பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 253

பானாயின் அவனை நோக்கும் வேற்றரசர்கள் அஞ்சி நிற்பர். அதுபோல் நல்லூக்க மிகுத்த உள்ளத்தின்கண் பலவகை இடுக்கண்களும் சார்வதற்கஞ்சி ஒதுங்கும் என்பதாம்.

விருட்சங்களானது தன் முயற்சியின்றி வளர்ந்து வளர்ந்த இடத்திற்கெடும், மக்களும் அவ்வகை முயற்சியற்றிருப்பின் மரமென்னத்தகும். மக்களுள் முயற்சியின் மிகுத்து மாளாநிற்கின் மக்களென்னும் பெயர் மாறி தேவர் களென்னும் பெயரைப் பெறுவார்கள். இதையே நல்லூக்கப் பலனென்னப்படும்.

சம்மா வாசா - நல்வசனம்

ஓ! சகோதிரர்களே! இனி நல்வாழ்க்கையை ததாகதன் விவரிக்கின்றேன்.

1.அதாவது, (பொய்சொல்லாமெய்) ஒரு மனிதன் பொய்பேசுவதை விடுத்து பொய்யினின்று நீங்கியிருப்பானாயின் அவன் சத்தியத்தைப் பேசுவான். உண்மெயில் சிந்தனை உடையவனாய் இருப்பான். உண்மெயில் பற்றுள்ளவனா வான். சகலராலும் யோக்கியனென மதிக்கப்படுவான்.

அத்தகைய சத்தியவானை ஜனக்கூட்டங்களிலாவது குடும்பங்களிலாவது காணுவார்களானால் ஒவ்வொருவரும் அஞ்சுவார்கள். நியாயாதிபதியினிடம் அவனைக்கொண்டுபோனபோதிலும் தனக்குத் தெரிந்ததைத் தெரியுமென்றும், தெரியாததைத் தெரியாதென்றுங் கூறுவான். அதினால் நியாயாதிபன் சத்தியவாக்கனைநோக்கி நல்ல மனிதனே, நீர் கண்டதைச் சொல்லவேண்டுமென்றால் மன உறுதியுடன் அஞ்சாமல் நான்கண்டதைச் சொல்லுவேன் காணாததைச் சொல்லமாட்டேன் என்பான். அவன் மற்றவர்களுடைய சுகத்துக்கேனுந் தன்னுடைய சுகத்துக்கேனும் மெய்யைப் பேசுவானேயன்றி பொய்யைப் பேசமாட்டான். இத்தகைய மெய் வார்த்தையைப் பேசுதலினால் தனக்குச் சுகமும் மதிப்பு முண்டாவதுமன்றி சகல சீவர்களுக்குந் தீங்கை உண்டு செய்யாதவனாகின்றான்.

2. (புறங்கூறாமெய்) அதாவது, ஒருவருக்கொருவர் புறங்கூறுதலையும் மற்றவர்களைப் புறங்கூறி மனத்தாங்கலை உண்டு செய்தலையும் எதிரில் கண்டபோது ஓர் வார்த்தைக் காணாதவிடத்தோர் வார்த்தைப் பேசுவதையும் அகற்றி நிற்பானாயின் மற்றவர்களை தூஷிப்பதைவிட்டொழிவான். ஒருவருக்கொருவர் கோட்சொல்லி கொடூரமுண்டு செய்யும் வாக்கை அகற்றுவான். இத்தகையச் செயல்களால் ஒருவருக்கொருவர் பகைத்து பிரித்துள்ளவர்களை சேர்த்தும் தன் வார்த்தையால் மற்றவர்களுக்கு அன்பை வளர்த்தியும் புறங்கூறாச் செயலால் ஆனந்தப்பரவசத்திலிருப்பான்.

தருமத்தைக் கூறிக்கொண்டிருப்பவன் ஓர்கால் மறந்தும் புறங்கூறாமலிருப் பானாயின் ஆறுதலடைவான். தனது குடும்பத்தோரையேனும் தன்னேயர் களையேனுங் கண்டவிடத்தில் புகழ்தலுங் காணாதவிடத்தில் இகழ்தலுமாகியச் செயலற்றவன் அழியா தருமத்தைச் செய்ததற்கு ஒப்பாவான். அங்ஙனமின்றி அறிந்தோரைக் கண்டயிடத்து புகழ்தலும் காணாவிடத்தி லிகழ்தலுமாகியப் புண்ணாக்குடையவன் உலகத்தில் சீவித்திருப்பதைப்பார்க்கினும் சீவனற்று விடுவானாயின் சத்தியதருமத்தில் நிலைத்தவனாவான்.

சத்தியதன்மத்தில் நிலைத்தவன் தனது நேயனை கண்டயிடத்தி லிகழ்தலின்றி காணாவிடத்திற் புகழ்ந்து நிற்பன்.

ஒருவன் தன்னிடத்திற் பேசிவிட்டுப் போம்போதே யவனையிழிகூறலும், அவன் மறைந்தபின் அவனைப்பழி கூறலுமாகிய புறங்கூறலை சத்தியதன்மம் உணர்ந்தவன் மறந்தும் புறங்கூறான்.

3. (கொடுஞ்சொற்) கூறாமெய் அதாவது இனியவைகூறல், ஒருமனிதன் சுடச்சொல்லுங் கொடூரவார்த்தையைப் பேசுதலிலிருந்து மீண்டவன் மறுபடியும் அக்கொடுஞ்சொற் கூறுதற்கஞ்சுவான். செவிக்குளிரும் வார்த்தை பேசுவான். இதயத்தில் அன்பு பதியும் வார்த்தையைப் பேசுவான். அன்புடன் பேசுவான். சந்தோஷம் உண்டாகும்படி பேசுவான். யீடேற்றத்தைத் தரும்படியான வார்த்தைகளைப் பேசுவான். ஏனித்தகைய வார்த்தைகளைப் பேசுவானென்னில் அவனென்னை அவதூராக வைதான், அடித்தான், என்னை