பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 275

செல்வச் சிறுவன் தன்னை நாடி தூரத்தில் வருவதைக் கண்ணுற்றார். அவனும் பகவன் அருகிற் சென்று வணங்கி ஐயனே, யான் பெருத்த திரவிய சம்பத்துடையோன் மைந்தனாயிருந்தும் சகிக்கமுடியா பெருந்துக்கத்தில் ஆழ்ந்து தவிக்கின்றேன். இஃது யாது உபத்திரவம் என்று அலரினான்.

அதைக்கேட்ட பகவன் யட்சனை நோக்கி குழந்தாய், உனக்குவேண்டிய திரவியசம்பத் திருந்தும் மாளா துக்கந் தோன்றிய காரணம் யாதென்றார். அதைக்கேட்ட சிறுவன் மெய்யனை வணங்கி பெரியோய், எனது தந்தை திரவியத்தை சேகரிக்கவும் அதை பாதுகாக்கவும் விருத்தி செய்யவுமுள்ள காலத்தில் இரவும் பகலும் பெருமூச்சிறைந்து புரண்டிருப்பதைக் கண்டிருக்கின்றேன். ஆயினும் அதன்காரணம் எனக்கு விளங்காமலிருந்தது.

என் தந்தையார் சேகரித்த திரவியங்களையும் அதன் பாதுகாப்பையும் விருத்தியையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டது முதல் அவர் பெருமூச்சும் புரட்டலும் நின்று சுகநித்திறையிலிருக்கின்றார். யானோ திரவிய சேகரிப்பாலும் அதன் பாதுகாப்பாலும் விரயத்தினாலும் மாளா துக்கத்திலும் பெருமூச்சிலும் புரட்டலிலும் நின்றலரி உம்மை வந்தடைந்தேன் என்றான்.

அதைக்கேட்ட பகவன் யட்சனைநோக்கி சிறுவனே, இவ்விடத்தில் யாதொரு துக்கமுமில்லை, இவ்விடத்தில் யாதொரு உபத்திரவமும் இல்லை. என்னை நாடிவந்த உனக்கு சத்தியதன்மமாம் அழியா திரவியத்தைக் கொடுக்கின்றேன். அதை சிதலழிக்காது கள்ளர்கள் அபகரிக்க மாட்டார்கள். அதன் சேகரிப்பால் உன் பெருமூச்சடங்கி யாட்டல் மற்ற துக்கத்திலும் உபத்திரவத்திலும் நிலைக்காமல் மீட்குமென்றார்.

ததாகதர் திருமொழியைக் கேட்ட யட்சன் மனோதிருப்தியடைந்தான். துக்கமுமில்லை விசாரமுமில்லை என்ற பகவனுடைய வார்த்தைகள் அச்சிறுவன் மனக்கவலையைப் போக்கியது. உள்ளத்தில் ஆறுதல் அடையும்படிச் செய்தது. அவ்வானந்தத்தால் அருகனென்றுணர்ந்து அருகில் உட்கார்ந்தான். பகவன் சிறுவனைநோக்கிக் குழந்தாய்! உன் தேகம் வளர்ந்து சுகதேஜசிலிருப்பதும் உன் தாதை தேகம் சுஷ்கி நரைதிரை கொண்டிருப்பதைக் கண்டீரா காண வில்லையா என்று உசாவினார்.

அதைக்கேட்ட யட்சன் பெரியோய் எனது தாதை கண் பஞ்சடைந்து தேகந் தளர்ந்து சருமஞ் சுருங்கி முதுகும் வளைந்திருப்பதைக் கண்டே னென்றான்.

குழந்தாய்! அதே தோற்றத்தை உன் தேகமும் அடையுமா அடையாதா என்றார்.

அதைக்கேட்ட யட்சன் இன்னும் திகைத்து ஐயனே! என் தேகத்தையும், என் தந்தை தேகத்தையும் என் தாதை தேகத்தையும் நோக்கிப் பார்க்குங்கால் ஓர் புட்பமானது மொக்கிட்டு மலர்ந்து மணம் வீசி காய்ந்து மடிவதுபோல் என் தேகமும் மடியும்போற் காணுகின்றேன் என்றான்.

மலரின் மணமானது சகலருக்குஞ் சுகந்தத்தை வீசி ஆனந்தமுறச் செய்வதைக் கண்டாய். அதுபோல் உன் தேகத்தில் வீசும் சுகமணம் யாதேனும் உண்டா என்றார்.

ஐயனே என் தேகத்தில் மலமூத்திராதிகளின் துற்கந்தங்களையும் வாய் கொப்புழ் இவைகளின் துற்கந்தங்களையும் முகருகிறேனன்றி நற்கந்தம் ஒருநாளுங் கண்டிலேன் என்றான்.

தன்னிற்றானே தோன்றி வளர்ந்த புற்பூண்டுகளிற்றோன்றும் புஷ்பங்களின் மணம் சகல துன்மணங்களையும் போக்கி நன்மணம் வீசுங்கால் சிரேஷ்டமுற்ற மநுக்களாம் தாய் தந்தையர் சேர்ந்து ஜெநித்த உனது தேகத்தில் மணமில்லாமற் போயதென்னோ என்றார்.

ஐயனே! அவற்றை யான் இதுவரையுங் கண்டதுமில்லை கேட்டதுமில்லை முகர்ந்ததுமில்லை என்றான்.

குழந்தாய்! புற்பூண்டுகளில் தோற்றுவது புஷ்பமணமும் பிண்டங்களில் தோற்றுவது பிரம மணமுமாம். அப்பிரமமணத்தை முகர்ந்தவன் துக்கத்தி