பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அயல் வீட்டிற்கும் பற்றி எறிந்து பற்பல துக்கங்களை எழுப்பிவிடும். ஆதலின் உன்வீட்டு நெருப்பை வெளிவிடாதே என்று கூறினாரென்றாள்.

அதனை வினைவிய மிகாரா தனபதி அதுசரிதான் வெளிவீட்டின் நெருப்பு உள்ளுக்கு வராவிடின் பதார்த்த வகைகள் எவ்வகை நிகழும் இவ்வார்த்தைக் கூறலாமோ என்றான்.

விசாகா பெரியோர்களை நோக்கி ஐயன்மின்! எனது பிதாவின் கருத்து அஃதன்று. அண்டைவீட்டார் அயல்வீட்டார் உன்னை தருவித்து உன் மாமனாரைப் பற்றியேனும் உன் மாமியாரைப்பற்றியேனும், உன் புருஷனைப் பற்றியேனும் நெருப்புக்கொப்பாகிய தீங்கான வார்த்தைகள் ஏதேனும் புகல்வார்களாயின் அவ்வார்த்தையை வீட்டுள் கொண்டுவந்து நெருப்புக் கொப்பாங் கலகத்தை மூட்டிவிடாதேயென்று கூறினார்.

ஈதன்றி எனது தந்தையார் ஓதியுள்ள மற்றுங் கட்டளையும் விவரிக்கின்றேன்.

கொடுத்தவனுக்குக் கொடு என்பதின் பொருள்.

உன் வீட்டிலிருக்கும் ஓர் வஸ்துவை ஒருவன் இரவல் வாங்கிக்கொண்டு மறுபடியுங் கொண்டுவந்து கொடுப்பானாயின் அவனுக்குக்கொடு.

கொடாதவனுக்குக் கொடாதே என்பதின் பொருள்.

உனது பொருளை இரவலென்று வாங்கிக்கொண்டுபோய் மறுபடியுங் கொடாதவனுக்குக் கொடாதே.

கொடாதவனுக்குக் கொடு என்பதின் பொருள்.

கொடாத லோபியாயிருப்பினும் அவன் வருந்தி இரந்தகாலத்தில் கொடு. கொடுத்தவனுக்குக் கொடு ஒருகால் உனக்கு உபகாரஞ் செய்வானாயின் பலகாலும் அவனுக்குக் கொடு.

காலத்தில் உட்காரு என்பதின் பொருள்.

உன் மாமனாரேனும், உன் மாமியாரேனும், மற்றும் பெரியோர்களேனும் எதிரிருக்குங் காலங்களில் உட்காராதே. அவர்களெதிரில் இல்லாதகாலங்களில் உட்காரு.

காலத்தில் சாப்பிடு என்பதின் பொருள்.

உன் மாமனார் மாமியார் புருஷன் இவர்கள் புசித்து திருப்த்தி அடைந்தபின் காலத்தில் நீ சாப்பிடு.

காலத்தில் தூங்கு என்பதின் பொருள்.

உன் மாமனார், மாமியார், புருஷன் நித்திறையடைந்த காலத்திற்குப்பின் நீ நித்திறைக்கொள்.

நெருப்பை கவனி யென்பதின் பொருள்.

உன் மாமன், மாமி, நாத்தி, மாதுலி, புருஷன் இவர்களை நெருப்பென்று கவனித்து மிருதுவாக்கில் வாழக்கடவாய்.

வீட்டுதேவதைகளை விசுவாசி என்பதின் கருத்து.

உன் மாமன், மாமி, புருஷன் இவர்களை வீட்டுதேவதைகளெனக் கொண்டாடக்கடவாய் என்று கூறியுள்ளார்.

எனது தந்தை எனக்களித்த இஸ்திரீதனங்களில் அழியாதனங்கள் இவைகளே என்று வாய்பொத்திநின்றாள்.

விசாகாவின் வாய்மொழிகள் யாவையுங் கேட்டிருந்த மிகாராதனபதி மறுமொழி கூறுவதற்கு ஏதுவில்லாமல் நாணடைந்து தலைகவிழ்ந்து பூமியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

இதனையுணர்ந்த கிரகஸ்தராகிய பெரியோர்கள் மிகாராதனபதியை நோக்கி மற்றுங் குற்றங்கள் ஏதேனும் உண்டோ என்றார்கள்.

பெரியோர்களே! யாதொரு குற்றமுமில்லை என்றான்.

யாதாமோர் குற்றமுமில்லாதிருக்க குழந்தையை வெளியிற் போகும்படிக் கூறலாமோ என்றார்கள்.

தனபதியும் பெரியோர்களும் இவ்வகையாக வார்த்தையாடிக் கொண்டிருக்குங்கால் விசாகா பெரியோர்களை நோக்கி தாங்களிவற்றை விசாரிப்பதற்கு முன் என் மாமனார் உத்திரவின்படி யான் வீட்டைவிட்டுப்