பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 223

சீவக சிந்தாமணி

ஐயாண்டெய்தி மெய்யாடி அறிந்தார் கலைகள் படை நவின்றார்
கொய் பூமாலை குழன் மின்னுங் கொழும்பொற்றோடுங் குண்டலமு
மையன் மார்கள் துளக்கின்றியாலுங் கலிமா வெகுண்டூர்ந்தார்
மொய்யாரலங்கன் மார்பறகு முப்பதாகி நிறைந்ததே.

நல்வழி

முப்பதாமாண்டளவின் மூன்றற் ஒருபொருளை / தப்பாமற்றன்னுட் பெறானாயின் - செப்புங்
கலையளவே யாகுமாங் காரிகையார் தங்கண் / முலையளவே யாகுமா மூப்பு.

நாயனார் குறள்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை / பற்றுக பற்று விடற்கு

மச்சமுனி ஞானம்

நித்தமு நீசுத்தமதாய் நின்று பார்த்தால் / நின்தேகம் பிரம்மமடா நீதான் காண்பாய்,
சுத்தமுடன் சோதிமனக் கண்ணாலந்த / சுருதிமுடிவான சுடரொளியைக் கண்டால்,
பக்தியுள்ள தேகமது சுத்தமாச்சு / பாலகனே அவமிருத்து பரந்து போச்சு,
வெற்றியுள்ள அஷ்டசித்துங் கைக்குள்ளாச்சு / வேதாந்த புருவமைய்ய மேவிநில்லே.

சீவக சிந்தாமணி

ஆசையார்வமோடைபமின்றியே / யோசைபோயுல குண்ண நோற்றபி,
னேசுபெண்ணொழித் திந்திரர்களாய் / தூயஞான மாய்த் துறக்க மெய்தினார்.

அறநெறிச்சாரம்

இந்தியக் குஞ்சரத்தை ஞானப்பெருங்கயிற்றால், சிந்தனை தூண்பூட்டி சேர்த்தியே - பந்திப்பர்
இம்மெப்புகழும் இனிச்சொல் கதிப்பயனும் / தம்மெத் தலைப்படுத்துவார்.

இராகத்துவேஷ மோக மூன்றையும் அறுத்து மெய்ப்பொருள் ஒன்றைப் பற்றுதல். அதாவது, உலகப் பற்றுக்கள் யாவையும் அறுத்து உண்மெய்ப் பொருளாம் ஒருபொருளைப்பற்றினபடியால்; உண்மெய் உணர்ந்த ததாகத நிலையில் சுவர்க்க, மத்திய, பாதாள மூன்றுலகங்களையுந் தனக்குள் கண்டதன்றி செல்லல், நிகழல், வருங்காலமாகும் முக்காலங்களின் தோற்றங்களுந் தனக்குள் விளங்குவதைக் கண்ட ததாகதர் தானே கண்ட காட்சியைத் தனக்குள் அடக்கிக்கொள்ளவேண்டிய எண்ணம் பிறந்தது. அதையே பைசாசநிலை என்றகற்றினார். இரண்டாவது உலகத்திலுள்ள சீவராசிகளின் அந்தகாரத்தை விலக்கி உள்ளொளி விளக்கவேண்டும் என்னும் ஓரெண்ணம் பிறந்தது. அதையே பிரம்ம நிலை என்றார்.

அதாவது, பூமியை உழுது பண்படுத்தி நஞ்சையாகுந் துன்பஞ் செய்தபோதிலும் அது நற்பலனைத் தருவது சுவாபமாதலின் அதுபோல் மக்கள் கூடிப் பலவகைத் துன்பந் தரினும் அதைக்கருதாது நன்மெய்செய்யுங் குணநிலைக்கு பிரமமென்னும் பெயரையும் வகுத்தார். உள்ளத்தில் எழும் அசுத்தங்களைத் தெள்ளர நீக்கி பெண்மயல் போக்கி பஞ்ச இந்திரியங்களை அடக்கிக் காமனை வென்றக் காட்சியால் ஐந்திரர் இந்திரரென்னும் பெயர் வாய்த்தது. யாதோர் ஆசிரியனும் இன்றி பிறப்பின் துக்கத்தையும், பிணியின் துக்கத்தையும், மூப்பின் துக்கத்தையும், மரண துக்கத்தையும் ஜெயித்துக் கொண்டபடியால் ஓதாமல் உணர்ந்த முனிவனென்றும் ஓர் சிறந்த பெயரை அளித்தார்கள்.

அருங்கலைச்செப்பு

இந்தியத்தை வென்றான் தொடர் பாட்டோடாரம்ப / முந்து துறந்தான் முனி

குறள்

ஐந்தவித்தனாற் றலகல் விசும்புளார்க் கோமான் / இந்திரனே சாலுங்கரி.
பொறிவாயி லைந்தினை யவித்தற்குப்பயன் / புத்தரெனு மிந்திரரே போதுங் சான்று.

சீவக சிந்தாமணி

சுறவுக் கொடிக்கடவுளொடு காலத் தொலைத்தோயெம் / பிறவியறு கென்று பிறசிந்தை யிலராகி
நறவுமலர் வேந்து நறுஞ்சாந்து நிலமெழுகித் / துறவு நெறி கடவுளடி தூமமொடு தொழுதார்.
பாலனைய சிந்தை சுடரப்படர் செய்காதி / நாலு முடனே யறிந்து நான்மெவரம்பாகி
காலமொரு மூன்று முடனே யுணர்ந்த கடவுள் / கோலமலர்ச் சேவடிகள் கொண்டு தொழுதும் யாம்
முழங்கு கடநெற்றி சுடர்முளைத் தெழுந்தேபோ / லழுங்கல் வினைகளற நிமிந்தாங்குலக மூன்றும்
விழுங்கியுமி ழாது குணம் வித்தியிருந்தோய்நின் / னிழுங்கில் குணச் சேவடிகளேத்தி தொழுதும் யாம்
ஏத்தரிய பல்குணங்கட் கெல்லைவரம் பாகி / நீத்தவிரு ளிந்திரனை நின்று தொழுதமரர்
நாத்தழும்ப வேத்திதவ நங்கையவர் நண்ணித் / தோத்திரங்களோதி துகண் மாசுதுணிக்கின்றார்.