பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214 / அயோத்திதாசர் சிந்தனைகள்


வீரசோழியம்

அன்னாயறங்கோனலங்கிளர் சேட்சென்னி,
ஒன்னாருடைபுறம் போல நலங்கவர்ந்து,
துன்னான் துறந்துவிடல்.
பாவாயறங்கோனலங்கிளர் சேட்சென்னி,
மேவாருடைபுறம் போல நலங்கவர்ந்து,
காவான் துறந்து விடல்.

காசிக்கலம்பகம்

பாசத்தளையறுத்துப் பாவக்கடல் கலக்கி, / நேசத்தளைப்பட்டு நிற்குமே - மாசற்ற,
காரார்வரையீன்ற கன்னிப்பிடியளித்த, / ஓரனை வந்தெனுளத்து.

அரசன் அவைகளைக்கண்டவுடன் திகைத்து தான் கொண்ட எண்ணங்கள் யாவும் நிறைவேறாமல் சாக்கையர் கணிதம் போல் செய்கையின் தொடர்பாகும் விட்டகுறை எத்தன்மைத்தோவென்றேங்கி பாலபருவங்கடந்து குமர பருவத்துள் உன் சக்கிரவர்த்தி பீடத்தை துறந்தபோதிலும் உன் மனைவி பாசத்தை எவ்வகையில் துறந்தாய். உன் மனைவி பாசத்தைத் துறந்தபோதிலும் உன் மகவின் பாசத்தை எவ்வகையிற் துறந்தாய் மகனே என்று அலறி மறுபடியுந்தேறி தன் பௌத்திரனைக் கொண்டுவரச் செய்து வாரியெடுத்து முத்தமிட்டு குழந்தாய், உன் தந்தை சித்தார்த்தர் சித்திர மாளிகையில் இருக்கும் வரையில் தேசம் முழுவதும் பிரகாசித்திருந்தது. நீங்கியவுடன் இருளடைந்தபடியால் இனி உன் பெயர் இராகுலன் .இராகுலனென்றோதி பட்டத்திற்கு பௌத்திரனிருக்கின்றானென்னுந் திடத்தால் கவலையை மாற்றி இராஜகீய சிந்தையிலிருந்தான்.

விடியர்கால வெள்ளி தோன்றியும் பட்சிகள் பாடும் நாதமெழாமலும், பசுக்களின் சப்தம் பிறவாமலும், தோழிகளின் கீதம் எழாமலும், மாளிகையுள் அசைவற்று இருளடைந்திருப்பதை அறிந்த அசோதரை அலரி எழுந்து கணவனைக் காணாமல் திகைக்குங்கால் வேவுகன் ஓடிவந்து அரணியை வணங்கி சக்கிரவர்த்தியார் பௌத்திரனைக் கொண்டுவரும்படியாக்கியாபித்தாரென்றான்.

அசோதரைத் தன்னருமந்தக் குழவியை அவன் கரத்தில் அளித்துக் காரணம் யாதென உசாவினாள். மன்னுபுத்திரன் மாளிகையை விடுத்து மும்மதிலையுந் தவிர்த்து வேற்று நாடடைந்து தன் கைவாளினால்சிரோரோ மங்களை அறுத்தெரிந்து விட்டுச் சென்ற சங்கதிகள் யாவையும் விளக்கிப்போய் விட்ட பின்னர் அரணி திகைத்து வாட்டமுற்று தன் சிரோமுடியையும் கத்தரித்துக் கொண்டு சருவாலங்கிருதங்களையும் தவிர்த்து சுத்த புசிப்பையும் அகற்றி பிராந்தியுற்றபோதிலும் தன் கணவன் கொண்டு வருவேனென்று சொன்ன நித்திய போகத்திற்கு எதிர்பார்த்துக் கொண்டு தன் கணவனால் வகுத்துள்ள தருமசாலைகளைச் சீர்திருத்தி எவ்வெவ்வகையில் யாராருக்கறமளித்து ஆதரிக்கவேண்டுமென்னும் நிலைகண்டு தன்மத்தைப் பரவச் செய்துவந்தாள்.

காசிக்கலம்பகம்

உடுத்தகலையுமே கலையுமொழுகும் பணியும் விரும்பணியுந் தொடுத்தவளையுங் கைவளையுந் துறந்தாளாவி துறந்தாலு மடுத்தவுமது உரந்தானு மதனாலிதழி பரந்தாமம் விடுத்து விடுவாள் எவளெனப்போய் விளம்பீர்காசி வேதியர்க்கே.

யாப்பருங்கலைக்காரிகை

இளநலமிவள்வாட வரும்பொருட்குப்பிரிவாயேல்
தளநல முகவெண்பற்றாழ்குழற் தளர்வாளோ
தகைநலமிவள் வாடத்தரும் பொருட்குப் பிரிவாயேல்
வகைநலம் இவள்வாடி வருந்தியில்லிருப்பாளோ
அணிநலமிவள்வாட வரும் பொருட்குப்பிரிவாயேல்
மணிநல மகிழ்மேனி மாசொடு மடிவாளோ.

வீரசோழியம்

விடாஅது கழலுமென் வெள்வளையுந் தவிர்ப்பாய்மன் கெடா அது பெருகுமென் கேண்மெயு நிறுப்பாயோ
ஒல்லாது கழலுமென்னொளிவளையுந் தவிர்ப்பாய்மன்
நில்லாது பெருகுமென் னெஞ்சமு நிறுப்பாயோ
தாங்காது கழலுமென்ற கைவளையுந் தவிர்ப்பாய்மன்