பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சிவஞானவிளக்கம்

பச்சைமரத்தாணிபோல் பாய்ந்திருந்த மும்மலத்தைத்
தைச்சிருந்த மும்மலத்தைத் தானீக்கி - அச்சமிலாத்
தானீன்ற தற்பரத்தைத் தந்தருளி எந்தனுக்கு
கோனாகி வந்தான் குரு.

மணிமேகலை

காசின் மாநகர் கடல்வயிறு புகாமல்
வாசவன் விழாக்கொள் மறவேனென்று
காயங் கரையெனும் பேரியாற்றடைகரை
மாயமின் மாதவன் தன்னடி பணிந்து
தருமங்கேட்டு தாடொழுதேத்தி.

சீவக சிந்தாமணி

முனிவரு முயன்று வான்கண்மூப்பிகந்துடையவின்ப
கனிகவர் கண்ணுமேத்தக் காதிகணறிந்த காசித்
தனிமுதற்கடவுட் கோயிறான் வலங்கொண்டு செல்வான்
குனிதிரை முளைத்த வெய்யோன் குன்று சூழ் அதனை ஒத்தான்.

பேதவாக்கியங்களையும், உபநிடதங்களையும் விளக்கிய பகவன் அவற்றை உணரவேண்டியதற்குக் காரணமாகும் நான்கு வாய்மெகளை விளக்க ஆரம்பித்தார்.

அந்நான்கு வகை வாய்மெய் உணர்ச்சியே நான்கு பரிசுத்த சத்தியங்களென்று கூறப்படும். இப்பரிசுத்த சத்தியமானது நேராகக் காட்டக்கூடியதும், உரைக்கக் கூடியதும், வெளியரங்கமானதும், ஆழ்ந்து பார்க்கக்கூடியதும், பிரத்தியட்சமாய்க் காட்டக்கூடியவைகளுமாம்.

நான்கு பரிசுத்த சத்தியங்களாவது.- பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு இவை நான்கிலுந் துக்கமுண்டாமென்பது சத்தியம். இவற்றை விசாரிக்கப்புகின், சப்பே சது சக்யங். ஜானாஸி கரோதீதி ஜீனோ.
சப்பேசதுசத்யங்.

நான்கு பரிசுத்த சத்தியங்களாவது

1. துக்கா சத்யா1. துக்கம்
2. துக்காசமூத்ய சத்யா2. துக்கோற்பத்தி
3. துக்க நிரோத சத்யா3. துக்க நிவாரணம்
4. துக்க நிரோத காமினிபிரதி பதா சத்யா 4. துக்க நிவாரண மார்க்கம்
என்னப்படும்.
 

மணிமேகலை

துன்பந்தோற்றம் பற்றே காரண,
இன்பம் வீடே பற்றிலி காரண,
மொன்றிய உரையே வாய்மெ நான்காவது

சீவக சிந்தாமணி

நூனெறி வகையி நோக்கி நுண்ணிதி னுழைந்து தீமெப்,
பானெறி பலவுநீக்கிப் பரிதியங் கடவுளன்ன,
கோனெறி தழுவினின்ற குணத்தொடு புணரின் மாதோ,
நானெறிவகையினின்ற நல்லுயிர்க்கு அமிர்தமென்றான்.
அருமெயினெய்தும் யாக்கையும் யாக்கையதழிவுந்,
திருமெய் நீங்கிய துன்பமுந் தெளிபொருட் டுணிவும்,
குருமெய் எய்திய குண நிலை கொடைபெறு பயனும்,
பெருமெ வீட்டொடும் பேசுவல் கேளிது பெரியோய்.

இந்நான்கு வாய்மெயினாழ்ந்த சத்தியத்தை கண்டடைவைது மிக்கக் கஷ்டமாயிருப்பினும் உண்மெயில் உள்ளன்பு உள்ளவன் தனது சாந்தத்தையே ஈகையாகக் கொடுக்கக்கடவன்.

உலகம் சுகத்தையே நாடுகின்றது. சுகத்தில் சிக்குப்பட்டிருக்கிறது. சுகமயக்கத்தில் சுழல்கின்றது. இவ்வகை விழிப்பதும் மறைப்பதும் தோன்று வதுங் கெடுவதுமாகிய சுகத்தை நாடுகிறவர்களுக்கும் அதே சுக மயக்கத்திலிருப்ப வர்களுக்கும் ஆசையை ஒழித்து நிருவாணசுகத்தை அடைவது கஷ்டமா யிருக்கும். அதன் சத்தியம் விளங்கவும் விளங்காது.