பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 267

அவைகள் அடக்கப்பட்டிருக்குஞ் சாந்தியும் ஏக சிந்தனையும் உதிக்கும். இதை பிரீதி, சுகா, ஏககதா என்னப்படும் இரண்டாந் தியானத்திலிருப்பான்.

மூன்றாந் தியானத்தில் மேற்கண்ட சந்தோஷத்தினின்றுக் கொண்டு நித்தியானந்தம் உடையவனாகியும், சதா விழிப்புள்ளவனாகியும், விவேகவிருத்தி உள்ளவனாகியும் மனமணியின் சுயப்பிரகாச பேரின்ப சுகத்தைத் தானே அனுபவிக்கும் மூன்றாந்தியானத்திலிருப்பான்.

நான்காவது தியானத்தில் அவனது சுகதுக்கங்களை விலக்கி பற்றற்று மனநிறைவில் சென்று துக்கமுஞ் சுகமுமற்றிருக்கின்ற மனநிறை அல்லது உபேட்சை சித்த ஏககதா என்னும் பரிசுத்த நிலையாம் நான்காந் தியானத்திலிருப்பான்.

ஓ! சகோதிரர்களே! முன்பு கூறியுள்ள நான்குவகை தியானங்களில் பூர்த்தியான நிலை அடைந்தவுடன் ஐந்து வகை பாவனையில் நிலைப்பன்.

1. மைத்திரீபாவனா : அதாவது, உலகில் தோன்றியுள்ள சருவ சீவர்களும் ஆனந்தத்தில் வாழ்கவேண்டுமென்று பாவிப்பான். சீவராசிகள் யாவும் பேராசை, துக்கம், வியாதி, துராசையினின்று மீளவேண்டுமென்று பாவிப்பான். சருவ மநுட சீவர்களும் பிறவி என்னும் நரகவாதனையில் சுழன்று திரியாமல் சுகநிலை அடையவேண்டுமென்று பாவிப்பான்.

2. கருணாபாவனா : ஏழைகளும், பிணியாளரும் செல்வம் நிறைந்து சுகதேகிகளாக வாழவேண்டுமென்று பாவிப்பான்.

3. முதிதபாவனா : ஒவ்வோர் மநுடசீவர்களும் தங்கள் தங்கள் நல்வினைகளைப் பெருக்கி நற்பயனை அடையவேண்டுமென்று பாவிப்பான்.

4. அசுபபாவனா : சரீரமானது பலவகைக் குற்றங்களால் ஆக்கப்பட்டதென்றுஞ் சாணக்குவியலில் தோன்றி வளருகின்ற புழுக்களைப் போல் கருப்பையில் உண்டாகிறதென்றும், ஒன்பது துவாரங்களின் வழியே ஒப்பத்தகாத கசிவு ஓயாமல் சொறிகிறதென்றும் ஊற்றை சாரளத்தைப்போல் வெறுக்கத்தக்க நாற்றத்தை அது வெளிப்படுத்துகிறதென்றுஞ் சரீரத்தின் கால அளவு மின்னிலைப்போன்றதும் நுரையைப்போன்றதும் நீரிலிட்ட உப்பைப் போன்றதும் காய்ந்தப் புல்லைப்பற்றிய நெருப்பைப் போன்றதும் கடலின் அலையைப்போன்றதும் புல் நுனியின் மீதுள்ளப் பனித்துளியைப்போன்றது மாகிய நிலையற்ற தேகமென்று ஒவ்வோர் மநுட சீவர்களும் ஆழ்ந்து ஆயுளைப்பற்றி அஞ்சவேண்டுமென்று பாவிப்பான்.

5. உபேட்சபாவனா : சகல உயிர்களையுஞ் சமமாகப் பாவித்தலும் வேண்டுதல் வேண்டாமெ என்னும் வெறுப்பு விருப்பின்றி இருத்தல் வேண்டுமென்றும் பாவிப்பான்.

நான் என்பதும் வீணெண்ணம். நானல்ல என்பதும் வீணெண்ணம். நான் இருக்கின்றேனென்பதும் வீணெண்ணம். நான் இல்லை என்பதும் வீணெண்ணம். நான் ரூபமுள்ளவனென்பதும் வீணெண்ணம். நான் ரூபமில்லாதவனென்பதும் வீணெண்ணம்.

ஓ! சகோதிரர்களே! வீணெண்ணங்கள் விரிவதே பிணி. வீணெண்ணங்கள் விரிவதே துக்கம். வீணெண்ணங்கள் விரிவதே பிராந்தி. வீணெண்ணங்கள் விரிவதினின்று குறிகி வீணெண்ணங்களில் ஓடாமல் மீண்டவன் எவனோ அவனையே ஞானவரம்பிட்ட மவுனி என்று கூறத்தகும்.

இம்மவுனி மறுபடியும் பிறக்கவுமாட்டான், தோன்றவுமாட்டான் இறக்கவுமாட்டான். ஏனெனில் வீணெண்ணங்களும், வீணவாக்களும், வீண் வார்த்தைகளும், வீண் செயல்களுமற்று அதனினின்று எப்போது மீண்டானோ அப்போதே வீணெண்ணங்களுக்கும், வீணவாக்களுக்கும், வீண் வார்த்தைகளுக் கும், வீண்செயல்களுக்கும் ஏதுக்களில்லாமல் சருகு புழுப்போல் அடங்கி விடுகின்றான்.

அதாவது சருகு புழுக்களானது சிறு புழுக்களா இருக்குமளவுந் தவிழ்ந்து இலைகளைப் புசித்து ஊர்ந்து முதிர்ந்தகாலத்தில் தான் பிடித்துத் திரிந்த இலையால் தன்னை மூடிக்கொண்டு தன்னாவின் பசையால் சுழன்று தன்னுரு