பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272 / அயோத்திதாசர் சிந்தனைகள்

மக்களென்றும், விஞ்ஞை மக்களென்றும், ஐந்திர மக்களென்றும் ஐவகையோருண்டு.

சீவகசிந்தாமணி

உறுதிமுன் செய்ததின்றி யொழுகினேனென்று நெஞ்சின்
மறுகனீபற்றோடார்வம் விட்டிடு மாணவச்சத்
திறுகனீயிறைவன் சொன்ன வைம்பத அமிர்தமுண்டாற்
பெறுதி நற்கதியை என்று பெருநவை அகற்றினானே.

அருங்கலைச்செப்பு
சங்க நிபந்தனைப் பத்து

சுத்த வால அறிவை வளர்த்தல் உத்தமக்களுணர்.
உதிரசுகத்தினுறத்தை அறுத்தல் விதரண மக்களுறம்.
தெள்ளவுணர்ந்தோர் தெந்நூலீதல் உள்விழி மக்கள் நிலை
மெஞ்ஞானத்தின் மிகு நிலையாற்றல் விஞ்ஞை
மக்கட்டி ரள் அந்தண பூத அறவோனாதல் ஐந்திர மக்கட் சுகம்.
பொன்னிற வாடைத் துறவோர்க்கீதல் நன்னுடல் போர்வையதாம்.
முற்பகலுண்டி யுண்டு விழித்தல் தற்பகலிரவறு மெய்
வானப்பெருக்க மாரிகாலந்தானக் கூட்டு ரவாம்.
ஒருவருக் கொருவருள்ளக் குற்றந்திரு உள மகற்றித்தெரி.

அவர்களுந் தங்கள் துற்சங்கங்களாகும் பொய்யை மெய்யென வழங்குங் கூட்டத்தை விடுத்து, கள்ளை அருந்தி மதிமயங்கி நிற்குங் கயவர் கூட்டத்தை விடுத்து, அன்னியர் பொருளை அபகரிக்குங் கள்ளர் கூட்டத்தை விடுத்து சருவ சீவர்களையுங் கொன்று புலால் புசிக்கும் புலையர் கூட்டத்தை விடுத்து காமிய இச்சையைப் பெருக்கி அன்னியர் இஸ்திரீகளையும் அக்குடும்பத்தையுங் கெடுக்கும் அற்பர் கூட்டங்களையும் விடுத்து ததாகதர் சற்சங்கஞ்சேர விரும்புவார்களாயின்;

ஐந்து வயதுள்ள சிறுவர்களையுஞ் சிறுமிகளையும் வெள்ளை ஆடை உடுத்தி வியாரங்களில் விடுத்து கல்வி விருத்திச்செய்து தெளிவடைந்து மனுகுல ஒழுக்கமுஞ் சீரும் உணர்ந்து சிறுவர்களுக்கு பதினாறு வயதுஞ் சிறுமிகளுக்குப் பத்துவயதும் முடிந்தவுடன் அவரவர்கள் குடும்பங்களில் சேர்த்து பஞ்சசீல ஒழுக்கத்திற் பழகும்படி யாக்கியாபித்தல் வேண்டும். இவர்களே 1-வது உத்தமக்களாவர். அச்சிறுவர்களுஞ் சிறுமிகளும் குடும்ப துன்பத்திற் சேராமல் சற்சங்கத்தைச் சார்ந்து சுகமடைய விரும்புவார்களாயின் புருஷர்களுக்கு வேறு வியாரமும், பெண்களுக்கு வேறு வியாரமும் அமைத்து சிறுவர்களுக்கு இருபது வயதளவுஞ் சிறுமிகளுக்குப் பதினாறு வயதளவும் உள்ள ஒழுக்கங் களையும் நெறிகளையும் ஆராய்ந்து திரிகரண அமைதி காணுமாயின் சற்சங்கத்தில் சேர்த்து மனதை துற்குணத்திலும் துற்செயலிலும் விடுத்து துக்கத்தைப் பெருக்கி மாளாப்பிறவிக்கு ஆளாகாமல் பொன்போன்ற சுயம்பிரகாச அமைதியினின்று பிறவியறுக்கும் அடையாள சிறுமஞ்சளுஞ் சிறுசிவப்புங்கலந்த துவராடை அளித்து தேகமுழுவதும் மறைக்கச்செய்து சிரமுடியகற்றி தான் அரசபுத்திரனென்று மமதையும் குரு புத்திரனென்னுங் கர்வமும் பிரபு புத்திரனென்னும் பெருமெயுங்கொள்ளாது இராகத்துவேஷ மோகங்களற்று தன்னடக்கமும் அமைதியும் உண்டாவதற்கு பிச்சாபாத்திரம் ஈய்ந்து வீதிகளிலுள்ள வீடுகடோறுஞ் சென்று வாயற்படியினின்று உத்த மக்கள் வந்திருப்பது குடும்பிகளுக்குத் தெரியவும் அவர்களும் பஞ்ச மந்திரங்களை மறவாமல் அநுட்டித்துவரவும் பஞ்சசீல ஜாக்கிரதா பஞ்சசீல ஜாக்கிரதா பஞ்சசீல ஜாக்கிரதா என்று மூன்று சத்தமிட்டு பேசாமலிருக்க வேண்டியது.

அருங்கலைச்செப்பு - அரசபுத்திரர் சங்கஞ்சேருங்கால் சிரமயிர் களைதல்

திருந்திய கீழ்திரை நோக்கிச் செல்வனே இருந்ததோரிடிக்குரச் சிங்கம் பொங்கிமேற்,
சுரிந்த தன்னுளை மயிர் துறப்பதொத்தன, னெரிந்தெழுமிளஞ்சுடரிலங்குமார் பினான்.

இச்சங்கதிகளைக் குடும்பிகளுக்கும் அறிக்கைச்செய்து உத்தமக்கள் ஜாக்கிர