பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 325

வாழ்விலுங் குறைவற்ற செல்வத்திலும் இருத்தி சுருக்கத்தில் நித்திய நிலைபெறும் மறுமெயடைந்தாள்.

14. குருக்ஷேத்திர காதை

பகவன் அந்நகரைவிட்டு முன்பு சிலநாள் தங்கியிருந்து குருக்ஷேத்திரமெனப் பெயர்பெற்றவிடஞ் சென்று அங்குள்ள பிக்குழாங்களுக்குப் போதிக்க கருணைபுரிந்து சங்கத்தோரை நோக்கி ஓ! சகோதிரர்களே என்றழைத்தனர்.

சிஷ்யர்கள் ஐயனே என விடை பகர்ந்தார்கள்.

பகவன் உபதேசிக்க ஆரம்பித்தார். சகோதிரர்களே! பரிசுத்த பேறு அடைவதற்கும், துக்க, அழுகை இவைகளினின்று விடுபடுவதற்கும், நீதியில் நடப்பதற்கும், நிருவாண நிலை அடைவதற்குமான ஓர் வழி மனுக்களுக்குத் திறக்கப்பட்டிருக்கின்றது. அவ்வழியே நான்குவித சமாதிகளென்னப்படும்.

அந்நான்கு சமாதிகள் யாவை? அவை, காயா சமாதி, வேதனா - சமாதி, சித்தா சமாதி தம்மா சமாதி என்பவைகளாம்.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் தேகவிஷயத்தில் ஜாக்கிரதை யுடையவனாயும், அறிவுள்ளவனாயும், ஆராய்ச்சி உள்ளவனாயும், காமம் துக்கம் இவைகளினின்று தன்னை விலக்கிக்கொள்பவனாயும் இருப்பானாகில் அவனே காயசமாதியிலிருப்பவனாவான்.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் உணர்ச்சி விஷயத்தில் ஜாக்கிரதையுடையவனாயும், அறிவுள்ளவனாயும், ஆராய்ச்சி உள்ளவனாயும், காமம் துக்கம் இவைகளினின்று தன்னை விலக்கிக்கொள்பவனாயும் இருப்பவனாகில் அவனே வேதனாசமாதியிலிருப்பவனாவான்.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் சித்தவிஷயத்தில் மனஜாக்கிரதை உடையவனாயும், அறிவுள்ளவனாயும், ஆராய்ச்சி உள்ளவனாயும், காமம், துக்கம் இவைகளினின்று தன்னை விலக்கிக்கொள்பவனாயும் இருப்பானாகில் அவனே சித்த சமாதியிலிருப்பவனாவான்.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் கந்த விஷயத்தில் ஜாக்கிரதை யுடையவனாகவும், அறிவுள்ளவனாயும், ஆராய்ச்சி உள்ளவனாயும் காமம், துக்கம் இவைகளின்று தன்னை விலக்கிக் கொள்ளுபவனாயும் இருப்பானாகில் அவனே தம்ம சமாதியில் இருப்பவனாவான்.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் தேக விஷயத்தில் ஜாக்கிரதையுடன் எப்படியிருப்பான்.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் துறந்து காட்டிற்கேனும், ஓர் மரத்தினடியிலேனும், ஜனசஞ்சாரமற்ற விடத்திலேனும் சென்று சப்பளம் போட்டு உட்கார்ந்து நிமிர்ந்த தேகத்துடனும், தியான சக்தியுடனும் இருந்து அவன் வெளிக்குவிடும் சுவாசத்தைப்பற்றியும், உள்ளுக்கிழுக்கும் சுவாசத்தைப்பற்றியும், மனத்திடை நிறுத்துவான். வெளிக்கு சுவாசத்தை வெகுநேரம் விட்டு தான் இவ்வளவு அதிகமாக சுவாசத்தை விட்டோமென கிரஹித்தும் உள்ளுக்கிழுக்கும் சுவாசத்தை வெகுநேரம் இழுத்து தான் அதிகமாக சுவாசத்தை உள்ளுக்கிழுத்தோம் என கிரகித்தும், வெளிக்கு சுவாசத்தை சற்றுநேரம் விட்டுதான் இவ்வளவு சிறுநேரம் சுவாசத்தை விட்டோம் என கிரகித்தும் உள்ளுக்கிழுக்கும் சுவாசத்தை சற்றுநேரம் இழுத்து, தான் இவ்வளவு சிறுநேரம் சுவாசத்தை இழுத்தோமென கிரகித்தும் இவ்விதமாக தெளிவுடன் சுவாசத்தை வெளிக்கு விடுவதும், உள்ளுக்கிழுப்பதுமாக அப்பியாசத்திற்குக் கொண்டுவந்து பின் இருமூச்சுகளையும் சலனமாகச் செய்துக்கொள்ளுவான்.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் தேகவிஷய ஆராய்ச்சியில் சுவாச சம்பந்தமாக தியானிக்கும் போது பின்வருமாறு விசாரிப்பான். அதாவது வெளிக்குவிட்டு உள்ளுக்கிழுப்பதும், உள்ளுக்குவிட்டு வெளிக்கு இழுப்பது மாகிய இச்சுவாசங்களுக்கு ஆதாரமெது. ரூபமே இவைக்கு ஆதாரம். அந்த ரூபமோ பூதங்களால் அமையப்பட்டது. இரண்டாவது நாமமும் பூதங்களுடன்