பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 235

3. பிறப்பு இறப்பின் பேற்றை செயித்தல், துறப்பின் முத்தி சுகம் 4. காமம் வெகுளி மயக்கமகற்றல், சேமமுத்திச்செயல் 5. தோற்றவொடுக்க மனத்தின் செயலை, யாற்றல் முத்தி சுகம் 6. மரண பயத்தை மாற்றி மகிழ்தல், திரண்ட முத்தித் திடம் 7. உண்மெய் கண்டு உள்ள மகிழ்தல், திண்ண முத்தித் திறம் 8. தானே தானே சுயம் பொளியாதல், வானோர் முத்தி வளம்.

1. தன்னிடத்துண்டாம் பற்றுக்களற்று சதானந்தத்திலிருப்பது நிருவாணம் 2. தன்னை மறைக்கும் நித்திறையை செயித்து சதாவிழிப்பிலிருப்பது நிருவாணம் 3. தன்னை மாறி மாறி பிறக்கச்செய்யும் மரணத்தை செயித்த நிலை நிருவாணம் 4. தன்னை சதா துக்கத்தில் ஆழ்த்தும் காம வெகுளி மயக்கங்களை அறுத்த நிலை நிருவாணம் 5. தானே தோன்றுகிறதும் கெடுகிறதுமாகிய மனதை தோன்றாமலுங் கெடாமலும் அலையற்ற கடல்போல் நிற்பது நிருவாணம் 6. தனக்குண்டாகும் மரணபயம் செந்நபயமற்று யாதுக்குங் கலங்காமல் நிற்பது நிருவாணம் 7. தன்னுள் தானாய் விளங்கும் உண்மெய்யாம் பேரின்பமே நிருவாணம் 8. தானே தானே சுயம்பிரகாச சதாநித்திய சித்தாம் அகண்டநிலையே நிருவாணம்.

இவ்வகையாக சதுர்முகனென்னும் பெயர்பெற்ற சாக்கையமுநிவர் அருளிய பேதவாக்கியங்களும் அதன் உபநிட்சயார்த்தங்களென்னும் 32 உபநிடதங்களும் வடமொழியில் பொருள் மறைந்து மறைகளென்னும் பெயர்கொண்டிருந்த முதநூலாகுந் திரிபிடகத்திற்கு வழி நூலாகும் முப்பாலென்னுந் திரிக்குறளை சாக்கையகுல நாயனார் செந்தமிழில் இயற்றி தெளிவடையச்செய்தார்.

வீரசோழியம்

எண்பத்தொன்பது சித்தியியல் பினாலுளவென்று
பண்பொத்த நுண்பொருளை பாரறியப்பகர்ந்தனையே
துப்பியன்ற குணத்தோடு தொழில்களால் வேறுபட
முப்பதின்மேலிரண்டு கலை முரைமெயான் மொழிந்தனையே.

திருவள்ளுவர் மாலை

இன்பம் பொருளறம் வீடென்னும் இந்நான்கும்
முன்பறியச்சொன்ன முதுமொழிநூன் - மன்பதைகட்
குள்ளவரிதென்றவை வள்ளுவருகலங்
கொள்ள மொழிந்தார் குறள்.
நான்மறையின் மெய்ப் பொருளை
முப்பொருளா நான்முகத்தோன்
றான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த நூன்முறையே
வந்திக்கச் சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ்
சிந்திக்க கேட்கச்செவி.

7.சதுர் சத்ய காதை

பகவன் காசியை அடைந்து தரும சங்கத்தை நாட்டி திரிபீடங்களாகுந் திரிபிடக மூன்று பேதவாக்கியங்களையும் ஒரு வீடுபேற்றையும் போதித்து ஒவ்வோர் பேதவாக்கியங்களுக்கும் எட்டு உபநிட்சயார்த்தங்களென்னும் முப்பத்திரண்டு உபநிடதங்களையும் விளக்கி வரிவடிவாகும் வடமொழி தென்மொழிகளையுமூட்டி ஒவ்வொருவர் இதயத்திலுமுள்ள இருளை அகற்றி தருமத்தைப்பரவச்செய்தப் பேருபகாரத்தாலும் அத்தருமமானது ஏழைகளுக் கும், தனவான்களுக்கும், விவேகிகளுக்கும், அவிவேகிகளுக்கும், சுகதேகிகளுக்கும், பிணியாளருக்கும் பொதுவாஞ்சுகமடையுஞ் சுகவழியாகக்கண்ட ஒவ்வொரு வரும் அவரைக்காசியீசனென்றும், காசி விசுவேசனென்றும், காசி விசுவநாதரென்றுங் கொண்டாடியதுமன்றி சீவராசிகளின் ஆறாவது தோற்ற மநுக்களுள் ஏழாவது தோற்ற முதற்றேவனாகத் தோற்றியபடியால் ஆதிதேவ னென்றும், முன்கடவுளாகத் தோற்றியபடியால் ஆதியங்கடவுளென்றும், முதலிந்திரராகத் தோற்றியபடியால் முன்னிந்திரரென்றும், முதல்நாதனாகத் தோற்றியபடியால் ஆதிநாதனென்றும் போற்றி அரசனாகப் பிறந்து சற்குருவாக விளங்கிய சம்பிரமத்தை பலதேச அரசர்கள் முதல் குடிகள் வரையில் கொண்டாடி வந்தார்கள்.