பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 269

வேண்டியதென்றும், தன்னிற்றானே பற்றறுத்து கண்ட காட்சியால் புளியம்பழம் வேறு ஓடு வேறுபோல் தேகம் வேறு ஒளி வேறாய் தானே சுயம்பாதலும், தனக்குள் சகலமுந் தோற்றுதலுஞ், சுயம்பிரகாச தூய உடம்பினனாதலும், இயற்கையாகிய உணர்வில் நிற்றலும், பாசபந்தங்களினின்று நீங்கும் இயல்பிலும், அன்பின் மிகுதியிலும், சதா ஆறுதலிலும், பேரின்பத்திலும் நின்று எண்குணத்தனாகி சகல துக்கங்களுஞ் சாறாது நிற்பதற்கேயாம். அதாவது தண்மெயாம் சாந்தபெருக்கத்தால் தேகதேயுதிரண்டு குளிர்ந்துள்ளமெயால் கற்பாறையைத் தீபிறக்கக் காய்த்து இவனை அதன்மீது கிடத்தின போதிலுங் குளிர்ந்த பாறையில் படுத்திருப்பதுபோல் காண்பான். பாசபந்தங் களினின்று நீங்கி புளியம்பழத்தைப்போலும் ஓட்டைப்போலும் உள்ளவனாதலின் இவன் தேகத்தின்மீது பலர் கூடி அம்பு கும்பலை எய்தபோதிலும் யாதொரு உபத்திரவுமின்றி ஆனந்தத்திலிருப்பன்.

ஞான வாசிட்டம்

சர மலர்கள் நெய்தல் மலர் மழையை ஒக்கும், / தழற்பள்ளி பனிநீரிற் சயனமொக்கும்,
சிர மறிதல் சுகமுறு நித்திறையை ஒக்கும், / தெகமறிவ துக்கலவைச் செரிப்பூச்சொக்கும்,
நிரவறிய நாராச மறுமம் பாய்தல் / நெடுங்கோடை சிவிரியினன் னீரையொக்கும்
விரகறிய விடயமெனும் விடை விடூசி / விவேக மிகுத்தவர்க்கலால் விலக்கொணாதே.

திரிக்குறள் புத்தர் வாழ்த்து

 
கோளில் பொழியில் குணமிலவே எண்குணத்தான், / தாளை வணங்காத்தலை.

சூளாமணி

 
காதலரில் பிழையாராய்க் கள்ளுன்றேன் கடிந்தகற்றி
யிதலே டில்லிருக்கு மிளம்பிடியர் முதலாயா
ரோதின முன்தேவரா உயர்ந்தவர்க்குள் உயர்ந்துளராய்
சோதியும்பே ரெண்குணமுந் துப்புரவுந் துன்னுவரே.
இமையாத செங்கண்ணர் இரவறியார் பகலறியா
ரமையாத பிறப்பறியா ரழலறியார் பனியறியார்
சுமையாகி மணிமாலை சுடர்ந்திலந்து நெடு முடியா
ரமையாத தல்லுலகி னகைமணிப் பூ ணமரரே.

சீவகசிந்தாமணி

சோலையினரும்பித்திங்கட் சுடரொளி பூத்ததேபோல்
மாலையுங் கலனு மீன்று வடகுமுந்துகிலு நான்று
காலையும் இரவும் இல்லா கற்பக மரத்தி நீழற்
பாலையாழ் மழலை வேறாய்ப் பழமணிக் கொம்பினின்றாள்
 
உலகுணர் கடவுளை உருகெழு திறலினை
நிலவிரி கதிரணி நிகரறு நெறியினை
நிலவரி கதிரணி நிகரறு நெறியினை
னலர் கொழு மரை மலரடி யிணை தொழுதும்

மணிமேகலை

முற்று முணர்ந்த மூதறிவாளன்.

இவன் பெருக்கிக்கொண்ட அன்பின் மிகுதியால் மற்றவர்களின் கொ டுஞ்சினமும், குரூரச்செயலும் இவன் அருகில் நெறுங்காது. இனிய மொழியால் நீதிநெறிகளாம் அழியாச் செல்வத்தை அன்னியர் செவிகளிலோதி ஆதரிப்பவனாதலின் அவிவேகிகளால் இவன் செவியில் ஈயத்தைக் காய்த்து விட்டபோதிலும் அதன் துன்பமின்றி சுகந்த தைலத்தை செவியில் விடுவது போலிருப்பன். தனக்குண்டாகுஞ் சகலபற்றுக்களையும் அறுத்தெரிந்ததுமன்றி மற்றவர்கள் பற்றுக்களையும் அறுக்கும் உபாயங்களை ஊட்டி சுக மடையச் செய்வதால் அவிவேகிகளால் இவன் தேக மாமிஷத்தைக் கத்திகொண்டு கழித்த போதிலும் சந்தனசாந்தணிவதுபோல் சுகித்திருப்பன். சகல உயிர்களையுந் தன்னுயிர்போல் காற்பதுடன் சதா விழிப்பாம் ஆனந்த நித்திறையினின்று ஏனையோர்களுக்கும் அவ்வுயிர்களைக் கார்க்கும் அகிம்சாதருமத்தை ஊட்டி ஆதரிப்பவனாதலின் அவிவேகிகளால் இவன் சிரசை அறுத்தபோதிலும் யாதொரு துன்பமுமின்றி சுகநித்திறையிலிருப்பது போல் இருப்பன். ஆறாவது மநுகுலத் தோற்றத்திற்கு மாறுபட்ட சிரேஷ்ட செயலைப் பெற்றுள்ளபடியால் இவன் மநுரூபியாகத் தோற்றிய போதிலும் தேய்வு ஒளிவமைந்த தேவனென்னும்