பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328 / அயோத்திதாசர் சிந்தனைகள்

மூடப்பட்டதெனவும், இத்தேகத்தில் சிரசின்ரோமம், தேகத்தினது ரோமம், நகம், தந்தம், தோல், மாமிசம், நரம்பு, எலும்பு, எலும்பிலுள்ள ஊன், ஈரல், இருதயம், ஈரற்குலை, நுரையீரலைச் சார்ந்திருக்குஞ் சவ்வு, மண்ணீரல், சுவாசாசயம், இரைப்பைக்கும் ஆசனத்திற்கும் இடையிலுள்ள குடல், மணிக்குடல், இரைக்குடல், மலம், பித்தநீர், கபம், சீழ், இரத்தம், வியர்வை , நிணம், கண்ணீர், நிணநீர், உமிழ்நீர், சளி, வெண்நீர், மூத்திரம் அடங்கியுள்ளனவென்று சிந்திப்பான்.

ஓ! சகோதிரர்களே! சாலி அரிசி, நெல், அவரை, உளுந்து, எள், அரிசி முதலானவைகளை மூடிவைத்திருந்த ஒரு பாண்டத்தை ஒருவன் திறந்து வைத்துவிட்டு இப்பாண்டத்தில் இது சாலி அரிசி, இதுநெல் இது அவரை, இது உளுந்து, இது எள், இது அரிசியென பிரித்துவிடுவது போல் ஒரு சகோதிரன் உச்சிமுதல் உள்ளங்கால் வரையிலும் அருவறுக்கத்தக்க பல அசுத்தங்கள் பொருந்தி தோலால் மூடப்பட்ட இத்தேகத்தில் இது தேகத்தினது ரோமம், இது நகம், இது தந்தம், இது தோல், இது மாமிசம், இது நரம்பு, இது எலும்பு, இது எலும்பிலுள்ள ஊன், இது ஈரல், இது இருதயம், இது ஈரற்குலை, இது நுரை ஈரலைச்சார்ந்திருக்கும் ஜவ்வு, இது இரைக்குடல், இது மலம், இது வெண்நீர், இது மூத்திரம் என பிரித்து பிரித்து அதே தியானத்தினின்று வெறுத்து வருவான்.

பூனாச்சா பரங் பிக்கவே பிக்கூ! ஈமாமேவா காயங் உத்தம் பாதாதவ
அதோ கேதா மா தகாதச்சாபிரியந்தங் மூரம் நானாபகராஸா அஸுஸினே பிச்சவக்கட்டி அதி இமம்லே மெய்ங்காயே. கேஸா லோமா ஹரு தந்தா தஸ்ஸோ மம்ஸங் ந அத்தி அத்தி மிஞ்சங் வக்கங் ஹதயங் யக்கனங் கிளோமாகங்பிஹாகங் பப்பாஸங் அந்டங் அந்டாகுணந் உதரியங் கரிதங் மதலுகங் பித்தங் ஸேமங் புப்போ லோஹிதங் ஸெடோ மேடோ அஸுவாஸா கேலோங் ஸிங்கனீகங் லஸ்கங் மோதந்தீ. தியாதாபி பிக்கவே உபடோ மூகா புட்டோலி புரா நானா விஹிதாடா தஞ்ஞதா தேய்தீதங் ஸாலீனங் விஹினங் முகானங் மாதானங் திலானங் தங்தூலானங் தமேனங் சக்குமா புரிஸோ முச்சத்தவா பிச்சவக்கேயா, இமே ஸாவி, இமேவீஹி, இமேமுகா, இமேமாஸ, இமேநீலா, இமே தந்துல. மேவாகோ பிக்கவே பிக்கூ! இமாமேவா காயங் உத்தம் பாதாதலே அதோகேதா மாதகாதஸா பரிபந்தங் பூரங் நானா பகஸாஸ அஸுசினோ பிச் சவக்கதீ.

ஓ! சகோதிரர்களே! இவ்விதமாக தேகவிஷயத்தில் ஜாக்கிரதை உடையவனாய் இருப்பதோடு ஏனையோருடைய தேகவிஷயத்திலும் ஜாக்கிரதையுடன் இருப்பான். தன் தேகம்போல் ஏனையோர் தேகமும் தோன்றி அல்லல்பட்டு அழியுமெனவும், தன்தேகம்போல் ஏனையோர் தேகமும் தளர்வடையுமென்றும், தன் தேகம்போல் ஏனையோர் தேகமும் விழுந்துவிடும் எனவும், நிதானித்து தியானிக்கும்போது தேகம் மட்டும் இவனுக்குத் தோன்றுமன்றி ஜீவஸத்தி என்றும், பெண் இதென்றும், ஆண் இதென்றும், நான், எனது என்றும், ஆட்டும் பொருளென்றும், மனிதரூபமென்றுந் தோன்றாது இவ்விதமாக தேகவிஷயத்தில் ஜாக்கிரதையுடன் அறிவை விருத்தி செய்துவர தியானசக்தி அதிகரித்து தனி புருஷனாகி உலகபற்றற்று நிற்பன். ஓ! சகோதிரர்களே! இவ்விதமாக ஒரு சகோதிரன் தேக விஷயத்தில் ஜாக்கிரதையுடையவனாய் இருப்பான்.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் தேகத்தை நோக்கி இத்தேகத்தில் வாயு, அக்னி, பிருதிவி, நீர் என்னும் தாதுக்களிருந்துக் கொண்டு நடத்துகின்றன என்றும் தியானத்திலிருப்பான். ஒரு சகோதிரன் மயானத்திற்குச்சென்று அங்குள்ள ஒருநாளில் இறந்து அழிகிறதேகத்தையும், இறந்த இரண்டாம் நாளில் அழிகிற தேகத்தையும், இறந்த மூன்றாம் நாள் அழிகிற தேகத்தையும், ஊதலிட்டிருக்குந் தேகத்தையும், நிலைமுச்சுகெட்டு அழிகின்றதெனக்கருதி தன்தேகமும் இதுபோல் கெடும் அல்லவா என தியானிப்பான்.

மூனாச்சா பரங் பிக்கவே பிக்கூ! இமாமேவாயங் யதாதீயங் யதாபனீஹிதங் தாதுஸோபச்சவேகத்தீ. அதி இமாங் ஸமேங்காயே பதவிதாது, அபோதாது, தேஸோதாது. வாயோதாது, யசாபிபிக்கவே தக்கோ கோகாத கோவாகோகாதங்தீ.