பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அம்மே என்று ஓடிவருவதும் மறுபடியும் இடையன் ஓட்ட ஓடுவதுங் குட்டி தவிழ்ந்துகொண்டு தவிப்பதும் தாயாடு திரும்பி திரும்பி அம்மே என்று ஓடி வருவதுமாகியப் பரிதாபத்தைக் கண்டுவரும்;

சக்கிரவர்த்தித் திருமகன் இதங்கி ஆட்டின் குட்டியை வாறி மார்பில் அணைத்துக்கொண்டு தாய் ஆட்டை நோக்கி அம்மா உன் பிள்ளையை வீட்டுவரையிலுங் கொண்டுவந்துவிடுகிறேன் நீ பயப்படாமல் நடவென்று கொண்டுபோகுங்கால்;

இடையன் அருகில் வந்து பரிதாபத்தால் செம்மறிக்குட்டியை மட்டிலும் சுமக்கும் நீர் என்னால் சுமக்கமுடியாத இக்கம்பளிமூட்டையையும் எடுத்துவர வேண்டுமென்று அப்பன் தோளில் ஏற்றிவிட்டுப் போய்விட்டான்.

தம்மராசன் செம்மறிக்குட்டியையும், தோற்பை மூட்டையையும் நெடுஞ்தூரஞ் சுமந்துக்கொண்டுபோய் ஆட்டிடையன் வீட்டண்டை இரக்கிய போது அவன் மனைவி கண்டு அடப்பாவி யாரோ பெரியவற்போல் காண்கின்றது அவரிடஞ் சுமையை ஏற்றியது தன்மமல்லவே என்று அலரினாள். அப்போதுதான் இடையனுக்கும் பயமுண்டாகி வணங்கிக்கொண்டான். சித்தார்த்தரும் இடையனை நோக்கி உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் உண்டாகியத் துன்பம்போல் உன் ஆடுகளுக்கும் உன் ஆட்டின் குட்டிகளுக்கும் உண்டாகுந் துன்பங்களைக்கருதிப்பாரென்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.

தனிவழிப்போய்ப் பலதேசங்களையுங் கடந்து ஓர் மலைக்குகையில் சேர்ந்து நாளுக்கு நாள் புசிப்பைக் குறைத்துக்கொண்டே வந்ததினால் தேகத்துள்ள என்புகள் யாவுந் தோன்றக் கண்பஞ்சடைந்து சிலதூரம் நடந்த ஆயாசத்தினால் மெய்மறந்து ஓர் மரத்தடியில் வீழ்ந்துவிட்டார்.

அவ்வழியாகத் தன் புருஷனுக்குக் கஞ்சிகொண்டுபோகும் ஓர் பெண்ணானவள் அப்பனை நெருங்கிப் பார்த்துவிட்டு தன் புருஷனிடஞ் சென்று ஐயே, சில காலங்களுக்குமுன் நமது ஆட்டுக்குட்டியையும், மூட்டையையுஞ் சுமந்துவந்த பெரியவர் போல் ஒருவர் மிக்க ஆயாசத்தால் விழுந்துகிடக்கின்றார் பார்ப்போம் வாருங்கோள் என்றழைத்தாள்.

இருவருஞ்சென்று விழுந்திருப்பவரை உற்றுநோக்கி செம்மறிக்குட்டியை ஏந்திவந்தப் பெரியவரென்றே பதரி எடுத்து மார்புடன் அணைத்து தன் மனைவி தனக்குக் கொண்டுவந்த பாற்கஞ்சியை சிறுக சிறுக ஊட்டினான்.

அசோதரை நெஞ்சுவிடு தூது

இடையன்பாற் சென்ற விருசெம்மலூனத் தொடருமறிக் குட்டியுடன் தோற்பை - எடுத்து
கம்பளந்தண்டாதிக் கையேந்திக்கொண்டு விம்புமடிபாதை மிகுநடந்து - நமபுந்
தகைமெயுடையோராய்த்தக்க பணிசெய்தே யகமுமுகமு மிகமலர்ந்து - சுகமாய்
செம்மறிதன் குட்டி திமிரகம்பளமளித்து நம்புமெய்யுள்ளன்பை நாட்டி - நம்மி.

இடைகாட்டு சித்தர் பாடல்

மும்மலநீக்கிட முப்பொறிக்கப்பாலு / முப்பாழ்கடந்த வப்பாலில்
செம்மறி ஓட்டிய வேலையைமட்டுஞ் / சிந்ததையில் வைப்பீரே கோனாரே.

நிகழ்காலத்திரங்கல்

பைம்பொற்கலை கொண்டு பாராளுங்கையில் செம்மறியை ஏந்துஞ் செய்கை அதிசயமே.
செம்மறியுந் தோற்பையுஞ் சேர்த்தகம்பளமேந்தி வம்மறியனில்லி லளித்தததிசயமே.
பாரமிகவேந்தி படியில் மிக நடந்து, தாரமிகு அன்பை தரித்தது அதிசயமே.
செங்கோலை ஏந்துங்கை செம்மறியை ஏற்றநன்றி பொங்கும்பாற்கஞ்சருந்தப்போற்றல் அதிசயமே. போற்றியவரளித்தப் புன் புசிப்பையேற்று வாற்றலுறு மீகை அளித்த ததிசயமே.

அதனை அருந்திய அப்பன் இரண்டுநாழிகைக்கு மேல் கண்விழித்துப் பார்த்து ஆயாசந் தெளிந்தபின் நீவிர் யாவரென்று உசாவினார். அவர்களிருவரும் ஆனந்தங்கொண்டு ஐயே, தாங்கள் ஒருகால் எங்களாட்டுக்குட்டியை சுமந்துவந்தீர் அந்த நன்றியை யாங்கள் மறவாமல் தங்களுக்குப் பால்கஞ்சி சுமந்து வந்தோமென்றார்கள். அதைக் கேட்ட தம்மராஜன் தன்னறச்செய்கைத் தன்னைக் கார்த்ததை எண்ணி நகைத்து அவர்கள் இருவரையும் நோக்கி நான்செய்த நன்றி உங்களுக்குப் பெரிதல்ல நீங்கள் எனக்கு உண்டிகொடுத்து