பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 221

உயிர்கொடுத்த நன்றியை உலகம் எக்காலும் மறக்காதென்று வாக்களித்து அதே இடத்தில் சிலகாலந்தங்கி அவர்கள் போஷிப்பால் தேகத்தைத் திடப்படுத்திக்கொண்டு இனி தேகத்தை ஒடுக்குவதில் பயனில்லை மிதாகாரம் புசித்துக் காமநிலையைக் கருக்கவேண்டி,

5. சித்தார்த்தர் பஞ்ச விந்தியத்தை வென்று இந்திரரும் மெய்கண்டு புத்தருமாய காதை

உள்ளக்கருவிக் காணாதிகளின் தோற்றங்களையும், ஒடுக்கங்களையும் ஆராய்ச்சிசெய்ய ஆரம்பித்தார். காரணம் அசத்தில் காணும் புறத்தோற்றங்கள் யாவுந் தோன்றுதலும் மறைதலும் பிறத்தலும் இறத்தலுமாகியச் செயல்களில்;

இன்று நாளை என்னுங் காலக்கணிதங்களும் பொய்த் தோற்றமாக விளங்கியபடியாலும் தோற்றிக்கொண்டே எழும்பும் பொருட்கள் யாவும் க்ஷணத்திற்குட்சணம் அழிந்துக்கொண்டேவருஞ் சுவாபமென்றறிந்த படியாலும்;

உள்ளத் தோற்ற ஒடுக்கங்களாகும் இராகத்துவேஷம் மோகங்களென்னும் காம வெகுளி மயக்கங்களின் உற்பவங்களையும் அதன் செயல்களையும் அச்செயல்களினால் உண்டாகுந் துன்பங்களையும் அழிவுகளையும் நாளுக்குநாள் உள்ளுணர்ந்து வருவதுடன்;

தேகத்தால் ஊறு பேதங்களையும், கண்ணால் வருணபேதங்களையும், நாவால் சுவை பேதங்களையும், மூக்கால் நாற்ற பேதங்களையும், செவியால் ஓசை பேதங்களையும் உள்ளுணர்ந்து மூக்கினால் நாற்றமறிதற்கு மண் காரணமென்றும், நாவினால் சுவை அறிதற்கு நீர் காரணமென்றும், கண்ணொளியால் பார்வை அறிதற்கு தீ காரணமென்றும், செவியால் சத்தமறிதற்கு ஆகாயங் காரணமென்றும், தேகத்தில் உணர்ச்சி அறிதற்கு வாயு காரணமென்றும் அறிந்துகொண்டதன்றி தீயும், ஆகாயமும், மனவிரிவுக்கும் மடிவுக்குங் காரணமென்றும் நீரும், காற்றும், மண்ணும் மூச்சுக்குக் காரணம் என்றுமுணர்ந்து மூச்சானது கழுத்தைப் பீடமாகக் கொண்டு பீஜத்திற்கும் நாசிக்கும் மாறலிடுவதும், மனமானது இருகண் மத்தியையும் மூக்கின் முனையையும் பீடமாகக்கொண்டு விரிந்து மடிவதுமாகிய செயலில் பாசபந்தப் பலபற்றுக்களால் மனம்விரிந்து உலகமாதலும், சாந்தம், ஈகை, அன்பு, பெருகி சிரேஷ்டநிலை தோற்றும் உள்ளுளவையும் நாளுக்குநாள் உணர்ந்து பிறப்பு, பிணி, மூப்பு, மரணமென்னும் நான்கு வாய்மெயின் துக்கம், துக்கோற்பவம், துக்கோற்பவக் காரணம், துக்க நிவாரணமாகும் நான்குமார்க்கங்களை அறியவேண்டி பூர்வம் முத்தாநதி என்று வழங்கி தற்காலம் கயாவென்று வழங்குமிடத்தில் தனது விவாககாலத்தில் உலக்கைத் தடியை ஊன்றிப் பிண்டிமரமெனத் துளிர்த்து ஐங்கிளைப் பிரிந்து வளர்ந்திருந்த பிண்டி மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு இராகத்துவேஷ மோகங்களென்னும் முக்குற்றங்களுக்குக் காரணச்சுழலாகும் இராசதம், தாமதம், சாத்துவிகமென்னும் முக்குணப் பிரிவுகளும் இடைகலை, பிங்கலை, சுழி முனை என்னு முச்சுவாச பிரிவுகளுமாகிய ஆறுள்ளங்க முகங்களை இருவிழி மத்திய ஓரங்கமாகும் உள்விழி பார்வையில் நிறுத்தி கண்பார்த்தவிடத்தில் மனம்போதலும், செவி கேட்டவிடத்தில் மனம்போதலும், நாவு உரிசித்தவிடத்தில் மனம் போதலும், மூக்கு முகர்ந்தவிடத்தில் மனம்போதலும், தேகஞ் சுகித்தவிடத்தில் மனம்போதலுமாகியச் செயல்களுக்குரிய சுவை, ஒளி, ஊறு, வோசை, நாற்றமிவற்றினிலையாம்,

பொறிவாயல்கள் ஐந்தினையுமவிக்கும் இடைவிடா அந்தர்முகப் பார்வையின் நிரந்தர பழக்கத்தால் மனமென்னும் பெயரற்று நாதவொலியுற்று பேரறிவாம் இரவுபகலற்றவிடந் தங்கி ஆனந்த நித்திறையடைந்து நித்திய சுகமுற்று பங்குனிமாத பௌர்ணமியில் காமனென்னும் பெண்போக இச்சையை யும் சிலேத்துமக் கபங்கண்டுக் கொல்லுங் காலனென்னும் மரணத்தையுஞ் ஜெயித்துக்கொண்டார்.