பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350 / அயோத்திதாசர் சிந்தனைகள்

உலகில் சகோதிரர்களில் ஒருவன் உலக ஆசையைவிட்டு துக்கத்தினின்று விடுபட்டு துக்கபயமின்றி தைரியத்துடன் இருப்பானாகில் அவனையே தீரனென்றழைக்கலாம்.

உலகில் சகோதிரர்களில் ஒருவன் பிராமணன் அடைந்தநிலை இது வெனவும், சமணன் அடைந்த நிலை இதுவெனவும் கண்டு அந்தந்த படித்தரத்துக்குத் தக்கபடி நடந்து பற்றுக்களினின்று சிறுகசிறுக விலகிவருவானாகில் அவனையே குஸலனென்றழைக்கலாம்.

உலகில் சகோதிரர்களில் ஒருவன் நீதியான தன்மம் இன்னதெனவும், அநீதியான தன்மம் இன்னதெனவும் பகுத்தறிபவனாகியும், மனத்தை ஐம்பொறிகளில் செல்லவொட்டாது தடுத்து துறவற ஒழுக்கத்திற் செல்பவனாகியும், பற்றென்னும் வலையினின்று விடுபட்டவனுமா யிருப்பானாகில் அவனையே முனி என்றழைக்கலாம்.

உலகில் சகோதிரர்களில் ஒருவன் மத்தியபாதையில் நின்றும், சுகத்தைப்பெற்றும், சந்தேகத்தை நிவர்த்தி செய்தும், மறுபிறப்பை ஒழித்தவனாகியும் இருப்பானாகில் அவனையே மஹா பிக்ஹு என்றழைக்கலாம்.

ஓ! சகோதிரர்களே! இவ்வுலகில் இவைகள் யாவற்றையும் தெரிந்த சகோதிரர்கள் வாதிடுவதற்கு வெளிவரமாட்டார்கள்.

1. ஸந்த வாதோ பயங் ஜாதங் / நிக்கேதா ஜாயதோ ஜோ
அனிகே மஸஸ்தங்வ / ஏதங் வே முனி தஸ்ஸனங்

ஓ! சகோதிரர்களே! வழக்க பழக்கத்தால் பயங்கரம் உதிக்கின்றது. இல்லற துன்வாழ்க்கையால் துற்சுபாவம் எழுகின்றது. வழக்க பழக்கங்களற்று துறவற வாழ்க்கையைப் பெறுவதே முனியினது தர்சனமாயிருக்கவேண்டும்.

2. யோ ஜாத முத்திஜ்ஜ நரோபயய்ய / தாயந்த மஷ்ஸ நானுப்ப வஜ்ஜ
தமாஹு ஏகங் முனிநந் தாந்தங் / அடத்தகிஸோ சந்திப்தங் மஹேஸி

சகோதிரர்களில் ஒருவன் எழும்பிய பாவங்களை நீக்கி அப்பாவங்களை வேரூன்றாது தடுத்து தன்னில் எழும்போது அதற்கு இடந்தராது நிற்கும் மௌனியை முனி என்றழைக்கலாம்.

3. ஸங்காய கட் நூனி பஹா பீஜங் / ஸிநேஹ மஸ்ஸ நனு பவச்ச
ஸவேமுனி ஜாதிகயந்த தஸ்ஸி / தக்கங் பஹாய நாஉபெதி சங்கங்

பாவம் எழும் காரணங்களைக்கண்டு அதன் வித்தை மாயவைத்த பின் அதன்பேரிலுள்ள அவாவின்படி இடந்தராதுயிருக்கும் முனியாரோ அவர் பிறப்பின் அந்தத்தையும், அதன் மடிவையும் கண்டபின் மறுபிறப்புக்கு ஆளாகமாட்டார்.

4. அஞ்ஞாய ஸப்பானி நிவேதனானி / அனிகா மயங் அஞ்ஞகாம் தேஸங்
ஸவே முனி வீதகேதோ அகித்தோ / நாயூ ஹெத்தி பாரகதோ
ஹேஹோதி

மனமானது எந்தெந்த இடங்களில் தங்குகிறதென உற்றறிந்து அது பற்றின பற்றிற்கு சற்றேனும் இடந்தராது மௌனியாயிருக்கும் முனியாரோ அவர் பொருளாசையும் பேராசையும் அற்று மனம்பற்றின பற்றிற்கு இடந்தராது அக்கரைச் சேர்ந்தவராவர்.

5. ஸப்பாபிபுங் ஸப்பவிதுங் ஸுமேதங் / ஸப்போஸு தம்மேஸு அநுபலித்தங்
ஸப்பங் ஜஹங் தன்ஹக்கயே விமுத்தங் / தஞ்சாபி திஹிராமுனிங்வேத யந்தி.

சகோதிரர்களில் ஒருவர் சகல பாபகன்மங்களை வென்றும், சகலமுமுணர்ந்தும், நற்பார்வையினின்றும், குற்றமற்றும், அவாவை ஒழித்தும் இருப்பாராகில் அவரையே முனி என்றழைக்கலாம்.

 
6. ஆஞ்ஞாபலங் நீலவிதூப்பண்ண ங் / ஸமா ஹிதங் ஜானரதங் ஸதீமங்
ஸங்காப முத்தங் ஸகிலங் அனாஸவங் / தஞ்சாபி திஹிரா முனிங் வேத யந்தி.

சகோதிரர்களில் ஒருவருக்கு பகுத்தறியும் சக்தியும் அறிவு மிகுதியும் இருக்குமாயின் அறமும், பரிசுத்த நடையும், தியானத்தில் ஆனந்தித்தும், ஜாக்கிரதையுடனும் பாஸபந்தங்களற்றும், கடுமெயற்றும் காமமற்றும் இருப்பர். அவரையே முனி என்று அழைக்கலாம்.

7. ஏகங் சாந்தங் முனிங் அப்பமத்தங் / நிந்தா பஸ்ஸாஸு அவதே மானங்