பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 271

அன்று முதல் சத்தியதன்மத்தை உணர்ந்த கௌண்டியனென்று அழைக்கப்பட்டான்.

அவ்வகைப் போற்றப்பெற்ற கௌண்டியன் காசிநாதனை வணங்கி ஒப்பிலா அப்பனே, தன்மசேனனே, எனையனே பகவனால் யான் சங்கத்தின் கட்டளைப் பெறவேண்டுமென்றான். அவனன்பின் மிகுதியையும், ஒழுக்கத்தின் அவாவையும் உணர்ந்த நாதன் தனது மாணாக்கர்களை நோக்கி சுகவழியாகும்

நீங்கள் அதன்மேறை நடந்து துக்கநிவர்த்தியாகும்படி பரிசுத்தமாக வாழக்கடவீர்களென்றார். அதன்பின் கௌண்டன்யனும் மற்றுமுள்ளோருஞ் சேர்ந்து திரிரத்தினங்களாகும் மூன்று அழியா நிதிகளைச் சேர்த்துக் கொண்டார்கள். அதாவது,

தாமரைப்புட்பத்தில் வீற்றிருந்த ததாகதரே முதல் நிதியாகும் பதுமநிதி

புத்தரை விசுவாசிப்போம், புத்தரே பகவன், புத்தரே அருகன், நமதறிவை விளக்குங் குருநாதன், ஓதாமலுணர்ந்த முனிவன், சகலமுந்தெரிந்த அறிவன், அவரே ஜெகந்நாதன். அவரே ஜெகத்குரு, சருவசீவர்களுக்கும் அன்பன், சருவ சீவராசிகளுக்கும் போதகன், உலகத்தோர்முதற் கண்ட தெய்வம் அவரே, ஆதியாங் கடவுளும் அவரே, உலக சீர்திருத்தக்காரருள் முதன்மெயானவரும் அவரே ஆதலின் ஆதிபகவனாகும் புத்தரை வாழ்த்துவோம்.

இரண்டாவது தன்ம நிதி

காசிவிசுவேசராகும் புத்தரால் போதித்த சத்தியதன்மத்தை விசுவாசிப் போம். பகவனால் சத்தியதன்மம் நன்கு பிரசங்கிக்கப்பட்டது. காலத்துக்கும், இடத்துக்கும் அதீதப்பட்டது. சொன்னதைச் சொல்லாகுங் கிள்ளை போலிராமல் விசாரித்துத் தெளிய வேண்டுமென்னுங் கற்பாறையின்பேரில் ஸ்தாபிக்கப்பட்டது. குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் பொதுவாயுள்ளது. வியாதியுள்ளோனும் சுகதேகியும் உணரக்கூடியது. சிறியோர்களும் பெரியோர்களும் அறியக்கூடியது. கற்றவர்களுங் கல்லாதவர்களுந் தெரியக் கூடியது. விசாரிணைக்கொண்ட சகல மனுக்களையும் மெய்ஞ்ஞான சுகத்துக்குக் கொண்டுபோகப்பட்டது. அறிவில் சிறந்தோரால் நன்குமதிக்கப்பட்டது. சருவ துக்கங்களையும் நிவர்த்திக்கக்கூடியது, யாதொரு துன்பமுமின்றி சுகவழியே சென்று வீடடையக்கூடியது. வேண்டுதல் வேண்டாமெய் என்னும் மத்தியபாதையை உடையதுமாகிய மெய்யறமாம் புத்ததன்மத்தைவாழ்த்துவோம்.

மூன்றாவது சங்கநிதி

மணிமேகலை

புத்ததன்ம சங்கமென்னும் முத்திர மணியை, மும்மெயில் வணங்கி

ஆதிபகவனால் ஸ்தாபித்த புத்தசங்கத்தை விசுவாசிப்போம். புத்த சங்கத்தோர் சத்தியதன்மத்தை விளக்குகின்றவர்கள், நன்னடக்கையை யாவருக்குந் தெரியச் செய்கின்றவர்கள், சகலரையும் சத்தியதன்மத்தின் படி நடக்கும்படியாகப் போதிக்கின்றவர்கள், தாங்களும் அந்த சத்திய தருமத்தின்படி நடந்துக்காட்டு கின்றவர்கள், அவாக்களை அறுக்கும் ஆண்மெய் உடையவர்கள், அரசர்முதல் குடிகள் வரையும் சமதிருஷ்டியுள்ளவர்கள், நானென்னும் அகங்காரத்தை வெல்லும் ஆயுதத்தைக்கொண்டவர்கள், நீதியையும் நெறியையும் தாகமாகக் கொண்டவர்கள் ஒழுக்கத்தை புசிப்பாக உண்டவர்கள், புத்த சங்கத்தோர் விருப்பும் வெறுப்பும் அற்றவர்கள், சகலராலும் போற்றி வணங்குதற்குப் பாத்திரமுடையவர்கள். ஆதலின் புத்த சங்கத்தை வாழ்த்துவோம்.

சங்க நிபந்தனை

எண்குணத்தான் வாரணாசியிலுள்ள சங்கத்தோர் யாவரையும் வரவழைத்து ஓ! சகோதிரர்களே! உங்கள் கூட்டத்தார் ஐந்துவகைப்பெயரால் அழைக்கப் படுவார்கள். அதாவது:- மகட பாஷையில் (சமணரென்றும்) சகடபாஷையில் (சிரமணரென்றும்) திராவிடபாஷையில் (மநுமக்களென்றும்) வழங்கும் சற்சங்கத்தோருள் உத்த மக்களென்றும், விதரண மக்களென்றும், உள்விழி