பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வருமேயேனை வழிமுறைத் தோற்றம் / தோற்றஞ் சார்பின் மூப்புப் பிணிசாக்கா
டவல மாற்றுக் கவலை கையாறெனத் / தவலி றுன்பந் தலைவருமென்ப,
ஊழின் மண்டிலமாச் சூழுமிந் நுகர்ச்சி.

துவாதஸ நிதானங்கள்

"அவிஜ்ஜா பஸ்யா ஸங்காரா, ஸங்காரா பஸ்யா விஞ்ஞானா, விஞ்ஞானா பஸ்யா நாமரூபா, நாமரூபா பஸ்யா ஸலாயதனா, ஸலாயதனா பஸ்யா பஸ்ஸோ , பஸ்ஸோ பஸ்யா வேதனா, வேதனா பஸ்யா தன்ஹா, தன்ஹா பஸ்யா உபாதானா, உபாதானா பஸ்யா பவோ, பவோ பஸ்யா ஜாட்தி, ஜாட்தி பஸ்யா ஜராமரணா, ஸோகபரித்தேவ, துக்கா, தோம்னஸ்ஸ, உபாயாஸா ஸம்பவன்தி.

1.(அவித்தை) பேதைமெ அல்லது பொய்க்காட்சியிலிருந்து ஏதுக்குத் தக்க ஸ்கந்தசேர்க்கையால் குஸல அகுஸல கன்மங்களாகிய ஸம்ஸ்காரங்கள் செய்கைகள் உண்டாகின்றன.
2.(ஸம்ஸ்காரங்கள்) செய்கைகளிலிருந்து மறுபிறப்பை உண்டுசெய்ய கற்பந்தரிக்கும் விஞ்ஞானம் உணர்வு உண்டாகின்றன.
3.(விஞ்ஞானம்) உணர்விலிருந்து நாமரூபங்களாகும் அருவுரு உண்டாகின்றன.
4.(நாமரூபமாகும்) அருவுருவிலிருந்து ஷடாயதனங்களாகும் அறுவகை வாயில்கள் உண்டாகின்றன.
5.(ஷடாதனங்கள்) சப்த, பரிச, ரூப, ரச, கந்த எண்ண ங்களாகும் அறுவகை வாயில்களிலிருந்து பதோ ஊறு உண்டாகின்றன.
6.(பதோ) இன்ப துன்பம் ஊறுகளினின்று வேதனை நுகர்வு உண்டாகின்றன.
7.(வேதனை) நுகர்விலிருந்து தன்ஹா வேட்கை உண்டாகின்றன.
8.(தன்ஹா) வேட்கையிலிருந்து உபாதானம் பற்று உண்டாகின்றன.
9.(உபாதானம்) பற்றிலிருந்து பிறப்புக்கு மூலமான கருமக்கூட்டம் பவோ உண்டாகின்றன.
10.(பவோ) பிறப்புக்கு மூலமாகுங் கருமக்கூட்டத்திலிருந்து ஜாத்தி மறுபிறப்பு உண்டாகின்றன.
11.(ஜாத்தி) மறுபிறப்புண்டாகி அதிலிருந்து ஜய - மூப்பு, மர்ணா - மரணம், ஸோகா - வலியும், பரிதேவா - அழுகையும், துக்கா - துன்பமும், தாம்நாஸே - கவலையும், சம்பாந்தே - ஏக்கமும் ஆகிய துக்கோற்பவ மூலமாம் வினைப்பயன்கள் உண்டாகின்றன.

மணிமேகலை

 பேதைமெய் மீளச்செய்கை மீளுஞ் / செய்கை மீள உணர்ச்சி மீளு,
முணர்ச்சி மீள வருவுரு மீளு | மருவுருமீள வாயின் மீளும்,
வாயின் மீள வூறு மீளு / மூறு மீள நுகர்ச்சி மீளு,
நுகர்ச்சி மீள வேட்கை மீளும் / வேட்கை மீளப் பற்று மீளும்,
பற்று மீளக் கருமத்தொகுதி மீளும் / கருமத் தொகுதி மீளத் தோற்ற மீளுந்
தோற்ற மீளப் பிறப்பு மீளும் / பிறப்புப் பிணி மூப்புச் சாக்காடவல,
மாற்றுக் கவலை கையாரின்றிக் கடையி றுன்ப மெல்லா மீளும்.

துவாதஸ நிதானங்கள்

"அவிஜ்ஜா நிரோதா ஸங்காரா, ஸங்காரா நிரோதா விஞ்ஞானா, விஞ்ஞானா நிரோதா நாமர்பா, நாமரூபா நிரோதா ஸலாயதனா, ஸலாயதனா நிரோதா பஸ்ஸோ , பஸ்ஸோ நிரோதா வேதனா, வேதனா நிரோதா தன்ஹா, தன்ஹா நிரோதா உபாதானா, உபாதானா நிரோதா பவோ, பவோநிரோதா ஜாட்தி, ஜாட்தி நிரோதா ஜராமரணா, ஸோக பரித்தேவ, துக்கா, தோம்னஸ்ஸ, உபாயாஸா ஸம்பவன்தி."

அவிஜ்ஜ - பேதைமெய் - பொய்காட்சி

அறியாமெ ஒழிந்தால் அதினின்றெழும் ஸம்ஸ்காரங்களென்னும் செய்கைகள் ஒழியும்.

ஸம்ஸ்காரங்களென்னும் செய்கைகள் ஒழியின் அதனின்றெழும் நாமரூபங்களென்னும் அருவுரு ஒழியும்.

நாமரூபங்களென்னும் அருவுரு வொழியின் அதனினின்றெழும் சடாயதனங்கள் என்னும் அறுவாயல்களாகிய மெய், வாய், கண், மூக்கு,