பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அருங்கலைச்செப்பு - சூசரகப்பத்து

ஊனு மென்பு முதிரம் நரம்புதோல், காணுமெய் நோயின் திறை
அயம் வெள்ளி பொன்னு மருந்தாரங்கொண்டு, நியமிநோய்தாம்பிரத்திநேர்
கௌரி வெண் தொட்டி தாளகம் வீரம், பௌரி பாடாணங்கள் பார்
சிவப்பொடு நீலம் வைரமா பச்சை, உவப்புட்பராக்மன்னேர்
பாடாணத்துள்ளும் பரூங்கல்லிலுப்பிற், சேடான லோகங்கண்டேர்
அயத்திற்குதிர மருமூளைப் பொன்னாம், புயல் வங்க மப்புலையேயாம்
என்பதனுள் வெள்ளி யுரை நரம்ப தேதரா, தொன்னை தோற்றாம்பிரமதாம்
துன்பத்திரட்சி சினக்கோதுருண்டு, குன்மக் குடத்தியாங் கூர்.
சின மாற்றி நாளுஞ் செல்லன்னங் கொண்டு, வனவுப்பின் தூளம் பரி
இதயத்திலுள்ள விடு ம்பைகள் நீங்கில், புதயற்ற துன்பம்படும்.

இரத்தின வர்க்கங்களிலுமுள்ள அய சம்பந்த இரத்தினங்களும் பொன் சம்பந்த வைரங்களும், வெள்ளி சம்பந்த புஷ்பராகங்களும், வங்க சம்பந்த கோமேதங்களும், தராசம்பந்த நீலங்களும் தாம்பர சம்பந்த பச்சைகளும், இன்னின்னவைகள் என்றறிந்து அந்தந்த உருப்பின் குறைவு நிறைவுகளுக்கு அந்தந்த இரத்தினங்களை ஈய்ந்து நிவர்த்திக்க வேண்டியது.

பாஷாணவர்க்கங்களிலுமுள்ள அயசம்மந்த தொட்டி பாஷாணங்களும், பொன் சம்மந்த கௌரி பாஷாணங்களும், வெள்ளி சம்மந்த சங்கு பாஷாணங்களும், வங்க சம்மந்த தாளக பாஷாணங்களும், தரா சம்மந்த வீரபாஷாணங்களும், தாம்பிர சம்பந்த செப்புத்தொட்டி பாஷாணங்களும் ஈதீதென்றறிந்து அந்தந்த உருப்பின் குறைவு நிறைவுகளுக்கு அந்தந்த பாஷாண அளவுளவின் சிகிச்சையால் தீர்த்தல் வேண்டும்.

இத்தகைய தேக குணாகுணங்களையும், மூலிகை குணாகுணங்களையும், உபரச குணாகுணங்களையும், நவரத்தின குணாகுணங்களையும், உலோக குணாகுணங்களையும், பாஷாண குணாகுணங்களையும் நன்காராய்ந்து அதனதன் சத்துருக்களைக் கண்டறிந்து முடிப்பதும் அதனதன் மித்துருக்களைக் கண்டறிந்து சேர்ப்பதுமாகிய அவுடதங்களை முடித்தல் வேண்டும்.

ஒவ்வோர் தேகத்திற்குள்ள திடத்தையும், சத்துவத்தையும் ஊட்டும் வஜீகரண அவுடதங்களையும், ஆயுள் விருத்திக்கு ஆதாரமாகும் இரசாயன அவுடதங்களையும், மூலிகைகளே தனது சத்துருக்களின் சேர்க்கையால் பாஷாணமாகுதலும். பாஷாணங்களே தனது சத்துருக்களின் சேர்க்கையால் அமுதமாவதும், குழந்தைகளின் வியாதிகளுக்குச் செய்யுஞ் சிகிட்சைகளை அதி ஜாக்கிரதையாகவும், கணபேத குணபேதங்களை அறிந்தும், மக்களுக்கு உண்டாகும் மனோ பீதியாலும், எண்ண பேதத்தாலும் உண்டாகும் பேயநிலை ரோகங்களையும், சரீரத்தை மாறுபடச்செய்யுங் காமரோகங்களையும், கழுத்திற்கு மேற்பட்ட உர்த்தவாத ரோகங்களையும், காய சிகிட்சை, இரண சிகிட்சையாகும் சல்லியரோகங்களையுந் தெரிந்துக்கொள்ளல் வேண்டும்.

இத்தியாதி தேக குணாகுணங்களையும், வியாதியின் குணாகுணங்களையும், அவுடத குணாகுணங்களையும் அறிந்து செய்வதே சிகிட்சா சூஸ்ரதமாகும்.

அவற்றுள் உமக்குள்ள ரோகங்களைத் தெரிந்துக்கொள்ளவேண்டுமாயின் உமக்குள்ள குணச்செயல்களையும், காயச்செயல்களையுங் கண்டறிந்து அவற்றுள் குணச்செயல்களாகும் ரசோகுணவிருத்திகளையும், தமோகுண விருத்திகளையும் ஒடுக்கி காயச்செயல்களில் குன்மத்தை விருத்திசெய்யும் இனிப்புள்ள பதார்த்தங்களாகும் பித்த சத்துக்களை அகற்றி நீத்தனவாதாரமாம் உப்பினப்பண்டங்களை உண்டு வருவீராயின் உருண்டரோகங் கரைந்து உண்ணும் புசிப்பும் பரந்து உதிரஞ் சிறந்து சுகமுறுவீரென்று முடித்தார்.

மாதவன் வேணுவியாரத்தோருக்கு மதியூட்டிய விவரம்

மாதவன் பின்னும் வேணுவியாரசங்கத்தோர்களை நோக்கி சிரமணர்களே! நாம்காலமெல்லாம் மெய்மொழிகள் யாதென்றுகேட்டுத் தெளியாமல் பொய்மொழிகளை நம்பி சமுத்திர அலைபோல் ஓய்வில்லா ஜெநநங்களாகிய பிறவி துக்கத்தில் சுழன்று அனேககாலமாக அல்லல் பட்டிருந்தோம்.

நாம் வாசஞ்செய்யும் இப்பூவுலகமே ஏதுக்குத்தக்க நிகழ்ச்சியாய் கருமத்திற்கு ஏதுவாம் உருதிரண்டு உலகமென்று கூறுவதுள் சீவர்கள் செய்யும்