பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தன்சுகத்தைக் கோறும் ஒருவன் அதேசுகத்தைக்கோறும் ஏனைய ஜீவர்களை தண்டியாதும், கொலை புரியாதும் வருவனேல் அவன் சுகத்தை அடைவான்.

எவரையும் கடுஞ்சொற்களால் சுடாதிருங்கள். ஏனெனில் கடுஞ்சொற் களே உங்களைச்சுட திரும்பும். கோபமான வார்த்தை துன்பத்தை உண்டாக்கு வதுடன் பெரும் விபத்தையும் நேரிடச்செய்யும்.

வெங்கல மணியின் நாக்கை எடுத்துவிட்டால் சப்தம் இல்லாமல் போமன்றோ. அதுபோல் உங்களின் இராக துவேஷ மோகங்களைத் தவிர்த்து விட்டால் அமிர்தமாம் நிப்பானத்தை அடைவீர்கள். விவாதம் உங்களை அணுகா.

இடையனொருவன் தன் கோலின் உதவியினால் பசுக்களை சாலைக்கு நடத்திச்செல்வனோ அதுபோல் வயதும், மரணமும் ஜீவர்களை நடத்திச் செல்கின்றன.

இவ்வுலகில் ஒருவன் அம்மணமாய் இருந்தாலும், ரோமங்களைத் தொங்கவிட்டுக்கொண்டிருந்தாலும், தினேதினே நீரில் முழுகினாலும், பசியால் வருந்தினாலும், பூமியில் நெடுகப் படுத்திருந்தாலும், கற்களால் தேகத்தை வாதைசெய்தாலும் அசையாது உட்கார்ந்திருந்தாலும் அவாவை வெல்லாதவன் ஒருக்காலும் பரிசுத்தனாகமாட்டான்.

பழகிய குதிரையானது சாட்டையால் தொட்டவுடன் சுருசுருப்பாய் ஓடுமோ அதுபோல் உண்மெயாலும், நற்குணத்தாலும், முயற்சியாலும் தியானத்தாலும் ஒருவன் பெருங்கடலாகிய துக்கசாகரத்தை வென்று ததாகதநிலையை அடைவான்.

கிணற்றுநீரை வேண்டிய இடங்களுக்குக் கொண்டுபோவதுபோலும், அம்பை தன் மனதிற்கு இசைந்தவாறு வளைப்பதுபோலும், மரக்கட்டையை மனவிச்சைப்படி செப்பனிடுவதுபோலும் அறிவுடையோர் தங்களை ஒழுங்குபடுத்திக்கொள்ளுவார்கள்.

லோகவர்க்கம்

ஓ சகோதிரர்களே! அநீதிமார்க்கத்தை அநுசரியாதீர்கள். யோசனையற்று வாழாதீர்கள். தப்பான மார்க்கங்களை பின்தொடராதீர்கள்.

நீதிமார்க்கத்தை அநுசரியுங்கள். பாபமார்க்கத்தை விலக்குங்கள். ஏனெனில் நீதியால் இவ்வுலகில் பாக்கியவான்களாகலாம்..

இவ்வுலகம் நீர்க்குமிழியையும், கானலையும் ஒத்தது என அறியுங்கள். அறிந்த ஒருவனிடத்தில் இமயனென்னுங் காலன் அணுகமாட்டான்.

சகல ஆடம்பரம் பொருந்திய இவ்வுலகை சக்கரமென நினையுங்கள். அறிவுள்ளோர் அதனின்று விலகிக்கொள்வர். அறிவிலார் அதனைக் கவர்ந்து நிற்பர்.

எவனொருவன் முன் கவலையற்றவனாயிருந்து பின் தெளிந்து அறிவுடை யோனாகின்றானோ அவன் மேகத்தால் கவரப்படாத சந்திரனைப்போல் உலகில் பிரகாசிப்பான்.

இவ்வுலகம் இருளாய் இருக்கின்றது. சிலரால் பார்க்கமுடியும். வெகு சிலர் வலையினின்று தப்பும் பட்சிபோல் உலகினின்று தப்பித்துக் கொள்வார்கள்.

தருமசிந்தை இல்லாதவன் தெய்வ நிலையை அடையமாட்டான். அறிவற்றவன் எவனோ அவன் ஈகையைப்பற்றி இகழ்வான். அறிவுள்ளோர் ஈகையைப்பற்றிப் புகழ்வார். அதே ஈகையில் வாழ்வார்கள்.

உலகையே ஆள்வதைவிட, உலகில் கீர்த்தி பெருவதைவிட நிர்வாண பாதையாம் முதற்பாதையாகிய ஸ்ரோதாபதி மார்க்கத்தை அடைவதே சிரேஷ்டம்.

பிக்குவர்க்கம்

ஓ சகோதிரர்களே! கண்விஷயத்தில் ஜாக்கிரதையாயிருத்தல் உத்தமம். செவிவிஷயத்தில் ஜாக்கிரதையாயிருத்தல் உத்தமம். நாசிவிஷயத்தில் ஜாக்கிரதை யாயிருத்தல் உத்தமம். நாவுவிஷயத்தில் ஜாக்கிரதையாயிருத்தல் உத்தமம். தேகவிஷயத்தில் ஜாக்கிரதையாயிருத்தல் உத்தமம். வாக்குவிஷயத்தில் ஜாக்கிரதையாயிருத்தல் உத்தமம். எண்ண விஷயத்தில் ஜாக்கிரதையாயிருத்தல்