பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 25

யாப்பருங்கலக்காரிகை

பூந்தண் சினைமலர் மல்கிய பொழிற் பிண்டி
வேந்தன் புகழ் பரவாதவர் வினைலெல்லார் - அதனால்
அறிவன தடியிணை பரவிப்
பெறுகுவர் யாவரும் பிறவியினெறியே.
வானோர் தொழ வண்டாமரை
தேனார் மலர் மேல்வந்தரு
ளானாவருள் கூரறிவனைக்
கானார் மலர் கொண்டேத்தி வணங்குனர்

பலர் புகழ் முத்தி பெறுகுவர் விரைந்தே

புத்தருடைய சரித்திரங்களையும் போதனைகளையும் நம்முடைய தேசத்து சரித்திரங்களில் எவ்வகையாக எழுதிவைத்திருக்கின்றார்களோ அது போலவே, நேபால், சீனம், ஜப்பான், சையாம், பர்மா, சிலோன், தீபேத் முதலிய தேசங்களிலும் எழுதிவைத்திருக்கின்றார்கள்.

ஆனால் அவர் பிறந்த தேதியை மட்டிலும் கிஞ்சித்து மாறுபட எழுதி வருகிறார்கள்.

உலகெங்கும் மகிமை பெற்றிருக்கும் மகாஞானியின் பிறந்ததேதி மாறுபட்டதற்குக் காரணமென்னவென்றால் மகதநாட்டை அரசாண்டுவந்த சாக்கையகுல சக்கரவர்த்திகள் வமிச வரிசையிலுதித்து சாக்கையருடைய இருப்பில் அவர்பிறந்து வளர்ந்த சரித்திரங்கள் யாவற்றையும் ஜாதக அம்ஸமாக எழுதி வைத்திருந்தார்கள்.

அக்காலத்தில் சாக்கையருக்குச் சத்துருவாகப் புருசிகர்கள் இவ்விடம் வந்து சேர்ந்து சாக்கையர்களை பறையர் பறையரென்று இழிவுகூறி தலையெடுக்கவிடாமல் நசித்து விட்டபடியால் அவருடைய சரித்திரங்களின் வரிசையாவற்றும் சிதருண்டு விட்டது.

அந்தந்ததேசங்களில் அவர் நிர்வாணமடைந்த நாளை எந்தெந்த காலங்களிற் கொண்டாடினார்களோ அந்தந்த சரித்திரங்களின் படிக்கும் அவருடைய கட்டளைகளை மலைகளில் வரைந்திருக்கும் எழுத்து இலக்கங்களின் படிக்கும் 2500-2600 வருஷங்களுக்கு உட்பட அவர்பிறந்த நாளைக் குறிப்பிட்டு வருகிறார்கள்.

ஆனால் அவர்பிறந்து வளர்ந்த இத்தேசத்தின் கடைச்சங்கவித்து வான்களில் ஒருவராகிய வணிகசாத்தன் இயற்றியுள்ள பஞ்சகாவியங்களில் ஒன்றாகிய மணிமேகலை என்னும் சரித்திர ஆதரவின்படிக்கு அவர்பிறந்தது இந்த விகாரி வைகாசி மாதம் பௌர்ணமி வரையில் 3384 வருடமாகிறது.

பற்பல பாஷைகளிலுள்ள இவருடைய சரித்திரங்களை எவ்வகையில் தெரிந்துக் கொள்ளும்படி நேரிட்டதென்றால் புத்தருடைய ஞானங்களையும் நீதிகளையும் நன்குணர்ந்த ஐரோப்பியர்களும், ஜெர்மன்களும், அமேரிக்கர்களும் புத்தமதத்தில் சேர்ந்து அங்கங்குள்ள அவருடைய சரித்திரங்களை ஆங்கிலேய பாஷையில் வெளியிட்டிருக்கின்றார்கள்.

நமது குலகுருவாகிய ஒப்பில்லா அப்பன் சாக்கைய முநியவர்களின் ஞானத்தைக் கண்டடைவதற்கு மடாலயங்களும் அவருடைய போதனைகளைப் பிரசங்கித்து வருவதற்கு கூடங்களுங் கட்டுவித்து Buddhist Temple என்றும்,

நமது குலத்தவருக்குள் நடக்கும் விவாகங்களைக் குறிப்பிட்டு வைப்பதற்கு புத்தகங்களை ஏற்படுத்தி Buddhist Register என்றும்,

நமது குலத்தவருக்குள் மரணமடைந்தோர்களை புதைப்பதற்கும் தகனஞ் செய்வதற்கும் பிரத்தியேக பூமிகளை ஏற்படுத்தி Buddhist Burial என்றும்,

நமது குலத்து வயித்தியர்களை ஒற்றுமை அடையச்செய்து வயித்திய சாலைகளை ஏற்படுத்தி Buddhist Medical Hall என்றும்,

நமது குலத்து சிறுவர்கள் உயர்தரக்கல்வி இலவசமாகக் கற்றுக்கொள்ளுவதற்கும் தூரதேசங்களிலுள்ள நமது குலத்து சிறுவர்கள் சென்னைக்கு வந்து நிலையாக ஓரிடத்தில் தங்கி மெடிகல் காலேஜ்,