பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216 / அயோத்திதாசர் சிந்தனைகள்


அருங்கலைச்செப்பு

தலைத்தார் வேல்போகஞ் சாலத் துறந்து / நிலைத்தானாய் நின்றானிறை.
இறையோன் அகலேந்தி ஏற்றவன்னமுண்டு / பொறையூர் புறம் உணர்ந்தான் பின்.
மீனுமுடல்கொண்டவிற்போரிடங்கண்டு / தானுமிச்சை என்றானிறை.
நீரோட்டக்காலும் நேரோடும் மீனும் / பாரோட்டங் கண்டான் பயன்.
விம்பாசாரன்றன் வேண்டல் மிகுகொண்டு / அன்பாலடைந்தானறன்,
முன்னொருத்திமாள முனைந்தவம் மூப்பன் / தன்னாற்றன் னோயகற்றினான்.
பின்னொருத்தன் மூப்பன் பெண்பாலர் நோய்கண்டு / உன்னுதளர் கொண்டானுடல்.

அசோதரை நெஞ்சுவிடுதூது

மதுரந்தருஞ் சாத்தனவன் கோயில் முன்னே / சதுரங்கப் பலமாத்தங்கும் - குதிரைப் பரி
தேராளெனும் பெயரும் செப்பியபேர் கொள்ளுரவு/நேராது பொய்யென்று நீக்கியே-தேருமிடத்

அதைக்கேட்ட விம்பாசார அரசன் திடுக்கிட்டெழுந்து பல்லக்கை கொண்டுவரச்செய்து ஏறிக்கொண்டு ஆற்றங்கரை வந்துசேர்ந்து சித்தார்த்தரைக் கண்டு திகைத்து அருகில் சென்று, ஐயன்மின், நீவிர்யாவரென்றான். யானோர் விசாரிணைப்போக்கனென்றார். தாங்கள் விசாரிணைப் போக்கராயினும் தேசம் யாதோவென்றான் கபிலைநகரென்றார். அங்கு தாங்கள் யாருடைய புத்திரரென்றான். மண்முகவாகு சக்கிரவர்த்தியின் ஏகபுத்திரரென்றார். அதைக்கேட்ட விம்பாசாரன் அவரை வணங்கி தன் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு அரண்மனைச்சேர்ந்து ஆசனமளித்துத் தானும் அருகில் உட்கார்ந்து அரசே, தாங்கள் உலக இன்பங்களைத் தவிர்த்து ஓடேந்தியக் காரணமென்னை என்றான்.

எனக்குற்ற சங்கைகளை அரசபோகத்தினின்று அதிகாரவிசாரிணையால் எவ்வெவ்வரிடத்து விசாரித்தும் சங்கை விளங்காததினால் ஒடுக்கநிலையில் ஓடேந்தி வணக்கவிசாரிணையில் வெளியேறினேனென்றார்.

அதைக்கேட்ட விம்பாசார அரசன் திடுக்கிட்டு தம்மராயனை நோக்கி இறைவா, தங்கள் சக்கிரவர்த்தி பீடத்தையும் மனைவி மைந்தன் சுகத்தையும் விடுத்துக் கையில் ஓடேந்தி என்ன சுகத்தை அடையப்போகின்றீரென்றான்.

சோதிரரே, தாம் வறிய சுகங்களில் பிறப்பது துக்கம், பிணி துக்கம், மூப்பு துக்கம், மரண துக்கம் பிரத்தியட்ச அநுபவத்தில் இருக்கின்றதினால் எச்சுகத்தில் என்னை நிலைக்கச்சொல்லுகின்றீரென்றார்.

இறைவா, ஓர் குடித்தனக்காரனிலுங் கிறாமாதிபதி மேலானவன். கிராமாதிபதியிலுந் தேசாதிபதி மேலானவன். தேசாதிபதியிலும் அரசன் மேலானவன். அரசனிலுந் தார்வேந்தன் மேலானவன். தார்வேந்தனிலும் தலைத்தார்வேந்தன் மேலானவன். அவ்வகைத் தலைத்தார்வேந்தனின் ஏகபுத்திரராகிய உமக்கு யாதொரு சுகமுமில்லை என்பீராயின் நாங்களென்ன சுகத்தை அடைவோமென்றான்.

மணிமேகலை

சாக்கையராளுந் தலைத்தார்வேந்த
யாக்கையுற்று தித்தனனாங்க வன்றானென.

சோதிரரே, ஒரு ஆட்டை மேய்ப்பவனுக்கு சாதாரணம். பத்து ஆடுகளை மேய்ப்பவனுக்கு சொற்ப கஷ்டம். நூறு ஆடுகளை மேய்ப்பவனுக்கு அதனினுங் கஷ்டம். ஆயிரம் ஆடுகளை மேய்ப்பவனுக்கு அதிக கஷ்டம் இருக்குமல்லவா என்றார்.

இறைவா, தலைத்தார்வேந்தர் இராட்சியபாரம் அதிகமாயினும் அவ்வவர் பொருப்பில் ஆளுகையை விடுத்து ஆதிபத்தியம் நடத்துவோமாயின் சுகவாழ்க்கைப் பெறலாமன்றோ என்றான்.

சோதிரரே, நமக்குள்ளடங்கிய சகலக் குடிகளின் சுகவாழ்க்கையால் நாம் சுகமடையலாமா அன்று குடிகளின் அசுகவாழ்க்கையால் சுகமடையலாமா என்றார்.

இறைவா, சகல குடிகளின் சுகவாழ்க்கையே நமக்கும் சுகநிலை என்றான். சோதிரரே, தங்கள் நாட்டிலுள்ள குடிகளின் சுகநிலைகள் யாவற்றையுங் கண்டதுண்டோ என்றார்.

இறைவா, ஒவ்வோர் மனிதனும் பிறப்பதிலுந் துக்கங் காண்கின்றேன், வளர்தலிலுந் துக்கங் காண்கின்றேன், அதனைக் காப்பாற்றுதலிலுந் துக்கத்தைக்