பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344 / அயோத்திதாசர் சிந்தனைகள்

4. (அறஹத்) இஃது நிருவாண பதடையும் நான்காவது பாதை. இப்பாதையில் சித்தி பெற்றவனுக்கு ரூபராக, அரூபராகமான (உட்தச்ச, அவிஜ்ஜா) அதாவது ரூப ஆசை, அரூப ஆசை விழிப்புடன் பார்க்கும் ஆசை அகங்காரம், தியான தடுக்கம், அறியாமெ இவைகள் அற்றுவிடும். மேற்கூறிய பத்துவகைப் பற்றுக்கள் அற்ற நிலையினுள் அரிய அஷ்டாங்கமார்க்கம் அடங்கியுள்ளன.

ஓ! சகோதிரர்களே! சுவஸிக்தம் பரிதபனம் அதாவது இதயசுத்தத்திற்கு இஃதே மார்க்கமென பகவன் முடிவு செய்தார்.

பிக்ஷீகுழாங்கள் பகவனை வணங்கி கீழ்வரும் புத்த சாக்கைய முனிவரின் குணலட்சணங்களைப் பற்றியும் அவர் சத்தியத்தைப்பற்றியும் மும்மணி களடங்கிய மூன்று கீதையையும் பாடி ஆனந்தித்தார்கள்.

குணலட்சணம்

இதிபிஸோ பகவா அறஹங்ஸம்மா ஸம்புத்தோ
விஜ்ஜாஸரண ஸம்பன்னோ ஸுகதோ லோகவிது
அனுத்தரோ புரிஸ தம்ம ஸாரதி
ஸத்தா தேவ மனுஸ்ஸானஞ் புத்தோ பகவாதீ.

குணலட்சணங்கள்

இதிபிஸோபகவா - பகவானேபெரியோன், அறஹம் - அவரே
பெருந்துறவு ஸம்மா ஸம்புத்தோ - அவரே ஞானசமுத்திரம், விஜ்ஜா
ஸரண ஸம்பன்னோ - அவரே சகல சித்தியும் பெற்றவர் ஸுகதோ
அவரே சுகமடைந்தவர் லோகவிது - அவரே உலகறிந்தோன் அனுத்தரோ
- அவரே நிகரற்றவர் புரிஸதர்மஸாரதி - அவரே மனுக்களை
தருமவழியிலோட்டியவர் ஸத்தாதேவ மனுஸ்ஸானங் - தெய்வ நிலை
உடையோருக்கும், மனுக்களுக்கும் ஆசான் புத்தோ பகவாதி - அவரே
பகவன் புத்தர்

சத்தியம்

ஸுவாகாதோ பகவதோ தம்மா
ஸந்திட்டி கோ அகாலிகோ ஏஸிபஸ்ஸிகோ உபநெயிகோ பச்சித்தங்வுவேதிதப்போவிஞ்ஞஹி.

சத்தியம்

சுவாகாதோ பகவதா தம்மோ - சத்தியம் பகவனால் குறைவின்றி போதிக்கப்பட்டது, ஸந்திட்டிகோ - அச்சத்தியம் உடனுக்குடன் பலனைக் காட்டக்கூடியது, அகாலிகோ - யாதொரு தடையின்றி அந்தக்ஷணமே பிரயோசனத்தைக் தரக்கூடியது, எஹிபஸ்ஸிகோ - அச்சத்தியம் பேதமின்றி யாவரையும் கூவியழைக்கக் கூடியது, உபநெயிகோ - அச்சத்தியமே நிருவாணத்திற்கு அழைக்கும் பாதை, பச்சிதங் வுவேதிப்போ விஞ்ஞாஹி - ஞானிகள் தங்களுக்குள்ளே அறிந்துக்கொள்ளக் கூடியதும் இச்சத்தியமேயாம்.

மூன்று கீதைகள் - புத்தம்

1.யோவடதங் பவரோ மனுஜேஸு
சாக்யமுனி பகவா கதகிச்சோ
பாரகதோ பலவிரிய ஸமங்கி
தங் சுகதாங்சரணத்த முபேமி.

புத்தம்

யோவடதங் பவரோ மனுஜேஸு - மனுக்களில் பெருமெயும் அருமெயான ஆசானும், சாக்யமுனி பகவாகதகிச்சோ - பகவான் சாக்கைய முநிவர் சகலருக்குங் குருவாக விளங்கி, பாரகதோ பலவீரிய ஸமங்கி - உலகில் முடிக்கவேண்டியதை முடித்து கரையேறி நிருவாணமடைந்த, தங்ஸுகதங் ஸரணத்தமுபேமி - மங்கலகரமான புத்தபிரானை யாங்கள் துணைக் கொள்ளுகிறோம்.

தம்மம்

2. ராகவிராகங் அனீஜமஸோகங்
தம்மம் அஸங்கதம் அப்படீகூலம்
மதுரம் இமம் புகுணம் ஸுவிபத்தம்
தம்மம் இமம் ஸரணத்த முபேமி

தம்மம்

ராக விராகம் அனீஜம ஸோகங் - காமம், அவா, துக்கம் இவைகளினின்று