பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 299

எப்படி இரும்பினிடத்திலிருந்து துரும்பு சேர்ந்து விருத்தியாகி இரும்பையே கெடுக்கின்றதோ அதுபோல் தவறுதலையுடையவன் தன் சொந்த தவறுதலால் பாபகன்மத்துக்கீடுபடுகின்றான்.

தன்மத்தை தினகாலஞ் சிந்தியாதிருத்தலே அன்றாடம் கறைப்படுத்துகிறது. சுறுசுறுப்பாயில்லாதிருத்தலால் குடும்பிகளை கறையாக்குகிறது. சோம்பலாயிருப்பதால் தேகத்தை கறையாக்குகிறது. அசட்டையாயிருப்பதால் பெருத்த காரியத்தை கறையாக்குகிறது.

துஷ்டசெய்கையே பெண்களுக்கு கறையாயிருக்கின்றது. உபகாரிக்கு பேராசை கறையாயிருக்கின்றது. உலகில் செய்யும் சகல பாப கன்மங்களும் கறைப்படுத்துவனவாய் இருக்கின்றன.

ஓ! சகோதிரர்களே! இந்தக் கறைகள் யாவற்றையும்விட பெருத்தது அறியாமெய் என்னும் கறையே இந்தக்கறையினின்று விலகி கறைபடாதிருக்க தப்பித்துக்கொள்ளுங்கள்.

வெட்கமற்றவனுக்கும், பெருமெய் பாராட்டுபவனுக்கும், தீங்கு செய்பவனுக்கும் பழிப்பவனுக்கும் துணிகரமுள்ளவனுக்கும் பகைக்கத்தக்க வனுக்கும் உலகின் வாழ்க்கை மிக்க எளிதாயிருக்கும்.

பரிசுத்தத்தையே நாடியும், தன்னயம் பாராட்டாமலும், அடக்கமும், குற்றமற்றும், அறிவுடனுமுள்ள ஒழுக்க நடையிலுள்ள ஒருவனுக்கு உலகின் வாழ்க்கை மிக்க கடினமாயிருக்கும்.

ஜீவவதை செய்தும், பொய்சொல்லியும், களவாடியும், விபச்சாரம் செய்தும், மயக்கத்தைத்தரும் மதுபானம் அருந்தியும் ஒருவன் வருவானாகில் அவன் தான் அடையப்போகும் பெரும்பேற்றின் அஸ்திபாரத்தையே பெயர்த்துவிடுகின்றான்.

அளவுகடந்து செய்யும் துற்செய்கையானது செட்ட ஸ்திதிக்குக் கொண்டு போகும் என்று உணருங்கள். பேராசையும், பொல்லாங்கும் வெகு நாளைக்கு நிலைக்காதென்று கண்டு ஜாக்ரதையாயிருங்கள்.

காமமே ஓர் பெருந்தீ, கோபமே ஓர் கூறான அம்பு, அறிவீனமே ஓர் கண்ணி, பேராசையே ஓர் பெருமழையாய் இருக்கின்றது.

பிறர் குற்றத்தை உணர்வது எளிது. தன் குற்றத்தை உணர்வது அறிது. அயலான் குற்றத்தை பதரைப்போல் பிடுங்கிக்காட்டுவான். தன் குற்றத்தை நஞ்சரவம் போல் ஒளிப்பான்.

ஆகாயமார்க்கமாக ஓர் பாதையுங் கிடையா. வெளியரங்கமான செய்கையால் ஒருவன் சிரமணனாகமாட்டான். உலகம் பெருமெயில் ஆனந்திக்கின்றது. அறவணவடிகள் பெருமெயற்றிருப்பர்.

ஆகாயமார்க்கமாக ஓர் பாதையுங் கிடையா. வெளியரங்கமான செய்கையால் ஒருவன் சிரமணனாகமாட்டான். நிலையாக உள்ள ஜீவர்கள் கிடையா.

உலகில் மனிதர்களாய் பிறப்பதே அரிது. அதில் நீதிமான்களாய் நடப்பது அதிலும் அரிது. அதிலும் சத்திய தன்மத்தைக் கேட்டல் அரிது அதிலும் பிறப்பை வென்று நிப்பாணம் பெறுவது அதினும் அரிது.

சம்மா சம்புத்தவர்க்கம்

ஓ! சகோதிரர்களே! மனுக்களாய் பிறப்பது கடினம், மானுஷீக தன்மம் வாய்ப்பது கடினம், சத்திய தன்மத்தைக் கேட்பது கடினம், பரிபூரணநிலையைப் பெறுவது கடினம்.

பாபஞ்செய்யாதிருத்தல், நன்மெய்க் கடைபிடித்தல், இதயத்தை சுத்திசெய்தல் இஃதே பகவனது போதனை.

சாந்தமாய் இருத்தலே அகோரதபம் செய்வதாகும். பலநாள் துன்பத்தை அநுபவித்தல் பேரின்பத்தைப் பெற ஏறும். ஏனெனில் பல ஜீவர்களைப்பற்றி கேடுநினைத்து வந்தவன் சிரமணனுமல்ல. பழிகூறாமலும், தையற்சொற் கூறாதும் புலனையும், மனதையும் ஒடுக்கி நீதியில் நின்று மிதமின்றி உண்ணாமல் தனிமெயாய் உட்கார்ந்து உறங்கும்போதும் விழித்திருக்கும்போதும் மேலான