பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சேர்ந்து வருகின்றது. நாமம் இஃதென தெரிந்தவுடன் அதைப் பற்றியுள தெதுவென விசாரிக்கையில் அது அறியாமெயாலென்றும் தெரிந்து நாமமும் ரூபமும் ஒன்றை ஒன்று பற்றியிருக்கிறதன்றி வேறு நான் என்பது ரூபமாக வருவது கிடையாது.

ஓ! சகோதிரர்களே! இவ்விதமாக தேகவிஷயத்தில் ஜாக்கிரதையுடைய வனாய் இருப்பதோடு ஏனையோருடைய தேகவிஷயத்திலும் ஜாக்கிரதையுட னிருப்பான். தன் தேகம்போல் ஏனையோர் தேகமும் தோன்றி அல்லல்பட்டு அழியுமெனவும், தன் தேகம்போல் ஏனையோர் தேகமும் தளர்வடையு மென்றும், தன் தேகம்போல் ஏனையோர் தேகமும் விழுந்து விடுமெனவும் நிதானித்து தியானிக்கும்போது தேகமட்டும் இவனுக்குத் தோன்றுமன்றி ஜீவஸத்தி என்றும், பெண் இதென்றும், ஆண் இதென்றும், நான் எனது என்றும், ஆட்டும் பொருளென்றும், மனிதரூபமென்றுந் தோன்றாது இவ் விதமாக தேகவிஷயத்தில் ஜாக்கிரதையுடன் அறிவை விருத்தி செய்துவர தியானசக்தி அதிகரித்து தனிபுருஷனாகிய உலக பற்றற்று நிற்பன். ஓ! சகோதிரர்களே! இவ்விதமாக ஒரு சகோதிரன் தேகவிஷயத்தில் ஜாக்கிரதை யுடையவனாயிருப்பான்.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் நடக்கும்போது நாம் நடக்கின்றோமென அறியும் திறமுடனும், நிற்கும்போது நாம் நிற்கின்றோமென அறியும் திறமுடனும், உட்காரும்போது நாம் உட்காருகிறோமென அறியும் திறமுடனும், படுக்கும்போது நாம் படுக்கின்றோமென அறியும் திறமுடனும், மற்ற எந்த நிலைமையிலிருந்தபோதிலும் அந்த நிலைமைகளில் அறியுந் திறமுடனிருப்பான்.

ஓ! சகோதிரர்களே! முன் தேக விஷயத்தில் ஜாக்கிரதையுடனிருந்து அதன்பின் தேகநிலைகளைப்பற்றி தியானிக்கத் திரும்புகின்றான்.

நடப்பது யார்? யார் நடை? நடக்கச்செய்வதெது? என்ற இம்மூன்று கேள்விகளைத் தனக்குள் கேட்டு நான் என்பது நடக்கவில்லை, நான் என்பதின் நடையுமன்று, மனோகர்மத்தால் வாயுதாது ஊடுறுவிச்செல்ல நடக்கச்செய்தது நடக்கவேணுமென்கின்ற எண்ணம் பிறந்தது. அந்த எண்ணம் வாயுதாதைத் தூண்ட வாயுதாதே நடக்கச்செய்தது. மனோகர்மம் தூண்டி வாயுதாது சம்பந்தப்பட்டு ஊடுறுவிச்செல்ல இந்த முழுதேகத்தை முன்னுக்கு நடக்கச் செய்தது.

நிற்க வேணுமென்கின்ற எண்ணம் பிறந்தது. அந்த எண்ணம் வாயுதாதைத் தூண்ட வாயுதாதே நிற்கச்செய்தது.

உட்காரவேணுமென்கின்ற எண்ணம் பிறந்தது. அந்த எண்ணம் வாயுதாதைத் தூண்டி வாயுதாதே உட்காரச்செய்தது.

படுக்கவேணுமென்கின்ற எண்ணம் பிறந்தது. அந்த எண்ணம் வாயுதாதைத் தூண்ட வாயுதாதே படுக்கச்செய்தது என இவ்விதமாகத் தெளிந்து பின்வருமாறு தியானிப்பான்.

ஒரு ஸத்து இருந்தே நடக்கச்செய்கிறதென்றும், ஒரு ஸத்து இருந்தே நிற்கச்செய்கிறதென்றும், ஒரு ஸத்து இருந்தே உட்காரச்செய்கிறதென்றும், ஒரு ஸத்து இருந்தே படுக்கச்செய்கிறதென்றும் கூறுவார்கள். அப்படி நடக்கச் செய்வதும், நிற்கச் செய்வதும், உட்காரச் செய்வதும், படுக்கச்செய்வதுமான ஒரு ஸத்து உண்டா ? கிடையாது. ஏன் சாதாரணமாக ஜனங்கள் வண்டி போகின்றது, வண்டி நடக்கின்றதென கூறுகிறார்களே? மாட்டைக்கொண்டு மனிதன் பூட்டாவிட்டால் வண்டி யாது செய்யும்? வண்டி போகிறது, வண்டி நிற்கிறதென்னும் வார்த்தைக்குப் பொருள் யாது? வண்டிபோகிறதென்றும், வண்டி நிற்கிறதென்றும் கூறுவது அர்த்தமற்ற வார்த்தை. அறிவின் குறைவால் தேகம் வண்டியை ஒத்தது; மனமே புருடன், எண்ணங்களின் ஏதுக்களே எருது, எண்ணமே வண்டி ஓட்டுபவன். நடக்கவேணுமென்றேனும், நிற்க வேண்டுமென்றேனும், உட்காரவேண்டுமென்றேனும், படுக்க வேண்டுமென் றேனும் எண்ணம் உதிக்க வாயுதாது தோன்றி நடக்கவும், நிற்கவும், உட்காரவும், படுக்கவும் செய்கிறது. நான் நடக்கின்றேன், நான் நிற்கின்றேன், நான்