பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 321

அதனைக் கேட்டிருந்த மிகாரா தனபதிக்கு கோபமீண்டு வேவுகர்களை அழைத்து இந்தப்பெண் எனது மனைக்குள் வந்து சிறிது நாளைக்கெல்லாம் என் தனம் இருந்தென்ன போயென்ன என்னும் சாபமிடுகின்றாள் உடனே என் இல்லத்தைவிட்டு இவளை அகற்றிவிடவேண்டுமெனக் கூச்சலிட்டான்.

அவ்விடமிருந்த வேவுகர்கள் யாவரும் விசாகாவின் ஆட்களாதலின் அம்மொழியைக் கவனிக்காமல் மௌனமாயிருந்தார்கள்.

அக்கொடுமொழியை வினவிய விசாகா தனது மாமனாரை நோக்கி, ஐயனே! என்னைத் தெருவிலிருந்துக்கொண்டு வந்ததுபோல் வார்த்தையாடி விட்டீர், என்னை வெளியிற்றுரத்தும்படியான அவக்கேடுகள் யான்செய்த தென்னை, அவற்றை விளக்கவேண்டுமென்று கேட்டாள்.

மிகாரா தனபதி நானவற்றை விளக்கவேண்டிய அவசியமில்லை என்றான்.

விசாகா மறுபடியும் மாமனாரை நோக்கி ஐயனே! காகதாளி நியாயம் வேண்டாம். என்னுடன் வந்துள்ள எட்டுக்கிரகஸ்தர்களையும் வைத்து விசாரிப்பதே நலமென்று வேண்டி தன்னுடன் வந்த எட்டுக்கிரகஸ்தர்களையும் வரவழைத்தாள்.

மிகாராவும் தனது கிரகஸ்தர்களை வரவழைத்தபோது இருவருங்கலந்து உழ்க்கார்ந்தார்கள். விசாகா இருகட்சி பெரியோர்களை வணங்கி ஐயன்மின்! எனது மாமனார் வாய்ச்சுளுவாக என்னை வீட்டைவிட்டுப் போகும்படி சொல்லுகிறார் அதைத் தாங்கள் தீரவிசாரித்து என்னை அனுப்பிவிட வேண்டுமென்று வணங்கினாள்.

அதனை வினவிய மத்தியர்கள் தனபதியை நோக்கி யாது காரணமென்றார்கள்,

“என் தனத்தை குறைந்தென்ன மிகுந்தென்னவென்று சபித்தாள் அதினால் துறத்தும்படி சொன்னேனென்றான்".

பெரியோர்கள் விசாகாவைநோக்கி அம்மே! காரணம் யாதென்றார்கள். “தென்புலத்தோர் பாத்திரமேந்தி வாயல்படியில் வந்து நின்றதும் தன் மாமனார் அவரைப்பார்த்தும் பாராததுபோல் புசித்திருந்தது கண்டு அவ்வாக்கியம் புகன்றது மெய்யேயென்று கூறினாள்.

அதனை வினவியப் பெரியோர் தனபதியை நோக்கி ஐயா! இவ்வரு மொழிக்கு எமது குழந்தையை வெளியேகும்படி சொல்லலாமோ என்றார்கள்.

அதனைவினவிய மிகாரா பெரியோர்களை நோக்கி இரவு நடுஜாமத்தில் உங்கள் குழந்தை வெளியில் போகலாமோ என்றான்.

பெரியோர்கள் விசாகாவை நோக்கி அம்மே! ஜாமத்தில் வெளியேறிய காரணமென்ன என்றார்கள்.

தனது பெண்குதிரை குட்டி ஈன்றதும் வேவுகர்களால் சங்கதி தெரிந்து அவ்விடஞ்சென்று குதிரைக்கு சிகிட்சை செய்ததும் விளக்கினாள்.

அதனை வினவிய பெரியோர்கள் தனபதி! யாதுதோஷமுங் காணவில்லையே என்றார்கள்.

மிகாராதனபதி பெரியோர்களை நோக்கி மருமகள் செய்வது ஓர் வகையாயிருப்பினுந் தனது தகப்பனார் தனஞ்சய தனபதி கூறியவாக்குகளில் தன் நெருப்பை வெளியில் விடாதே வெளி நெருப்பை வீட்டுள் கொண்டுவராதே என்று கூறியுள்ளாரே இது நியாயமோ என்றான்.

அதனை வினவியப் பெரியோர்கள் விசாகாவை நோக்கி குழந்தாய்! அவ்வகை நிகழ்ந்ததோ என்றார்கள்.

பெரியோர்களே! என் பிதா இவர் கூறியவண்ணங் கூறவில்லை யான்கூறும் வண்ணங் கூறினார்.

பெரியோர்களே! என் தகப்பனார் கூறிய கருத்து அதுவன்று. அவரென்னை நோக்கி குழந்தாய்! உன் மாமனாராயினும், உன் மாமியாராயினும், உன் புருஷனாயினும், உன் விஷயத்தில் ஏதேனுங் கொறூரவார்த்தைகளைப் பேசினாலும் வைதாலும் அவற்றை அயல் வீட்டிற்குச் சென்று அந்நெருப்புக் கொப்பாகிய வார்த்தைகளை சொல்லிவிடுவாயாயின் அஃது உன் வீட்டிற்கும்