பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஸ்திரீகளை அபகரித்தல் பாபம். 5. அன்னிய சீவப்பிராணிகளைக் கொலை செய்தல் பாபம். 6. அன்னியர்மனம் புண்பட வார்த்தை பேசுதல் பாபம். 7.அன்னியர்களை வஞ்சித்து வருந்தச்செய்தல் பாபம். 8. அன்னியர் அறிவை மதுவூட்டி மயங்கச்செய்தல் பாபம்.

நன்மெய் என்பதெவை

உபநிடதமென்னும் உபநிட்சயார்த்தம் இரண்டாமெட்டு. அருங்கலைச்செப்பு. - அர்த்தபாகை அஷ்டகம்.

இரண்டாம் பேதவாக்கியம். நன்மெய்க் கடைபிடித்தல்.- 1. ஆருயிர் துன்பமகற்றி ஆற்றல், பேருயிர் நன்மெய்ப்புகழ். 2. ஈந்து மளித்தும் ஏற்காதிருத்தல், சாந்தநன்மெய்த் துணை. 3. தன்னுயிர் தவிர்த்து மன்னுயிர் ரோம்பல், உன்னிய நன்மெய்யுறன். 4. அன்னியர் தாரமன்னை தங்கை, உன்னு நன்மெய்யுறல் 5. கொலையும் புலையுங் கொள்ளாதகற்றல், நிலையாம் நன்மெய் நிழல். 6. அமுதவாக்கு மன்பிநோக்குங், குமுத நன்மெய்க் குடை 7. வாக்கின் வாய்மெ வளம்பெற வோதல், நோக்கு நன்மெய் நெறி. 8. அமுதமூறு மறிவையேற்றல், சமய நன்மெய்ச்சுழி.

1.அன்னியபிராணிகளுக்குண்டாகுந் துன்பங்களை நீக்கி ஆதரித்தல் நன்மெய். 2. அன்னியருக்கில்லாப் பொருளீய்ந்து தன்னைப்போல் சீர்பெறச்செய்தல் நன்மெய் 3. அன்னியர்களைத் தன்னவர்கள் போல் நேசித்து ஆதரிப்பது நன்மெய் 4. அன்னியர் மனைவிகளை தாய் தங்கையர்போல் பாதுகாத்தல் நன்மெய் 5. அன்னிய சீவப்பிராணிகளைக் கொலைச்செய்யாமலும் கொலைக்கேவாமலும் இருப்பது நன்மெய் 6. அன்னியர் மனமும் உடலும் பூரிக்கும் மிருதுவான வார்த்தையாடுதல் நன்மெய். 7. அன்னியர்களுக்கு உபயோகம் உண்டாகும் வார்த்தைகளைப் பேசி விருத்திபெறச்செய்தல் நன்மெய் 8. அன்னியர்களின் அறிவைப் பெருகச் செய்து அமுதுண்ணச்செய்தல் நன்மெய்.

இதயசுத்தம் என்பதெவை

உபநிடதமென்னும் உபநிட்சயார்த்த மூன்றாமெட்டு. அருங்கலைச் செப்பு: ஞானபாகை அஷ்டகம். மூன்றாம் பேதவாக்கியம். இதயத்தை சுத்தி செய்தல். 1. துள்ளுங்கோபம் அகற்றியாற்றல், உள்ளக் களங்கமறல். 2. காமமகற்றி கருணை விளித்த, லேமவுள்ளத்து ளிர் 3. மயக்கமகற்றி வானறி ஓம்பல், சுயம்பாமுள்ளக் கலை 4. வாழ்க்கைக் கருதி வஞ்சமகற்றல், சூழ்ச்சியுள்ளத் தவம் 5. மெய்ப்பொருள் நோக்கி வீணகமாற்றல், துய்யவுள்ளச் செயல் 6. அழியா இன்ப ஆற்றல் அடைதல் விழியா முள்ளக்குறி 7. அடக்கமமைந்து வாடமொழிதல், துடைக்குமுள்ளக்கரை 8. தீங்கினுருவத்தானைத் தேற்றல், பாங்கினுள்ளப் பயன்.

1. தன்னிடத்துண்டாங் கோபத்தை தங்கவிடாமல் அகற்றி சாந்தத்தைப் பெருக்குதல் இதய சுத்தம் 2. தன்னிடத்துண்டாங் காமத்தை தங்கவிடாமல் அகற்றி அன்பைப் பெருக்குதல் இதய சுத்தம் 3. தன்னிடத்துண்டாம் மயக்கங்களை அகற்றி அறிவை வளரச்செய்தல் இதய சுத்தம் 4. தன்னிடத் துண்டாம் வஞ்சினம் பொறாமெய்க் குணமகற்றி சகலர் சுகவாழ்க்கையை விரும்புதல் இதய சுத்தம் 5. தன்னிடத்துண்டாம் பொய்ப்பொருளாசையை அகற்றி மெய்ப்பொருளுசாவுதல் இதயசுத்தம். 6.தன்னிடத்துண்டாம் சிற்றின்பச் செயல்களை அகற்றி பேரின்பத்தை நாடல் இதய சுத்தம் 7. தன்னிடத் துண்டாம் டம்பச்செயல்களை அகற்றி அடக்கத்தி நிற்றல் இதய சுத்தம் 8. தன்னை வஞ்சித்து துன்பப்படுத்தியவனை அன்புடன் ஆதரித்தல் இதய சுத்தம்.

வீடு முத்தி நிருவாணம் என்பதெவை

உபநிடதமென்னும் உபநிட்சயார்த்த நான்காவதெட்டு. அருங்கலைச் செப்பு: நிருவாண அஷ்டகம். நான்காம் வேதவாக்கியம் வீடுபேறு.- 1. பற்றுக்களற்றுப் பழம்பொருளாற்ற, லுற்ற முத்திநிலை 2. தூங்கா விழிப்பிற் சுகநிலை காண்டல், பாங்காமுத்திப்பலன்