பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இவைகள் அவனுக்கு உண்மெயாக தெரியாதாதலால் இவ்வலையில் சிக்குண்டு தாழ்ந்த பிறவிக்கேகுகின்றான்.

ஏனெனில் அவைகளை அவன் அதனதன் கிளர்ச்சியில் தடுக்காமல் விட்டபடியால் துற்கருமக் களிம்பு தடிப்பேறிவிடுகின்றது.

சிந்திக்கவேண்டிய முக்கிய விஷயங்களில் பழக்கமில்லாமலும் சிந்திக்கத்தகாத விஷயங்களில் பழக்கமுள்ளவனுமாகிய ஒருவன் பிரயோசனமற்றதை சிந்திப்பானன்றி பிரயோசன முள்ளவைகளை சிந்திக்கமாட்டான்.

முக்காலங்களைப்பற்றிய பதினாறுவகை சந்தேகங்களை விவேகக்குறைவால் கீழ்வருமாறு சிந்திக்க ஆரம்பிக்கின்றான்.

முன்பிறப்பில் நானிருந்தேனா? இருக்கவில்லையா? முன்பிறப்பில் எவ்விதமாய் இருந்தேன்? முன் என்னிலைமெயிலிருந்து என்னிலைக்கு மாறினேன்? இனிமேல் பிறப்பேனா பிறக்கமாட்டானே? எவ்விதமாய் இருப்பேன்? என்னிலைக்கு மாறுவேன்? நான் இப்போது இருக்கின்றேனா? இல்லையா? நான் யார்? நான் எவ்விதமாய் இருக்கின்றேன்? இத்தேகம் எங்கிருந்துவந்தது? எங்கே போகப்போகின்றது.

என்னும் வீணான துற்சிந்தனைகளால் ஆத்துமமென்னும் வார்த்தையைப் பற்றிக்கொண்டு ஒருவித அல்லது ஆறுவிதமான எண்ணங்களை உதிக்கச்செய்வான்.

ஆத்தா ஆத்துமா அழியாததென்று எண்ணி அவ்வெண்ணத்தையே உறுதியாக சாதித்தலும் அல்லது அழியாத ஆத்துமா கிடையாதென்று எண்ணி அவ்வெண் ணத்தையே உறுதியாக சாதித்தலும்.

ஓ! சகோதிரர்களே! அல்லது சுத்த ஆன்மாவைக்கொண்டு சுத்த ஆன்மாவைக் கிரகிப்பேன் என்று எண்ணி அதையே உறுதியாக சாதித்தலும் அல்லது சுத்த ஆன்மாவைக்கொண்ட அநாத்தா அனாத்துமத்தை உணர்வேன் என்று எண்ணி அதையே உறுதியாக சாதித்தலும் அல்லது அனாத்துமத்தைக் கொண்டு சுத்த ஆன்மாவை உணர்வேன் என்று எண்ணி அதையே உறுதியாக சாதித்தலும் அல்லது இங்கு எங்கு சுகித்தாலும் என் ஆன்மாவை மறுபடியுங் காணக்கூடும். நன்மெய் செய்தாலுந் தின்மெய் செய்தாலும் என் ஆன்மா காணப்படும். என் ஆன்மா அழியாதது. நிலையுள்ளது. எப்போதும் உள்ளது. மாறுதல் அடையாதது. என் ஆன்மா இவ்விதமாக எக்காலும் நிலையுள்ளது என்பான்.

இவ்வகையால் (என் ஆன்மா) என்பவன் (என்) என்பவனுக்கு என்னப்பெயரளிப்பானோ அறியேன். என்வீடு, என்மனைவி, என் பிள்ளை என்பதுபோல் என் ஆன்மா, என் தேகம் என்பதில் என்னென்பவன் பெயர் யாதும் அறியான். இவ்வகை மயக்கத்திற்குள்ளாக்கும் ஆன்மாவே புருஷன் புருஷனே ஆன்மா என்பதும் அறியான். பஞ்சஸ்கந்த திறட்சியே ஆன்மா என்பதும், பஞ்சஸ்கந்த திறட்சிகள் கலைந்தவிடமே அநாத்துமா என்பதும் அறியான். இவைகள் யாவும் உண்மெய் விசாரணை அற்றவர்களின் கோட்பாடுகளாகும்.

ஓ! சகோதிரர்களே! மேற்கூறியவைகள் யாவும் வீண் சிந்தனை, சடுதிநேரச் சிந்தனை, தடுமாறற்செய்யுஞ் சிந்தனை, பொய்ம்மெய் ஆட்டத்தைப்போன்ற சிந்தனை, சிக்குகளை உண்டாக்குஞ் சிந்தனைகளாகும்.

ஓ! சகோதிரர்களே! சத்தியத்தை அறியாத உலகம் மறுபிறப்பென்னும் சக்கரத்தினின்று தப்பித்துக்கொள்ள முடியாது. பிணி, மூப்பு, சாக்காடு, துக்கம், அழுகை, ஏக்கம் இவைகளினின்றுந் தப்பித்துக் கொள்ள முடியாது. இவற்றை ததாகதன் உங்களுக்கு உறுதியாக சொல்லுகின்றேன். உண்மெய்யை உணருங்கள். உண்மெய்யில் அன்பை வளர்த்துங்கள்.

ஓ! சகோதிரர்களே! சத்தியத்தை அறிந்த பரிசுத்த சிஷியர்கள் பரிசுத்த புருஷர்களுக்கு வந்தன உபசாரமளிப்பர். பரிசுத்த புருஷர்களின் போதனையைத் தெரிந்தவர்களாயிருப்பர். பரிசுத்தப் புருஷர்களிடம் பழகியதால் நல்விஷயத்திற்கு இடங்கொடுப்பர். அதினால் நல்விஷயங்களைத் தெரிந்தவர்களாகின்றார்கள். சத்விஷயத்தில் தேறியவர்களாகின்றார்கள். சிந்திக்கவேண்டியவைகள் இவை