பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 225

நிகழ்காலத்திரங்கல்

திருமலராந்தா மரையுட் சேர்ந்து கல்லாலடியில் / குருமலராங் குப்பல் குவிந்தது அதிசயமே.

சிலப்பதிகாரம்

திங்கண்மூன்றடுக்கிய திருமுக்குடைக்கீழ்ச், / செங்கதிர்ஞாயிற்றுத் திகழொளி சிறந்து,
கோதைதாழ் பிண்டிக்கொழு நிழலிருந்த, / வாதியிறோற்றத்து அறிவனை வணங்கி.
மலர்மிசை அடைந்த மலரடிக்கல்லதென், தலைமிசையுச்சி தானணி பொறாது.

இரண்டாவது தன்னை அடுத்த மாணாக்கர்களுக்குத் திரிபீடங்களை விளக்குவதற்காய் அவர்களையும், மற்றுமுள்ளோரையும் நோக்கி அன்பர்காள் உலகத்தில் தோற்றும் பொருட்கள் யாவும் க்ஷணத்திற்கட்சணம் அழிந்து கொண்டே வருகின்றபடியால் சகலமும் அநித்தியமாயிருக்கின்றது.

அவ்வனித்தியவாழ்வை நித்தியமென்று தாவிபிடித்திருக்கும் ஒவ்வொரு வரும் தனக்கு நித்திறை மறைத்தக்கால் மனைவி மக்கள் பந்து மித்திரர் பொற்பூஷண திரவியங்கள் யாவும் எங்கு மறைந்திருந்தது. தன்னை மறைத்த அத்திறை எத்திறம் ஒத்தது. அதே திறை இரண்டுநாள் மூடுமாயின் இறந்தானென்று தகனஞ் செய்து விடுவார்கள்.

அடுத்தடுத்து இரவும்பகலும் மறைக்காவண்ணம் இரவு பகலற்றவிடத்தே விழித்திருக்கும் நித்தியநிலையை உண்மெய் என்று கூறப்படும்.

அதுவே மெய்ப்பொருளாதலின் அம்மெய்ப்பொருளை மறைக்குந் திறைச்சீலை அடுக்குகளாகும் பொருளாசை, கோபம், கள்ளருந்தல், முறட்டுத்தனம், வஞ்சகம், பிடிவாதம், பொறாமெய், தற்புகழ்ச்சி, புறங்கூறல், ஆணவம், கெடுமதி இவைகளேயாம்.

6. ஆதிவேத வாக்கிய விவர காதை

நித்திறையை சுகமென்று எண்ணி நாளுக்கு நாள் திறைச்சீலைகளால் மேலும் மேலும் மூடப்பட்டுவருவானாயின் சதா நித்திறையால் இம்மெய் நசிந்து வினைக்கீடாய் மறுமெய்யெடுப்பன்.

குணப்பற்றுக்களின் நிலையை அறியவேண்டின் தசவாண்டுகளுக்கு முன் கண்ணினால் கண்ட காட்சியையும், மூக்கினால் முகர்ந்த நாற்றத்தையும், செவியினால் கேட்ட ஓசையையும், நாவினால் உருசித்த சுவையையும், தேகத்தால் கண்ட சுகத்தையுஞ் சிந்திக்குங்கால் தோற்றுவித்தடங்கும் ஞாபகநிலையில் இராகத்துவேஷ மோகம் பெருகி பிறவி தோற்றத்தால் உலகம் விரிந்து உண்மெய் மறைந்திருக்கின்றது.

அந்த ஞாபகநிலையை உள் விழியால் நோக்கி இராகத்துவேஷ மோகங்களைப் போக்கி சுத்த இதய சத்துவநிலையில் நிற்பீரேல் உண்மெய் விளங்கும்.

அவ்வுண்மெய்தான் நித்தியத்திற்கு வழியாயிருக்கின்றது. உண்மெய்தான் நித்தியமாய் இருக்கின்றது. உண்மெய்தான் நிருவாணநிலையும் என்றறிந்து அமுதமருந்தாமல்,

இம்மெய்மறைவதற்கும் மறுமெய் தோற்றுவதற்கும் பேரவாபற்றி நிற்கின்றீர்கள். அப்பற்றுக்களே பிறவிக்குக் காரணம் என்னப்படும்.

அதாவது மண் பெண் பொன்னென்னும் பொருட்களைத் தாவும் இராகத்துவேஷ மோகமென்னும் இதயப்பற்றுக்களேயாம்.

அவ்விதய உற்பவம் மூன்று வகையாம். அதன் தோற்றநிலைக்கு குணி என்றும், தோற்றி வைக்கும் நிலைக்கு குணமென்றும் பெயர்.

பின்கலை நிகண்டு


தாமதம் நிறைபேருண்டி சாம்புதல் சோம்புமூரி / காமமே நீதிகேடு கண்ணுறக்கம் பொச்சாப்பு
நாமசஞ்சலமே தஞ்சம் நாட்டலாம் இம்மூப்பாலும் / ஆமலி உடனேமற்ற மெலிவொடு சமனுமாமே.
தானமே தவமேமற்ற தருமம்பேணுதலினோடு / ஞானமே கல்வி கேள்வி நலனிவை தெரிதரானே
ஈனமொன்றில்லார் வைத்த விராசத குணங்களென்ப / ஊனமின் முனிவன் முன்னாள் உரைத்திடு முண்மெய்தானே.

ஏற்றசாத்து விதத்தோடே இராசதந்தா மதங்கள்
ஆற்றமுக் குணங்களாகும் மதிற்சத்து விதமே ஞானம்
சாற்றிடு தவமே மெய்மெய் சால நல்லருளுண்டாதல்

போற்றிய வாய்மெயோடைம் புலனடக்குதலு மாமே.