பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266 / அயோத்திதாசர் சிந்தனைகள்

4. பிரக்கமாப்பதானா என்னும் நான்கு தானங்களே மன அமைதிக்கும் இதய சுத்தத்திற்கும் பாதைகளென்னப்படும்.

அதாவது, 1. தங்களுக்குள் கெட்ட எண்ணங்கள் உண்டாகாமல் தடுக்கும் முயற்சியிலிருத்தல் 2. தங்களுக்குள் உள்ள கெட்ட எண்ணங்களை நீக்க வேண்டுமென்று சதா முயற்சி செய்தல் 3. தங்களுக்குள் முன்னில்லாத நல்லெண்ணங்களையும் நன் முயற்சிகளையும் இடைவிடாது விருத்தி செய்தல் 4. தங்களுக்குள் உண்டாயிருக்கும் நல்லெண்ணங்களையும் நன்முயற்சிகளையும் மேலும் மேலும் விருத்தியடைய முயற்சித்தல் இன்னான்குமே மன அமைதிக்கும் இதய சுத்தத்திற்கும் நெறுங்கிய பாதைகளாகும்.

இவைகள் இடைவிடா பழக்கத்திற்கும் விருத்திக்குங் கொண்டு வருவதே நற்றியானம், நற்சிந்தனை என்னப்படும். இத்தகைய நல்லறமாம் ஒழுக்கத்தி னாலும், பரிசுத்த வாழ்க்கையினாலும், உணர்ச்சிகளைத் தன்னிடத்தில் வசப்படுத்திக் கொள்ளுவதினாலும் விவேகவிருத்தி அடைந்த மாணாக்கனுக்குத் தனித்தவிடத்திற் செல்லவேண்டிய நோக்கம் பிறக்கும்.

அதினால் காடுகளிலேனும், மரத்தினடியிலேனும், மலைக்குகை களிலேனும், அடர்ந்த தோப்புகளிலேனுஞ் சலனமற்று அடங்கி ஒடுங்குமிடந் தேடுவான். இவ்வகைத் தேடி ஓடி ஓரிடந் தங்கி பிச்சை பாத்திரத்தாலேனும் தானத்தாலேனுங் கிடைக்கும் அன்னத்தை ஒருவேளை புசித்து சம்பளம்போட்டு உட்கார்ந்து சிரநிமிர்ந்து நீ தானமென்னுஞ் சுழிமுனையாம் உள்விழி பார்வையால் மனதை அமைதியடையச் செய்வான். ஞானவாசிட்டம் மன மணிபேதச் சேற்றின் மறைந்தொருவருக்குந் தோன்றா கனமுறுவிவேக நீராற்கழுவினாற் சித்திகாட்டும் வினவுறுவிவேகவன் பான்மெய்மெயை மதியாற்கண்டு சினமுறுபொறியை வென்று தீர்வரும் பிறவிதீர்வாய்.

1. இத்தகைய சாதனமுடையோன் முன்பே காம இச்சையைத் தவிர்த்திருப்ப வனாதலின் காம அவாவினின்று விலகி பரிசுத்த இதயமுடையவனாவான்.

2. இச்சாதனத்தால் முன்பே கோபத்தைத் தவிர்த்தவனாதலின் குரூரச்சிந்தையை அகற்றி பரிசுத்த இதயமுள்ளவனாவான்.

. இச்சாதனத்தால் முன்பே பிராந்தியின்று நீங்கி இருப்பவனாதலின் சதா விழிப்பிலும் ஜாக்கிரதையிலும் விருத்தி அறிவிலும் நின்று பிராந்தியில் பற்றற நீங்கி ஒளியில் அன்புகூர்ந்து பரிசுத்த இதயமுள்ளவனாக விளங்குவான்.

4. இச்சாதனத்தால் அமைதியற்ற வியாகூலத்தை முன்பே தவிர்த்திருப்ப வனாதலின் மனம் மாறாமலுஞ் சாந்தம் பேராமலும் வியாகூலத்தினின்று விலகி நித்யானந்தனாகி பரிசுத்த இதயமுள்ளவனாக விளங்குவான்.

5. இச்சாதனத்தால் மனமாறுதல்களை முன்பே தவிர்த்திருப்பவனாதலின் நன்மெயாம் உண்மெயில் அன்பை வளர்த்தி பரிசுத்த இதயமுள்ளவனாக விளங்குவான். ஆகிய இவ்வைந்து தடைகளை முன்பே களைந்து எறிந்து விட்டதினால் மனதின் சுய நிலையை அடையப் பிரயத்தினப்படுவான்.

அதாவது, மயக்கத்தினின்று விடுபட்டவனாகியும் உணர்ச்சிகளாலாய எண்ணங்களுக்கு அதீதப்பட்டவனாகியும் துர்நடத்தைகளுக்கு அப்புறப்பட்ட வனாகியும் இருப்பதுடன் தன்னை இவைகளினின்று விலக்கிக் கொண்டு மனத்துடனும் ஆராய்ச்சியுடனும் கூடி மன அமைதியாம் முதல் தியானமாகும் பிரீதி, சுகா, சித்த, ஏக்கதா என்னுஞ் சந்தோஷமயம், ஏக சிந்தனை இவைகளின் உட்பிரவேசிப்பான்.

இம்முதல் தியானத்தில் 1. காமம் 2. கோபம் 3. பிராந்தி 4. அமைதியற்ற வியாகூலம் 5. மனமலைவு இவ்வைந்தும் ஒழிந்து

1. மனனம் 2. ஆராய்ச்சி 3. சந்தோஷம் 4. ஆனந்தம் 5. ஏக சிந்தை ஆகிய ஐந்தும் உதிக்கின்றன.

இரண்டாந் தியானத்தில், மனனத்தையும் ஆராய்ச்சியையுந் தவிர்த்து சாந்தமுடையவனாகியும் ஆனந்தமுடையவனாகியும் இருப்பான்.