பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 323

போவது சிறப்பாகாது. தாங்கள் யாவற்றையும் சரிவர விசாரித்து என்மீது யாதொரு குற்றமும் ஏற்படாததினால் என் பிதாவின் சொற்படி நான் புறப்படவேண்டுமென்று கூறி தனது தோழிப் பெண்களையும் ஏவலாளர்களையும் அழைத்து தனக்குவேண்டிய தேர்பரிவாரங்களை ஆயத்தஞ் செய்யும் படி ஆக்கியாபித்தாள்.

அதனைக் கண்ணுற்ற தனது மாமனார் விசாகாவைநோக்கி அம்மணி! யான் தெரியாமற் சொல்லியக் குற்றங்களைப்பொருத்து என் மனையை சிறப்படையச் செய்யவேண்டுமென்று இரைஞ்சினான்.

விசாகா தனது மாமனாரை நோக்கி பெரியோரே யான் பொருக்க வேண்டியதெதுவோ அதைப்பொருத்துக்கொண்டேன் ஆனால் புத்தருடைய தன்ம கன்ம குடும்பத்திற் பிறந்தவள் என்மனைக்கு எக்காலுந்தென் புலத்தார்வந்து அன்னம் புசிக்க வேண்டியதே சிறப்பாகும் அத்தகைய ஞானசாதகர் பாத்திரம் அறிந்து பிச்சையிட உத்திரவளிப்பீரேல் இவ்விடம் தங்கி எனது மனைத்தொழில் நடாத்துவேன் அவ்வகை இலதேல் எனக்கு உத்திரவளிக்கவேண்டுமென்று வருந்தினாள்.

அவள் அமுதவாக்கை உணர்ந்த மிகாரா அம்மணி! உமதிஷ்டம் போல் தென் புலத்தார்க்கன்னமளித்து சிறப்படையலாமென்று கூறினான்.

மாமனார் அன்பின் வாக்கை வினவிய விசாகா தனது கிரகஸ்த பெரியோர்களில் சிலரை தருவித்து தாங்கள் இரத மூர்ந்துபோய் நமது அறவாழியானாகிய அவலோகிதரும், அவரது சங்கத்தவர்களாகிய தென்புலத் தோரும் எங்கிருந்தபோதுங் கண்டறிந்து அவர்களை நமது இரதங்களில் ஏற்றிக்கொண்டு வந்துவிடவேண்டுமென்று ஆக்கியாபித்தாள்.

பெரியோர்களும் பெருமானிருப்பிடங் கண்டறிந்து அருகில் சென்று சரணாகதி வேண்டியழைத்து மிகாராதனபதி இல்லம் வந்து சேர்ந்தார்கள்.

விசாகாவும் மிக்க பயபக்த்தியுடன் பதார்த்தங்களை வட்டித்து பாத்திரங்களில் அளித்து தனது மாமனாரை அழைத்து பாத்திரங்களிலுள்ள அன்னத்தை பகவனுக்குப் பரிமாறும்படி வேண்டிக்கொண்டாள்.

மிகாராதனபதி முன்பொருகால் சமண முனிவர்களாகுந் தென்புலத்தோரைக் கண்டுங் காணாதவன் போல் புசித்திருந்தவனாதலின் மனங்குன்றி நாணடைந்து விசாகாவை நோக்கி அம்மணி! விநாயகருக்குத் தாமே அன்னமளித்துவிடவேண்டுமென்று கோறினான்.

ஐயனே! அங்ஙனமாகுகவென்று விடைபெற்று தனது கணவன் புண்ணியவர்த்தன சிறுவனை அழைத்து வந்து பதியுஞ் சதியும் பகவன் பாதத்திற் பணிந்து கருணாகாரா, கணநாயகா, கங்கையாதாரா, காசிவிஸ்வேசா, கமலநாயகா, இவ்வடியாரளிக்கும் அன்னத்தை அன்புடன் புசித்து எங்களைப் புனிதர் களாக்கவேண்டுமென இரஞ்சினாள்.

விசாகாவின் வணக்க வாக்குணர்ந்த விநாயக்கடவுள் புண்ணிய வர்த்தனனையும் புண்ணியவர்த்தினியையும் அறிவு பெருக என வாழ்த்தி அன்னமுண்டு முகிந்தபின் அனைவருக்கும் அருள் மொழியை ஊட்டும்படி ஆரம்பித்தார்.

அக்கால் விசாகா மாமனாரை அணுகி ஐயனருள் மொழியைக் கேட்க வாருங்கோளென்று அடிபணிந்தாள். மிகாராதனபதி தனக்குள்ள நாணத்தினாலும் அச்சத்தினாலும் அறவாழியான் முன்பு செல்லாமல் ஓர் அரையின் திறைமறைவில் உட்கார்ந்து கொண்டான்.

உலக மூன்றும் உணர்ந்து உள்ளடைந்த ஒப்பிலா அப்பன் மிகாரா தனபதியின் லோபகுணத்தையும், அதினால் நேர்ந்த நாணத்தையும், திறைமறைவில் வீற்றிருக்கும் அச்சத்தையும், உணர்ந்த உலகநாதன் திறை மறைவினின்ற மிகாராவுக்கும், திறைக்கும், திறையறைக்கும் அப்புறமுள்ளவர் களுக்கும், மலைக்கு உட்புறத்தும் மலைக்கும் அப்புறமுள்ளவர்களுக்கும், சமுத்திரத்துள்ளும் சமுத்திரத்து அப்புறமுள்ளவர்களுக்கும், மெய்யருக்கும் புத்தரிவரே, சத்தியமென்னும் புத்தரிவரே, சகலலோக சாட்சியாகிய புத்தரிவரே