பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 261

அவ்வகையால் ஆழ்ந்து சிந்திப்பவனும், தேகத்தின் செயல்களை ஆராய்பவனும், தேகத்தில் வெறுப்படைந்த புண்ணியனும் தனது இடைவிடா விசாரிணையினால் பத்துவகை நற்குணங்களை அடைகின்றான்.

1.வெறுப்பும் விருப்புமற்ற நிலையே இடமாகக்கொண்டு நிற்பன்.
2.பயத்தையும் ஆவலையும் வெல்லுவான். ஆவலுக்கும் பயத்திற்கும் இடங் கொடான்.
3.குளிர்ச்சியையும், உஷ்ணத்தையும், பசியையும், தாகத்தையும் நோக்காமல் நிற்பன்.
4.கொசுக்களாலும், பூச்சுகளாலும், பல ஜெந்துக்களாலும் உண்டாகுந் துன்பங்களைத் துன்பமாகக்கருதாமலும், மற்ற ஜெந்துக்களால் உண்டாகும் இன்பங்களை இன்பமாகக் கருதாமலும் இருப்பன்.
இத்தகைய சிந்தனா மிகுதியாலும், விசாரிணைப் பூர்த்தியாலும் காம வெகுளி, மயக்கங்களற்று சாந்தம், ஈகை, அன்பு பெருகி சுழிமுனையில் சதாவிழிப்பில் இருக்குங்கால் மனதின் எண்ணத்திற்கு ஆதாரமாயிருந்த மூச்சானது மனத்தின் நல்லெண்ணமிகுதியால் அதனைப்பின்பற்றி சுழிமுனைத் திறந்து உள்ளடங்கியபோது அவனுக்குப் பலவிதமான தொனிகள் செவியில் சப்திக்கும். அவ்வகைத் தொனியையும் ஓர் பொருளாகக் கருதாமல் நிற்பான்.
5.அருகிலுந் தூரத்திலுமுள்ள சப்தங்களைப்போல் ஐம்பொறிகள் அடங்கியவிடத்து நாதவொலிகள் தொனிக்கும்.
6.தன்னிற்றானே தோற்றிய நாதவொலி அடங்கியவுடன் வெளியிலுள்ளப் பொருட்கள் யாவுந் தனக்குள் தோன்றும்.
7.அவ்வகைத் தோற்றத்தால் செல்காலம், வருங்காலமென்னும் முக்காலச் செயல்களையுங் கூறுவான். ஒவ்வொருவர் இதயத்தில் எண்ணும் எண்ணங்களையும் அறிந்து சொல்லுவான். ஆசாபாசங்களால் தனக்குள் தோன்றும் எண்ணங்கள் எவ்விடத்தில் அடங்கியதோ அதே இடத்தில் சருவமுந் தோன்றும். அவ்வகைத் தோற்ற இயல்பால் எண்பத்தொன்பது சித்துக்களும் வாய்க்கும்.
8.முன்பிறப்பிற்கு ஆதாரமான கன்மங்களையும், முன் பிறப்பையுங் கண்டறிவான்.
9.ஊனக்கண் பார்வையற்று ஞானக்கண்ணின் பார்வையால் சருவதோற்றங்களும், ஒடுக்கங்களும் முன்வினையின் பயனென்றறிந்து சருவ சீவர்களுக்கும் நீதிநெறிகளைப் புகட்டுவன்.
10.இத்தகைய ஞானக்கண் பெற்று சதா விழிப்பிலிருப்பவன் பிறப்பென்னுஞ் சமுத்திரத்தைக் கடப்பான்.

மௌனதெரிசனம்

அருமெயென்ற மௌனத்தை மூட்டு மூட்டு, வடங்காத கரணமது வடங்கிப்போம்,
இருமெயென்ற விந்திரிய மாண்டுபோகு, மிருள்மலம்போம் திரோதையில்லை மயக்கம் நீங்கும்,
வெருவுபல கோடிகன்மங் கணத்தினீங்கும், வெளியினுள்ளே வொளிதோன்றும் நாதங்கேட்கும்,
உரிமெயுடன் மௌனசித்தியாகவாக, உருவமுனக் 'கானந்த உருவமாமே.

மச்சமுனிவர்

விழித்து மிகப் பார்த்திடவே பொறிதான் வீசும்,
முச்சந்தி வீதியிலே தீபந் தோன்றும்,
சுழுத்தியிலே பொசாம லொருமனதாய் நின்றால்,
சுத்தமேன்ற நாதவொலிக் காதில் கேட்கும்,
இழுத்ததென்று நீகூடத் தொடர்ந்தாயானால்,
எண்ணெண்ணா பிறப்பிறப்பு எய்தும்பாரு,
அழுத்தி மனக் கேசரத்தி நின்று மைந்தா,
அப்பனே லலாடத்தில் தூங்குவாயே.

ஞானிகள் நிலை

கந்தமுதலைம்புலனை அடக்கி நாப்பண், / கருத்தமைத்து சாம்ப விநோக்கதனை மேவி,
சிந்தையுறத் தான் சரிக்குமிடங்கடன்னில், / செறிந்திடைய திருந்திணையா நிட்டைகூட,
வந்தெழும்பு மணிசலதி சிலம்பு சங்கு, / வண்டிசையாங் குழல்பேரி முழக்கங்காண,
இந்தவகை சிவயோகத் திருப்பான்ஞானி, / இனியவாக்குப் பிறவியுமுண்டென்னலாமோ.