பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வீரசோழியம்

ஆவியனைத்துங்க, ச, த, ந, ப, மவ்வரியும் வவ்வி
லேவிய வெட்டும் யவ்வாறு ஞந்நான்கும் எல்லாம் உலகு
மேவிய வெண்குடைச் செம்பியன் வீர ராஜேந்திரன்றன்
நாவியல் செந்தமிழ்ச் சொல்லின் மொழி முதனன்னுதலே.

சீவக சிந்தாமணி

தேனுலா மதுச்செய்கோதை தேம்புகை கமழவூட்டி
வானுலாச் சுடர்கண்மூடி மாநகரிரவுசெய்ய
பானிலாச் சொரிந்த நல்லாரணிகலம் பகலைச்செய்ய
வேனிலான் விழைந்த (சேரி) மேலுலகனையதொன்றே.
வேரியின் மெழுக்கார்ந்த மென் பூநிலத்,
தாரியாகவஞ் சாந்தந்தனித்தபின்,
வாரி நித்திலம் வைப்பபொற்பூவொடு,
சேரிதோறிது செல்வது இயற்கையே.

13.சதுரகிரிக்காதை

அறவாழி அந்தணன் கராடர் நாட்டில் தன்ம சங்கத்தை நாட்டிவிட்டு சதுரகிரி என்றும், இரத்தனதீவகமென்றும் வழங்கும் ஓர் மலையின்மீது ஏறியபோது அடிவாரத்தில் வாசஞ்செய்திருந்தக் குடிகள் யாவரும் பின்தொடர்ந்து உச்சியில் சென்று ஐயனைச் சூழ்ந்து நின்றார்கள்.

அறவாழியான் சகலரையும் நோக்கி அன்பர்களே! உங்களை ஒத்த மனுக்கள் முதல் புழுக்கீடாம் எறும்புகளீராக உள்ள சீவர்களை ஒருவருக் கொருவர் அன்பு பாராட்டி ஆதரித்து வருகின்றீர்களா, அன்றேல் தங்களுடைய போஷிப்பையுஞ் சுகத்தையும் பார்த்துக்கொண்டு மற்ற சீவர்களை வதைத்து வருகின்றார்களா என்றார்.

தேவரீர் தாங்கள் இவ்விடம் வந்தவுடன் இக்கரடி புலி சிம்மம் யாவும் உம்மெச் சூழ்ந்து ஆனந்தமாகப் பார்த்திருக்கின்றது. இத்தகைய கரடியும் புலியும் சிம்மமும் எங்களைத் தனியாகக்காணுமாயின் அடித்துக் கொன்று விடுவது நிட்சயம். இவ்வகைக் கொடூர ஜெந்துக்கள்மீது யாங்கள் எவ்வகையில் அன்பு செலுத்தி ஆதரிப்போமென்றார்கள்.

அதைக்கேட்ட பகவன் கூட்டத்தாரை நோக்கி அன்பர்களே! ததாகதன் உங்களை ஒத்த மனிதனாயிருக்க இம்மிருக சீவன்கள் எம்மீது அன்பு பாராட்டி அருகில் வீற்றிருப்பதும் உங்களைக் கண்டவுடன் கொல்லுவதுமாகியக் காரணம் யாதென்றார்.

ஐயனே! இதினந்தரங்கம் யாங்கள் அறியோமே என்றார்கள்.

அருங்கலையோன் அக்குடிகளை நோக்கி அவ்விடம் இருந்த ஓர் நீர்ப்பாம்பையும் விஷப்பாம்பையும் காண்பித்து அவைகளைப் பிடித்து வாருங்கோள் என்றார்.

சிலர் அவைகளைப் பின்சென்று பிடிக்க ஆரம்பித்தபோது நீர்ப்பாம்பு மட்டிலும் எங்கும் ஓடாமல் அவ்விடமே தங்கினின்று கையில் பிடிப்பட்டது. விஷப்பாம்போ இவர்களைக் கண்டவுடன் ஓடிவொளித்துக் கொண்டது.

வேறுசிலரைநோக்கி அவ்விடமிருந்த ஓர் பல்லியையுந் தேளையுங் காண்பித்து அவ்விரண்டையும் பிடித்து வாருங்கோள் என்றார்.

அவற்றை சிலர் தொடர்ந்து பிடிக்க ஆரம்பித்தபோது பல்லியானது எங்கும் ஓடாமல் தங்கள் கைகளில் பிடிப்பட்டுக்கொண்டது.

தேளோவெனில், இவர்கள் அருகில் நெறுங்கியவுடன் ஓடி ஒளித்துக் கொண்டது.

இவைகளைக் கண்ட இறைவன் குடிகளை நோக்கி அன்பர்களே! ஒரு பாம்பு ஓடி ஒளிந்துக்கொள்ளவும் மற்றொன்று உங்கள் கையில் பிடிப்படவும் தேளானது உங்களைக் கண்டவுடன் ஓடி ஒளிக்கவும் பல்லியானது ஓடாது உங்கள் கையில்பிடிபடவும் நேர்ந்த காரணங்கள் யாதென்று வினவினார்.

தேவரீர் அதன் காரணமும் யாங்கள் அறியோமென்றார்கள்.

குமாரதேவன் குடிகளை நோக்கி அன்பர்களே! சீவர்களை இம்சிக்கக் கூடிய நஞ்சென்னும் விஷமானது எந்த ஜெந்துவினிடமிருக்கின்றதோ அந்த