பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212 / அயோத்திதாசர் சிந்தனைகள்


பெரியோர்களே,

ஒவ்வொரு சீவராசிகளின் உதயங்களுக்கு வேறு வேறு இராசிகளும், வேறுவேறு கிரகங்களும் மாறுகொண்டு தேருருளைப்போல் சுழன்று வருகிற படியால் முன் செயல்களே ஏதுக்களாகவும் தோற்றங்களே நிகழ்ச்சிகளாகவும் வருவது விளங்கவில்லையா என்றார்.

அருங்கலைச்செப்பு - ஆறாவது சங்கவியல்

நவக்கோள் கூடி நடத்து மாண்பு / உவப்பி நிகழ்ச்சியது
ஆயக் கோட்க ளாட்ட மதுவே / காய நிகழ்ச்சி யெனல்
நன்றுந் தீதும் நவக்கோளாட்ட / மென்று முணர்வ தது
தோற்ற வொடுக்கம் யாவுங் கோட்களாற்ற செயலென் றுணர்.

ஏதுக்குத் தக்க நிகழ்ச்சியென்பது செயலுக்குத்தக்கத் தோற்றமென்று விளக்கிய இவர் கலிவாகுச் சக்கிரவர்த்தியின் செயலே சித்தார்த்திச் சக்கிரவர்த்தி என்றுரு கொண்டனரோ என்னும் பீதியால் அரசே, நமது மூதாதை கலியுலகக் கணிதத்தில் தோற்றங்கண்டு மொழிந்து வரும் யாங்கள் செயலைக்கண்டு எவ்வகையில் கவனிப்போமென்றார்கள்.

பெரியோர்களே, முன் செயல்களைக் கொண்டு பின்செயல்கள் தோற்றுகிறபடியால் உங்கள் முன்செயலைக்கொண்டு உங்கள் தோற்றத்தையும் பலனையுங் கணியுங்கோள். அப்பலன் முன் சுகச்செயலைப் பற்றி வருமாயின் பூர்வபுண்ணியமாம் சுபபலனும், அசுகச்செயல்பற்றி வருமாயின் பூர்வ பாவமாம் அசுபபலனும் அடைவீர்களென்றோதி கலியுலகாதி சுகம் ஒழுக்கமே முக்கியமென்று கணித்து எண்ணைப் பூர்த்தி செய்யுங்கோள் என்றாக்கியாபித்து அவரவர்கள் இல்லங்களுக்கு அனுப்பிவிட்டார்.

சித்தாத்தி சிறுவரிடம் சாக்காக்கள் விடைபெற்று தங்கடங்கள் இல்லங்களில் சேர்ந்து சக்கிரவர்த்தித்திருமகனால் போதித்த ஒழுக்கத்தைப் பின்பற்றுவதால் உழ்வினையற்று ஜெனனத்திற் புண்ணியபலன் தோற்றமுணர்ந்து ஒவ்வொருவர் கணிதக் குறிப்பையும் ஒலிவடிவ பாலிபாஷையில் ‘ஜநநீஜென்ம சௌக்கியானாம், வத்தநீ குலசம்பதாம், பதவி பூர்வபுண்யானா’ மென சுருதியாக ஏதுக்குத்தக்க நிகழ்ச்சியாகும் பூர்வச்செயலுக்குத் தக்க தோற்றங்களை விளக்கி ஒழுக்கத்தை விருத்திசெய்து கலிவாகுவின் கணிதத்தைப் பரவச்செய்து வந்தார்கள்.

யாப்பருங்கலைக்காரிகை

ஆர் கலியுலகத்து மக்கட்கெல்லாம் / ஓதலினன்றே ஒழுக்கமுடமெய்.

சூளாமணி - ஒழுக்க விவரம்

ஆதிநாளரசர் தங்களருங் குலமைந்து மாக்கி
யோதநீருலகின் மிக்க ஒழுக்கந் தொழிலுந்தோற்றித்
தீதுதீர்ந்திருந்த பெம்மான்றிருவடி சாரச்சென்று
நீதி நூற்றுலகங்காத்து நிலந்திரு மலரநின்றான்.

தம்மராசனோ ஆறு சங்கத்தோர்களையுந் தருவித்து பிணி, மூப்புச் சாக்காடென்னும் நான்கு வாய்மெய் விசாரிணையினின்றும் சங்கை விளங்காமல் புசிப்பை விரும்பாமலும், சயனங் கருதாமலும், நித்திரை பிடியாமலும், இடைவிடா விசாரிணையிலிருப்பதை உணர்ந்த வேவுகர்கள் அரசனுக்குத் தெரிவிக்க அரசனும் பெருங்கவலை உடையவனாய் பிள்ளை சித்திரமாளிகையை விட்டு வெளியேறா வண்ணம் வேவுகர்களுக்கு அறிக்கையிட்டு மிக்கப் பாதுகாப்பில் வைத்திருந்தான்.

ஓர் நாள் இரவு அரசபுத்திரனுடன் சயனித்திருந்த அசோதரைத் திடுக்கிட்டு எழுந்து கணவனையுங் குழவியையுந் தழுவி என் பிராணநாயகா நீவிர் எங்கள் இருவரையும் நீங்கி வெளியேறியதுபோலும், குழவியும் யானும் சயனத்துடன் பூமியில் இரங்குவது போலும் சொர்பனங்கண்டேன் இதன் பயன் யாதோ அறியேனென்று அலறினாள்.

அதை உணர்ந்த சித்தார்த்தர் அசோதரையைத் தழுவி, பெண்ணே , நீ யாதுக்கு அஞ்சுகின்றாய் அரசபத்தினிக்குள் சிறந்தவளாக விளங்குவாய் உன் அரணிநிலைக்கும் ஓர் தாழ்ச்சியுண்டாகும். யான்கொண்ட நோக்க நிலைக்கு