுனங்களைக் காண்பதுவே காட்சியென்றான்.

உடனே அரச வகுப்பார் பதினெண்மரும் சக்கிரவர்த்தித் திருமகனும் மங்கலமுரசம் அதிர்ப்ப மணக்கோலத்துடன் மலையரசன் தங்கியுள்ள இடத்திற் சென்று கலந்தார்கள்.

அப்போது அவ்விடமிருந்தவர்களிற் சிலர் பலதானியங்களையும் வருத்து வைத்துக்கொண்டிருந்ததுடன் பட்டமரத்திற்கு பதிலாய்ப் பூணிலா உலக்கையை யுங் கொண்டுவந்து சித்தார்த்தி கரத்தில் அளித்து விதைகளை பூமியில் விதைப்பதுடன் இப்பட்டமரமாகும் உலக்கைகோலையும் பூமியில் நாட்டுங்கோ ளென்று வேண்டினார்கள்.

வாலறிஞன் அவற்றைக் கரத்தில் ஏந்தி பூமியைத் திருத்தி விதைகளை விதைத்து உலக்கையையும் பூமியில் ஊன்றினார்.

பதின் கடிகைபோதுள் பலதானியங்களும் முளை தோன்றியதுடன் உலக்கையும் கல்லாலிலைக் கொழுந்திட்டு வளர்ந்தது.

மணிமேகலை

அகமெய்யருளிய அறவாழியானெம். பகவன தாணையிற் பன் மரம் பூர்க்கும்.

பாகுபலி நாயனார் ஏட்டுப்பிரிதி. யாப்பருங்கலைக்காரிகை சூத்திரம்

வண்டு லக்கை பூந்தார் வளங்கெழு செந்துளிர் சேய்வடி வேபோலத்,
தண்டளிர் பூம்பிண்டித் தழையோங்க மாமணமுன் மணந்தோன் யாரே,
தண்டளிர் பூம்பிண்டி தழையோங்க வந்து நம்,
பண்டைவினைகழற்றும் பாங்குபல மொழிந்து படந்தோனன்றோ.
வேதவாய் மேன் மகனும் வேந்தன் மடமகளும், நீதியாற் செர்ந்து நிகழ்ந்த
நெடுங்குலம்போல், ஆதிசால்பாவும் அரசர் உயர்பாவும்,
ஒதியவாறோத வருட்பாவாய் ஓங்கிற்றே.

சீவகசிந்தாமணி நாமக ளிலம்பகம்

தொத்தணிபிண்டி தொலைந்தற வீழ்ந்ததெண்,
முத்தணிமாலை முடிக்கிடனாக ஒத்ததன் றாள் வழியே முளையோங்குபு,
வைத்தது போல வளர்ந்ததை அன்றே

அதைக்கண்ட அரசர்களும் பெரியோர்களும் ஆட்சரியங்கொண்டு நிற்குங்கால் மணமகன் மணாளியின் கரத்தைப்பற்றி இரதமூர்ந்து நூதன மாளிகையைச் சேர்ந்தார்.

அவ்விடம் வந்திருந்த பெரியோர்கள் வருத்தவித்து முளைத்ததைப் பாலி என்றும், உலக்கைக் கொழுந்துவிட்டதைப் பிண்டி என்றும் பெயரளித்து,

பதினாறு வயதிற்கு மேற்பட்டக் குமரனும், பனிரண்டு வயதிற்கு மேற்பட்ட குமரியும் சுகவாழ்க்கையுற்றதை அநுசரித்து பின் சந்ததியாரும் பதினாறு வயதுக்கு மேற்பட்ட குமரர்களுக்கும், பனிரண்டு வயதிற்கு மேற்பட்ட குமரிகளுக்கும் விவாகம் நியமித்து நவதானிய முளைகள் எழும்பும் பாலிசோதனையோடு உலக்கையில் கல்லாலிலைக்கட்டி மங்கலபீடம் வகுத்துவந்தார்கள்.

முன்கலை திவாகரம்

பதினாறாட்டைக்கு மரனும் விதிவழி,
பன்னீராட்டைக் குமரியு மாகி,
ஒத்த அன்பினும் ஒத்த நலத்தினுங்,
கற்பகப் பிண்டி நற்பலனுதவ,
ஆகிய செய்யுந் தவத்தினும் அவ்வழி,
போக நுகர்வது போகபூமி.

அரசபுத்திரனும் அசோதரையும் முன்னரண்மனையை விடுத்து தங்களுக்கு என்று அமைத்திருக்கும் சிங்காரமண்டபத்தை நாடி இரும்பு மதில்வாயில், வெள்ளி மதில்வாயில், பொன்மதில்வாயில் மூன்றையுங் கடந்து மரகத மண்டபஞ்சேர்ந்து பளிக்கரை சப்பிரமஞ்சத்தில் சுகித்திருந்தார்கள்.