பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336 / அயோத்திதாசர் சிந்தனைகள்

2. ஒரே பிறப்பை மட்டும் அடைந்த பலன்
3. மறுபிறப்பு தோற்றுவதற்கு ஏதுவில்லாது நின்ற பலன்
4. நிருவாண பலன்

ஓ! சகோதிரர்களே! துக்கோற்பத்தியாகிய தூய்மெயான சத்தியம் யாது?

ஓ! சகோதிரர்களே! அவைகள் முறையே மறுபிறப்பிற்கு ஆளாக்கும் அவா, இன்பத்தைநாடி ஆவலுண்ட அவா, ஒவ்வொரு பிறப்பிற்கும் சந்தோஷத்தை நாடும் அவா, அவை யேகாமத்தால் உண்டாகும் அவா, உயிர் வாழ்க்கையின் பேரில் உண்டாகும் அவா, அநித்யமாகும் சொற்ப இன்பத்தால் உண்டாகும் அவாவென்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! இவ்வேட்கையானது எங்கிருந்து உதித்து விருத்தியாகின்றது? எங்கு நிலைத்து வேரூன்றுகிறது?

ஓ! சகோதிரர்களே! ஜீவர்களுக்கு எதன்பேரில் இன்பம் இஷ்டமு மாயிருக்கின்றதோ அவ்விடத்தில் வேட்கையானது உதித்து விருத்தியாகி நிலைத்து வேரூன்றுகிறது

ஓ! சகோதிரர்களே! ஜீவர்களுக்கு இன்பமும், ஹிதமானது எது; வேட்கை எங்கிருந்து உதித்து விருத்தியாகின்றது; எங்கு நிலைத்து வேரூன்றுகிறது?

(அறுவித ஞானேந்திரியங்கள்) சகோதிரர்களே! ஜீவர்களுக்கு கண் இன்பத்தையும் ஹிதத்தையும் தரும். அங்கு அவா உதித்து விருத்தியாகி அவ்விடத்திலேயே அது நிலைத்து வேரூன்றுகிறது. செவி-நாசி நா - தேகம் - மனம் இவைகள் ஜீவர்களுக்கு இன்பத்தையும், ஹிதத்தையும், தரும். அங்கங்கே அவாக்கள் உதித்து விருத்தியாகி அவ்வவ்விடத்திலேயே அவைகள் நிலைத்து வேரூன்றுகின்றன.

(அறுவித இந்திரிய கோசரமான வஸ்துக்கள்) ரூபங்கள், சப்தங்கள், கந்தங்கள், பரிசங்கள், எண்ணங்கள் இவைகள் ஜீவர்களுக்கு இன்பத்தையும், ஹிதத்தையும் தரும். அங்கங்கே அவாக்கள் உதித்து விருத்தியாகி அவ்வவ்விடத்திலேயே அவைகள் நிலைத்து வேரூன்றுகின்றன.

(அறுவித விக்ஞானங்கள்) சித்தம் கண் - சித்தம், செவி - சித்தம், நாசி - சித்தம், நாவு - சித்தம், தேக - சித்தம், மனோ - சித்தம் இவைகள் ஜீவர்களுக்கு இன்பத்தையும் ஹிதத்தையும் தரும். அங்கங்கே அவாக்கள் உதித்து விருத்தியாகி அவ்வவ்விடத்திலேயே அவைகள் நிலைத்து வேரூன்றுகின்றன.

(அறுவித பரிசங்கள்) கண்ணின் பரிசம், செவியின் பரிசம், நாசியின் பரிசம், நாவின் பரிசம், தேகத்தின் பரிசம், மனோபரிசம் இவைகள் ஜீவர்களுக்கு இன்பத்தையும், ஹிதத்தையும் தரும். அங்கங்கே அவாக்கள் உதித்து விருத்தியாகி அவ்வவ்விடத்திலேயே அவைகள் நிலைத்து வேரூன்றுகின்றன.

(அறுவித உணர்ச்சி) கண் பரிசத்தாலாய உணர்ச்சி, செவி பரிசத்தாலாய உணர்ச்சி, நாவு பரிசத்தாலாய உணர்ச்சி நாசி பரிசத்தாலாய உணர்ச்சி, தேக பரிசத்தாலாய உணர்ச்சி, மனோ பரிசத்தாலாய உணர்ச்சி, இவைகள் ஜீவர்களுக்கு இன்பத்தையும், ஹிதத்தையும் தரும். அங்கங்கே அவாக்கள் விருத்தியாகி அவ்வவ்விடத்திலேயே அவைகள் நிலைத்து வேரூன்றுகின்றன.

(அறுவித குறிப்புகள்) ரூபங்களின் குறிப்பு, சப்தங்களின் குறிப்பு, கந்தங்களின் குறிப்பு, ரசங்களின் குறிப்பு, பரிசங்களின் குறிப்பு, எண்ணங்களின் குறிப்பு, இவைகள் ஜீவர்களுக்கு இன்பத்தையும், ஹிதத்தையும் தரும். அங்கங்கே அவாக்கள் உதித்து விருத்தியாகி அவ்வவ்விடத்திலேயே அவைகள் நிலைத்து வேரூன்றுகின்றன.

(அறுவித நினைவுகள்) ரூபங்களைப்பற்றி நினைத்தல், சப்தங்களைப் பற்றி நினைத்தல், கந்தங்களைப்பற்றி நினைத்தல், ரசங்களைப்பற்றி நினைத்தல் பரிசங்களைப்பற்றி நினைத்தல், எண்ணங்களைப்பற்றி நினைத்தல் இவைகள் ஜீவர்களுக்கு இன்பத்தையும், ஹிதத்தையும் தரும். அங்கங்கே அவாக்கள் உதித்து விருத்தியாகி அவ்வவ் இடத்திலேயே அவைகள் நிலைத்து வேரூன்றுகின்றன.

(அறுவித அவாக்கள் ) ரூபங்களின் பேரில் அவா, சப்தங்களின் பேரில் அவா, கந்தங்களின் பேரில் அவா, ரசங்களின் பேரில் அவா, பரிசங்களின்