பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278 / அயோத்திதாசர் சிந்தனைகள்

என்னப்படுவாள். இவ்விருவருள் ஆண்மெய் வீரிய வான்ம வடிவமென்றும் பெண்மெய் பேதை யான்மவடிவமென்றுங் கூறப்படும்.

பேதை யான்ம தோற்றமுள்ள நீங்கள் சகலராலும் இச்சிக்கக்கூடிய வடிவுள்ளவர்களாதலின் நீங்கள் ஒவ்வொருவரும் நாணம், அச்சம், மடம், பயிர்ப்பென்னும் நான்கு கற்பின் தன்மத்தில் நிலைக்கவேண்டும். இந்நான்கு வகைக் கற்பின் தன்மத்தையே நல்லாடைகளாகவும், நல்லாபரணங்களாகவும், நன்மணமாகவும், நல்லுணவாகவும் எண்ணி கற்பின் நான்குபாத தன்மத்தில் நடக்கவேண்டும்.

அருங்கலைச்செப்பு

பெண்மெயுற்றோர் கற்பின் நான்கு தன்மபாதப்பத்து
பகவனுரைத்தப் பெண்ணறநான்கி, லகமுத நாணத்துறை
அச்சம் பயிர்ப்பு மடநாற் கற்பி, னிச்சை முதலென்றறி
அன்னிய புருடரங்கங்காண, லுன்னிய நாண நிலை
தனித்து நிற்றல் தனிவழிச்சேர, லினித்த அச்சத்திறை
புருடன் தன்னைப் போற்றி பயற்றல், அருள்சேரச்சத்தவம்
பெண்மெ ஒடுக்கிப் பேதைமெய் ஆற்றல், உண்மெய் பயிர்ப்பின் வழி
கணவன் வாக்கைக் கடவாதொழுகல், மணமெய் ஒடுக்கநிலை
ஈருடலொத்து ஒருமன வாழ்க்கை , பேருடல் ஒடுக்க பலன்
குற்றங் கடிந்து கொழுனனோடொழுகல், உற்றவொடுக்க நிலை
ஒக்க விரதமைந்துங் காக்கல், துக்க நிவர்த்தி வழி.

1வது (நாணமென்னுங் கற்பின் தன்மம்) அன்னிய புருஷர் யாரைக்கண்ட போதிலும் நாணமுற்று தலை கவிழ்தலும், தனது முகத்தையும், தேகத்தையும் அன்னிய புருஷர்கள் கண்டார்களேயென்று வெட்கமடைதல் வேண்டும்.

2-வது (அச்சமாங் கற்பின் தன்மம்) தனது கணவனும் மைந்தர்களும் இல்லத்திலில்லாதபோது அச்சவாழ்க்கையில் இல்லறம் நடாத்துதலும், தனியே வெளியிற் போகுங்கால் ஓர் சிறுவனையேனும் கையாதரவுகொண்டு செல்லலும், அன்னிய புருஷர் முகங்களை நோக்குதற்கு பயப்படுதலும், தன் கணவனே தன்னை ஆண்டுரட்சிக்கும் ஆண்டவனாதலின் அவனுக்கு வேண்டிய பதார்த்தத்தை வட்டித்தலும், வேணபுசிப்பை அளித்தலும், ஆன நித்திறை படுத்தலுமாகிய செயல்களில் அவன் மனங்கோணாது திருப்த்தியுறுமளவும் அச்சத்தில் நின்று ஆனந்திக்கவேண்டும்.

3-வது (பயிர்ப்பென்னுங் கற்பின் தன்மம்) அன்னிய புருஷரைக் காணுமிடத்து வெறுப்படைதலும், தனக்குக் கிடைத்துள்ள ஆடைகளில் திருப்தியுற்று அன்னியர் சிரேஷ்டவாடைகளில் வெறுப்படைதலும், தனக்குள்ள ஆபரணங்களில் போதுமென்று திருப்த்தியுற்று அன்னியர் சிரேஷ்ட ஆபரணங்களில் வெறுப்படைதலும், தன் கணவனால் கிடைத்துவரும் புசிப்பில் போதுமான திருப்த்தியுற்று அன்னியர் சிரேஷ்ட புசிப்பில் வெறுப்படைதலு மாகிய செயலுற்று தனக்குக் கிடைத்தவரையில் திருப்த்தியடைதல் வேண்டும்.

4-வது (மடமென்னுங் கற்பின் தன்மம்), தனது கணவன்வாக்குக்கு மீறாது நடத்தல் முதலொடுக்கம். பெரியோர்களிடம் அடங்கி வார்த்தை பேசதல் இரண்டாமொடுக்கம். கணவனுக்கு எதிர்மொழி பேசாதிருத்தல் முன்றாவது ஒடுக்கம். கணவனிடம் எக்காலும் மிருதுவான வார்த்தை பேசுதல் நான்காம் ஒடுக்கம். அன்னிய புருஷர்கள் தன்னைப் பார்க்காமல் ஒடுக்கிக்கொள்ளுதல் ஐந்தாம் ஒடுக்கம். அன்னியர் மெச்சும் ஆடையாபரணங்களை அகற்றி தன்கணவன் கண்குளிரும் அலங்கிருதத்தில் நிற்றல் ஆறாம் ஒடுக்கம். தங்கணவன் தேகமும் தன்தேகமும் வேறாகத் தோன்றினும் அன்பும் மனமும் ஒன்றாய் ஒத்துவாழ்தல் ஏழாம் ஒடுக்கம். கணவனுக்குப் பின் புசித்தலும், கணவனுடன் புசித்தலும் எட்டாம் ஒடுக்கம். கணவனுக்குப்பின் சயனித்தலும், உடன் சயனித்தலும் ஒன்பதாம் ஒடுக்கம். பஞ்சசீலத்தின் ஒழுக்க விரதங்காத்தல் பத்தாம் ஒடுக்கம் என்னப்படும்.

நிகழ்காலத்திரங்கல்

எண்குணத்தானோது மேதா நாற் கற்புநிலை / பெண்மெய் அருந்ததிபாற் பெற்றது அதிசயமே.
பெற்றவர் பாற் பெற்றார் பேறு நாற் கற்புநிலை / உற்றவொளிவடமீனோம்பல் அதிசயமெ.
ஓம்புங்கடவுளுற்றக் கணவனென்றே / தேம்பாற் பணிமெய்ச் செய்யல் அதிசயமே.