பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 343

முயற்சி 3. சம்மபாதா - நான்குவித பாதை 4. சந்திரியா - ஐயிந்திரியங்கள் 5. சபலா - ஐந்துவித நீதிபலம் 6. சத்தபோ ஜங்கா - பற்றறுத்தல் 7. சதிபாத - அறிய அட்டாங்க மார்க்கம்

ஓ! சகோதிரர்களே! முதலாவது - நான்கு விதமான சிந்தனைகளாவன :-

அவை 1. காயானுபஸ்ஸன்னா - அசுத்தத்தாலாய தேகத்தைப்பற்றி சிந்தித்தல்.

2. வேதனானு பஸ்ஸன்னா - சகல உணர்ச்சிகளின்று உண்டாகுங் கேடுகளைப்பற்றி சிந்தித்தல்.

3. சித்தானுபஸ்ஸன்னா - மனத்தினது எண்ணங்களின் ஓட்டங்களையும் மறதிகளையும் உதயங்களையும் சிந்தித்தல்.

4. தம்மானு பஸ்ஸன்னா - உலகத்தில் தோற்றும் பொருட்கள் யாவும் க்ஷணத்திற்கு க்ஷணங் கெட்டுக்கொண்டே வருகிறதென்று சிந்தித்தல்.

ஓ! சகோதிரர்களே! இரண்டாவது - நான்குவிதமான முயற்சிகள் யாவை.

அவை. 1. அநூபானானங், அநுபாதாயாவாயமோ - கெட்ட குணங்கள் உதிக்காமல் அவற்றை தடுக்க முயற்சித்தல்.

2. உபானானங் பபாகானங் பஹானாயாவாயமோ - உள்ள கெட்ட குணங்களை விலக்குதற்கு முயற்சித்தல்.

3. அநுபானானங் கூஸலானங் உபாதாயாவாமோ - முன்னில்லாத நன்மெய்களை உண்டாக்க முயற்சித்தல்.

4. உபானானங் குஸலானங் பயோபாவாயா வாயமோ - உண்டாயிருக்கும் நன்மெய்களை அதிகப்படுத்த முயற்சித்தல்.

ஓ! சகோதிரர்களே! மூன்றாவது, நான்குவித பாதைகள் யாவை?

அவை 1. சந்தித்தி - பாதா - சித்த சுத்தியைப்பெறவேண்டிய பாதை
2. விரியத்தி - பாதா - நிருவாண ஸித்திபெறவேண்டிய பாதை.
3. ஸிட்தித்தி - பாதா - சித்தத்தை அடக்கவேண்டிய பாதை.
4. விமம்ஸித்தி - பாதா - விசாரணை பாதை.

ஓ! சகோதிரர்களே! நான்காவது - ஐயிந்திரியங்கள் யாவை?

அவை 1. சத்ட்திந்திரியா - உரமானசிரத்தை
2. வீரியந்திரியா - உரமான சக்தி
3. சடீந்திரியா - உரமான ஞாபகம்
4. சமாதிந்திரியா - வாஸ்தவமான தியானம்
5. பிரஞ்ஞந்திரியா - சிறந்த ஞானம்

ஓ! சகோதிரர்களே! ஐந்தாவது - ஐந்துவித நீதிபலம் யாவை?

அவை 1. சிட்த்தா - பலா சிரத்தைக்கருவி
2. வீரிய பலா - சக்திக்கருவி
3. சடீ பலா - ஞாபகக்கருவி
4. சமாதி பலா - தியானக்கருவி
5. பிரஞ்ஞா பலா - ஞானக்கருவி

ஓ! சகோதிரர்களே! ஆறாவது பற்றறுத்தல் அதாவது அறஹத்த நிலையை அடையும் ஏழு துணைகள் யாவை?

அவை 1. சதிசம்போஜங்கா - ஞாபகத்தை நிர்மலமாக்கல்
2. வீரிய சம்போஜங்கா - சித்தி யதிகரிக்கச் செய்தல்
3. தம்ம விஸய சம்போஜங்கா - பகுத்தறியும் ஞானம்
4. பிடிசம்போஜங்கா - ஆனந்தத்தை நிர்மலமாக்கல்
5. பஸ்ஸட்தி சம்போஜங்கா - சித்தமும், அமைதியாயிருத்தல்.
6. சமாதி சம்போஜங்கா - சித்ததியானத்திலிருத்தல்
7. உபேக்கா சம்போஜங்கா - தெளிவு.

ஓ! சகோதிரர்களே! ஏழாவது - நான்கு பாதைகள் யாவை?

அவை 1. (ஸீரோதாபதி) இஃதே நிருவாண பதமடையும் முதல்பாதை, இம்முதல்பாதை சித்தி பெற்றவனுக்கு சத்காய திருஷ்டி, விஸிசிக்சா ஸீல பத பரமாஸ அதாவது நான் என்னும் மயக்கம், சந்தேகம், நீதிமார்க்கமில்லாமலே சுகம் பெறலாமென்ற இம்மூன்றும் அற்றுவிடும்.

2. (ஸகிர்தாவாமி) இஃதே மேற்கூறிய, மூன்றும் அற்ற நிலையிலிருத்தல்.

3. (அனாகாமி) இஃதே நிருவாண பதமடையும் மூன்றாம் பாதை, இப்பாதையில் சித்திபெற்றவனுக்கு காமராக, படிகா அதாவது புலன்கள் பற்றும், கோபமும் இவைகள் அற்றுவிடும்.