பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சம்மா சங்கப்போ - நல்லூக்கம்

ஓ! சகோதிரர்களே! இவ்விடத்தில் நல்லூக்கத்தை ததாகதன் விளக்குகின்றேன்.

அதாவது.- பகையில்லா வாழ்க்கையிலிருக்க வேண்டும் என்னும் எண்ணம், நமதுள்ளத்தில் பொறாமெயை நிலைக்கவைக்கக் கூடாதென்னும் எண்ணம், ஒருவருக்குத் தீங்கு செய்யலாகாதென்னும் எண்ணம், தீங்கான குணங்களை உள்ளத்திற் குடிக்கொள்ள வைக்கலாகாதென்னும் எண்ணம், முன்பு பிறனுடைய சுகத்தைக் கருதிப் பின்பு தன்னுடைய சுகத்தைக் கருதும் எண்ணம்.

இத்தகைய எண்ணங்கள் விருத்தியடைவதற்கு மனையறப் பற்றுக்கள் தடையுண்டாக்கிக்கொண்டு வருமாதலின் சாதுசங்கத்திற் சேருந் துறவறத்தை விரும்பும் எண்ணம் இவைகளையே நல்லூக்கம் என்னப்படும்.

உதாரணமாக ஒரு குடியானவனோ அவன் புத்திரனோ மற்றும் யாவனேனும் ததாகதர் போதனையைக் கேட்டு அதனிலையை தெரிந்து கொள்ளுவானாயின் அவன் பின்வருமாறு சிந்திக்க எண்ணங்கொள்ளுவான். அதாவது, இந்த சமுசார வாழ்க்கையிலிருப்பது சிறையிலிருப்பதென்றும் முள்ளுகள் நிறைந்த காட்டிலிருப்பதென்றும் குப்பைகள் நிறைந்த குழியிலிருப்பதென்றும் எண்ணி சமுசாரச் சிறையினின்றும் முட்காட்டினின்றுங் குப்பைக்குழியினின்றும் விலகுவதற்கான முயற்சியினிற்பான்.

தன் தேகத்தாலும், நாவினாலும், எண்ணத்தினாலும் உண்டாகிக் கொண்டுவருந் துற்கருமப் பற்றுக்களை மனையறத்திருந்தே பற்றறுக்க முயலுவான். அம்முயற்சியானது சமுசாரச்சிறையின் இடுக்கத்தாலும், முட்காட்டின் குத்துதலாலும், குப்பைக்குழியின் துந்நாற்றத்தினாலுங் கெட்டு கீழிழிவான். மறுபடியும் துறவறத்தோராம் சங்கத்தோரை நோக்குவான், நோக்கி சிரசை மொட்டையடிப்பதில் பயனென்னை. தாடியை சிறைத்துவிடுவதில் பயனென்னை. மஞ்சளாடையைப் புனைவதிற் பயனென்னை என்று எண்ணுவான். அவ்வெண்ணங்கள் யாவும் முந்நூக்கத்தால் மடிந்து மனையறத்தோர் பல கஷ்டத்தோடும் சம்பாதித்தப் பொருட்கள் யாவையுங் கள்ளர் கொண்டு போவார்கள், வேற்றரசன் பரித்துக் கொள்ளுவான், கறையானென்னுஞ் சிதல் உண்டுவிடும்.

ஆனால் முடியைப் பரித்துவிட்டும், தாடியை சிறைத்துவிட்டும், பட்டாடைகளை அகற்றிவிட்டும், மஞ்சளாடை ஏற்று நான்குவாய்மெயாம் நல்லூக்க பொக்கிஷத்தை சேர்த்துவருகிறவர்களாதலின் அப்பொக்கிஷத்தைக் கள்ளர்களேனும், வேற்றரசரேனும், சிதல்களேனும் அழிப்பதற்கு முடியாதென்று உணர்ந்து அவ்வழியாய்ப் பொருளை சேர்க்கும் ஊக்கத்தால் அரசாங்கத்திருந் தேனும், பெரிய குடும்பத்திலிருந்தேனும், சிறந்த வியாபாரத்திலிருந்தேனும் விடுபட்டு துறவறமாம் தன்மசங்கஞ்சார்ந்து சிரம் மொட்டையடித்தும், தாடியை சிறைத்தும், மஞ்சளாடை போர்த்தும் பொன் போன்ற பிரகாச பரிசுத்த வாழ்க்கையில் நிலைப்பான். பேராசையற்று, கோபமற்று லோபமற்று நல்லூக்கம் உடையவனது உலகப் பொருட்களை கள்ளர் பரிக்கினுங் கவலையற்று ஆனந்தத்திலிருப்பன்.

காரணம் யாதெனில், உள்ளப் பொருளாம் நல்லூக்கத்தினிற்பவன் உலக பொருளின் பற்றுக்களற்றுக்கொண்டே வருவதினாலேயாம். அதுவுமன்றி அசைவிலா நல்லூக்கத்தினின்றவன்பால் எத்தகைய இடுக்கண்கள் தோன்றினும் உலகப் பொருளழியினும் உள்ளங்கலங்கானென்பது திண்ணம். கொடிகளானது வெள்ளப் பெருக்கத்தினுந் தளராது ஓங்கி நிற்பதுபோல் நல்லூக்க மிகுத்தவனை பல்வகை இடுக்கங்கள் வந்து மோதினும் உள்ளங் கலங்கானென்பது துணிபு. யுத்தகளத்திற் பாய்ந்த யானையினதுடல் முழுவதும் அம்பின் கும்புகள் நிறைந்து தைக்கினும் நிலைபிரழாது நிற்பதுபோல் நல்லூக்க மிகுத்தோன் உள்ளத்தில் நீடிய இடுக்கண்கள் தோன்றினும் நல்லூக்க நிலை தளரானாவன்.

ஓரரசனானவன் குடிகளைக் காக்கும் ஊக்கத்திலும் படைகளை பயிற்றும் ஊக்கத்திலும் அமைச்சர்களை நிதானத்தமைக்கும் ஊக்கத்திலும் மிகுத்திருப்