பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயம் / 17


அருளாழி என்னும் தருமச்சக்கரத்தை உருட்டுவதற்கு 21-வயதில் துறவடைந்து 64-வருடகாலம் உலகெங்கும் சுற்றி தருமோபதேச ஞான நீதிகளைப்போதித்து வந்த காலங்களில் ஒவ்வொருவரும் சுத்த இதயமுடையவர்களாய் தெளிவடைந்து மிக்க சுயக்கியானிகளானார்கள்.

உலகெங்கும் சுயக்கியானத்தை நிலை நிருத்தி விட்டு தனதுதேகம் உலகத்தில் மறையும்படியான காலத்தை எல்லோருக்குந் தெரிவித்து 85-வயதில் கங்கைக்கரை என்று வழங்கும் பேரியாற்றங்கரை பல்லவநாட்டில் சித்திரபானு வருடம் மார்கழி மாதம் 28-வது நாள் செவ்வாய்க்கிழமை பௌர்ணமி, திதி, திருவாதிரை நட்சத்திரம், துலாலக்கினத்தில், தனது வலது கரத்தை முடியின் கீழ்வைத்து இருகால்களையும் ஆனந்தசயனமாக்கி பஞ்சேந்திரிய தாரையை சோதிமயமாகக்கழட்டி நிருவாணதிசை அடைந்தார். அந்த நேரத்தில் காற்று அடங்கிற்று, சமுத்திரவோசை நின்றது, பட்சிகளும் மிருகங்களும் மவுனமுற்றன.

உமது பொற்றாமரைப்பாதம் மறைந்து விட்டதே என்று துக்கிப்பதற்குப் பகரமாக பூமியதிர்ந்தது, மநுட சீவர்கள் உலகத்தில் அஞ்ஞான இருள் மூடுமென்னும் துக்கத்தினால் புலம்பினார்கள்.

இவ்வகை மகிமை தங்கிய அவரது சரித்திரத்தை சுருக்கமாக எழுதப்பட்டிருக்கிறது இதன் விரிவை சம்பூரணமாக - சரித்திர ஆதரவின் படிக்கு பின்பு வெளியாகும் புத்தகத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

அந்தந்த தேசங்களில் அவருக்குண்டாகிய மகிமைக்கும் காட்சிக்கும் தக்கதுபோல சிறு வயதில் அரசாங்கத்தை வெறுத்தபடியால் ஆசை நரைத்தக் கிழவனென்றும், புட்டா புத்தாவென்றும், அவருடைய மோட்ச அரசுக்கு புத்தேளென்றும், மோட்ச ராட்சியத்திற்கு புத்தேளுலகென்றும், அவருடைய போதனைகளை எழுதி வைத்திருக்கும் கட்டுக்கு புத்தகமென்றும், அவருடைய இனிமையான போதனைக்குப் புத்தெனென்றும், அவர்போதனையை அநுசரித்து நடக்கும் பிள்ளைகளுக்கு புத்தறரென்றும், மநுக்களின் அஞ்ஞான இருளை அகற்றினபடியால் பகவனென்றும், மநுட தேகமாகிய கடத்துள்ளிருந்த ஞான ஒளியை விரித்தபடியால் கடவுளென்றும், உலகமுழுமையும் தருமச்சக்கரத்தில் ஆண்டுவந்தபடியால் ஆண்டவனென்றும்.

குமரப்பருவத்தில் துறவடைந்தபடியால் குமரகுரு குமாரதேவரென்றும், அவருக்கு நிகரான சற்குரு உலகில் ஒருவரும் இல்லாமையால் விநாயகன் என்றும், ஒரு தேசங்களை விட்டு மறுதேசங்களுக்குப்போவது ஒருவருக்குந் தோன்றாமலிருந்தபடியால் மாயோனென்றும், மவுனத்தெளிவுற்றபடியால் பிரமமென்றும், சைவமென்னும் தன்னையறிந்தபடியால் சிவமென்றும், அவர் போதனா சக்த்தி உலகெங்கும் பறவி இருந்தபடியால் திருமால் என்றும், அவர் சதுரகிரி என்றும் இந்திரகிரி என்றும் வழங்கிவரும் மலையிலிருந்துக் கொண்டு ஞான நீதிகளைப்போதித்து வருங்காலத்தில் தென்தேசத்திலிருந்து அவருடைய போதனையைக் கேட்கவருகிறவர்கள் அவரை வடக்கு மலையான், என்று வடதேசத்திலிருந்து அவருடைய போதனையைக் கேட்க வருகிறவர்கள் அவரை தட்சணமூர்த்தி என்றும்.

அவர் நிருவாண திசையடைந்தவுடன் ஏழு அரசர்கள் அவருடைய அஸ்திகளைக்கொண்டு போய் அவைகளின் பேரில் ஏழுகோபுரங்களைக்கட்டி வைத்தபடியால் ஏழு மலையானென்றும், பொருமை என்னும் ஆயுதத்தினால் உலகெங்கும் செயித்து வந்தபடியால் தண்ணாயுதனென்றும், சாக்கையர் குலத்தில் பிறந்தபடியால் சாக்கையரென்றும், எக்காலத்தும் பெருங்கூட்டத்துடன் இருந்தபடியால் சைனரென்றும், அவருடைய போதனையை எல்லோரும் ஏற்றுக்கொண்டிருந்த படியால் சாத்தனென்றும்.

தரும நீதிகளை எங்கும் நிலை நாட்டி வந்தபடியால் அறவாழியன், அறக்கடவுள், அறன், அறப்பளீசனென்றும் அறிவை விருத்தி செய்யக்கூடிய கற்பனைகளைக் கொடுத்த படியால் - அறியென்றும், அவர் அடியார் போதித்துள்ள முதநூலுக்கு அறிச்சூடி என்றும்,