பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சக்கிரவர்த்திகளாய் இருந்தபோதிலும் அவர்களுக்கு உண்டாகும் நானென்னுஞ் செருக்கை அறுப்பது இவ்வோடேயாகும். சக்கிரவர்த்திகளாய் இருந்தாலும் அவர்களுக்குள்ள தானென்னும் அகம்பாவத்தைப் போக்குவதும் இவ்வோடேயாகும். ஆதலின் சதா சுகத்தை அடைய வேண்டிய ஒவ்வொருவனும் தன்னை அடக்கியாள இவ்வோட்டைக் கையிலேந்தி அதில் கிடைக்கும் பிச்சை அன்னத்தை உண்டு பசியாறி அகம்பாவத்தைப் போக்கி இதயத்தை சுத்திகரிக்கவேண்டுமென்று பேசிக்கொண்டே அரண்மனைக்குச் சென்று தந்தையுந் தானுந் தனித்துட்கார்ந்து தாமிதுவரையினும் செய்துவந்த ஆளுகையில் யாது சுகத்தைக் கண்டீரென்றார்.

அவற்றை வினவிய சுத்தோதயன் குழந்தாய்! நீர் அரண்மனையை விட்டகன்று காடேகி உமது முடியை அறுத்துவிட்டீரென்று கேழ்விப் பட்டவுடன் அசோதரையும் தனது முடியை அறுத்தெரிந்துவிட்டாள். நீவிர் பிச்சாபாத்திரம் ஏந்தி அன்னமேற்று உண்கின்றீர் என்று கேழ்விப்பட்டவுடன் அசோதரையும் ஒரு ஓடு கையில் ஏந்தி அதில் அன்னத்தை வாங்கி உண்டு வருகின்றாள். ஆயினும் உமக்குள்ள ஈகையின் குணம் அவளுக்கும் மாறாமல் என்றும் தருமத்தைச் செய்துக்கொண்டு ஆனந்தத்தில் இருக்கின்றாள். யானோ சக்கிரவர்த்தி பீடத்தை வகித்தும் சதா துக்கத்தில் இருக்கின்றேனென்றார்.

அசோதரையானவள் என்னை பிரிந்தும் உமதடக்கத்திலிருந்தும் சருவ சுகத்தை இழந்தும் தனது ஈகையின் பெருக்கத்தால் ஆனந்தத்தில் இருக்கின்றாளென்றீர். தாமோ சக்கிரவர்த்தி பீடத்திருந்து சர்வ அதிகாரமுற்றும் சஞ்சலம் மாறவில்லை என்பது யாதுகாரணம் என்றார்.

எமதரிய குழந்தாய்! அதன் காரணம் யானறியேனே என்றான். அவற்றை வினவிய பகவன் சக்கிரவர்த்தியை நோக்கி அரசே! நீர் போட்ட இடத்தில் பொருளைத் தேடினால் கிடைக்குமேயன்றி போடா இடத்தில் தேடுவது பொய்த் தேடலாகும். அதுபோல் துக்கந் தோன்றிய இடத்தில் அதன் காரணத்தை விசாரியாது துக்கத்தைப் பெருக்குதல் மேலும் மேலும் துக்கத்திற்கு ஆளாக்கும்.

சீவக சிந்தாமணி

வேட்டன பெறாமெ துன்பம் விழைநரைப் பிரிதறுன்பம்,
மோட்டெழி லிளமெய் நீங்க மூப்பு வந்தடைத றுன்பம்,
மேட்டெழுத்த றிதலின்றி யெள்ளர்பா டுள்ளிட் டெல்லாஞ்,
சூட்டணிந் திலங்கும் வேலோய் துன்பமே மாந்தர்க்கென்றான்.

அதாவது விரும்பிய பொருள் கிட்டாவிடத்து துக்கம் பெருகும். விருப்பமாகும் அவாவின் பெருக்கமே துக்கத்திற்கு மூலமென அறிந்து அவாவை அறுத்தவிடத்து துக்கம் நீங்கும். தேகத்திற்கு நரை திறை உண்டாவது துக்கம். அதற்கு மூலம் யாதென்று ஆராயுங்கால் தேகத்தில் நிகழுங் காம வெகுளி மயக்கங்களென்றே தெளிந்து அவைகளைத் தடுத்தவிடத்து நரை திறையின் துக்கம் நீங்கும்.

மனைவி மக்களைப் பிரிதலும் துக்கம், தனது திரவியத்தை இழத்தலுந் துக்கம், தனது நாடு நகரை பரிகொடுத்தலுந் துக்கம். அவைகளுக்கு மூலம் யாதென்று ஆராயுங்கால் மனைவி மக்கள் மீதுள்ள பற்றுக்களே மூலமாகும். திரவியத்தின்மீதுள்ள அவாவே மூலமாகும். நாடு நகரின் மீதுள்ளப் பெரும் ஆசையே மூலமென்றறிந்து பற்றுக்களையும், பேராசையையும் அகற்றி மனைவி மக்களுந் தோன்றி கடிகையில் கெடுவர். தானிய சம்பத்தும் தனசம்பத்துந் தோன்றி கடிகையில் கெடும். நாடு நகரங்களும் தோன்றி கடிகையில் கெடுமென்று உணர்ந்து தெளிந்து பற்றற்றவிடத்தே துக்கம் நீங்கும்.

இளமெய் நீங்கி முதுமெய் தோற்றுங்காலத்து துக்கமுண்டாகும். அத்தகைய துக்கத்திற்கு மூலம் யாதென்று ஆராயுங்கால் முதுமெய் வருமெய் என்றுணராது இளமெய் அவாவினின்று ஏது சுகமுமற்று இந்திரியங்கள் கலங்குங்காலத்து முதுமெய் வந்ததென்று துக்கிக்கின்றார்கள்.

இளமெய் என்னும் வாக்கியம் எப்போது இத்தேகத்திற்கு உண்டாயதோ அப்போதே முதுமெய் என்னும் வாக்கியம் அதற்கு எதிர்மொழியாய்