பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 247

இவை என அறிந்துக்கொள்ளுகின்றார்கள். சிந்திக்கத்தகாதவைகள் இன் னின்னவைகள் என்று அறிந்து நீக்கிக்கொள்ளுகின்றார்கள்.

முக்கியமாக சிந்திக்கவேண்டிய விஷயங்களில் பழகியும் சிந்திக்கத் தகாத விஷயங்களில் பழகாமலும் தேற விசாரிணையில் நம்பத்தக்கினவிஷயங்களில் நம்பிக்கையும் நம்பத்தகாத விஷயங்களில் நம்பிக்கை அற்றும் இருப்பார்கள்.

தேற விசாரிணையுள்ள புருஷன் இதுதான் துக்கம், இதுதான் துக்கோற்பத்தி, இதுதான் துக்கநிவாரணம், இதுதான் துக்கநிவாரண மார்க்கமென்று ஆழ்ந்து சிந்திக்கின்றான். இவ்வித மெய்ஞானத் தெளிவால், 1. உடம்பு நித்தியமானதென்னும் எண்ணம் 2. சந்தேகம் 3. பயனைக் கருதிச்செய்யும் விரதங்கள். இம்மூவித பந்தத்தினின்று தப்பித்துக் கொண்டவனாகின்றான். அவ்வகை தப்பித்துக் கொண்டவன் யாரோ அவன் தர்மத்தை சிந்திப்பவனாகின்றான். வாதனையற்று ஞானத்தைப்பெற ஏதுவாய் இருக்கின்றவன் சோடாபன்னா என்றழைக்கப்படுவான்.

ஓ! சகோதிரர்களே! உங்கள் சகோதிரர்களில் ஒருவர் உங்களை நோக்கி நமதாசான் கௌதமர் ஒரு கோட்பாட்டை உடையவரா என்று கேட்பார்களாயின் அதற்கு பதிலாக, ததாகதர் எவ்வித கோட்பாடுகளுக்கும் உட்பட்டவரல்லர். ஏனெனில் இந்த தேகம் இவ்வகையானது இவ்விதமாக வளருகிறது இவ்விதமாக மடிகிறதென்றும், புலன்கள் இவ்வகையானது இவ்வகையாக உதிக்கின்றது இவ்வகையாக மடிகிறதென்றும் மனதுக் கடுத்தவைகள் இவ்விதமானது இவ்விதமாக உதிக்கின்றது இவ்விதமாக மடிகிறதென்றுந் தேறக் கண்டு தெளிந்திருக்கின்றார். ஆதலின் சகலவித கோட்பாடுகளினின்றும், சகல எண்ணங்களினின்றும், சகல வித தப்பபிப் பிராயங்களினின்றும், தற்பெருமெயினின்றும், தன்னயத்தினின்றும் முற்றும் நீங்கியுள்ளவர் என்று அறிந்து கூறுவீர்களாக.

ஓ! சகோதிரர்களே! ததாகதர் உலகில் அவதரித்தாலும் அவதரிக்கா விட்டாலும் உலகிலுள்ள சகலமுந் தோன்றி தோன்றி கெடும் அநித்தியமாய் இருக்கிறதென்னும் நிலைமெயானதும் அவசியமானதுமான ஒரு உண்மெய் இருந்தே இருக்கின்றது. எவ்வகையில் என்பீரேல், தேகம் அநித்தியம், உணர்ச்சி அநித்தியம், புலன்கள் அநித்தியம், மனதுக்கடுத்தவைகள் யாவும் அநித்தியம், அறிவும் அநித்தியமாய் இருக்கின்றது.

ஓ! சகோதிரர்களே! ததாகதர் உலகில் அவதரித்தாலும் அவதரிக்கா விட்டாலும் உலகிலுள்ள சகலமும் துக்கத்திற்கு ஆளாகின்றன என்னும் நிலைமெயானதும் அவசியமானதுமாகும் ஓருண்மெய் நிலை இருந்தே யிருக்கின்றது. அதாவது, தேகம் துக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றது உணர்ச்சி துக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றது, புலன்கள் துக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றது, மனதுக்கடுத்தவைகள் துக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றது, அறிவு துக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றது. ஆதலின் உலகில் தனிமெயான அத்தா ஒன்றுமில்லை என்னும் அவசியமான ஒருண்மெய் இருந்தே இருக்கின்றது. தேகந் தனியல்ல, அத்தா உணர்வு தனியல்ல, புலன்கள் தனியல்ல, மனதுக்கடுத்தவைகள் தனியல்ல, அறிவு தனியல்ல. ஒரு தேகம், ஒரு உணர்வு, ஒரு காட்சி, ஒரு மனதுக் கடுத்தவை, ஒரு அறிவு என்பவைகள் சாஸ்வதமாகவும், என்றும் அழியாததும், எக்காலும் மாறக்கூடாததுமாக உலகில் இருந்ததில்லை. நற்காட்சியை அறிந்த புருஷன் அறியாதோர் நிலையுள்ளதென்னுங் கொள்கையை ஒருக்காலும் மதியான்.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் உணர்ச்சியையே தன் ஆன்மா அத்தாவென்று கூறுவான். அவனுக்குப் பின்வருமாறு விடையளிப் பீர்களாக. உணர்ச்சியில் மூன்றுவகை உணர்ச்சிகளுண்டு. அதாவது, இன்பத்தை நுகரக்கூடிய உணர்ச்சி ஒன்று, துன்பத்தை நுகரக்கூடிய உணர்ச்சி ஒன்று, இன்பந் துன்பம் இவ்விரண்டையும் நுகரக்கூடிய உணர்ச்சி ஒன்று ஆக மூன்றுவகை உணர்ச்சிகளில் எந்த உணர்ச்சியை அத்தா ஆன்மா என்று