பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354 / அயோத்திதாசர் சிந்தனைகள்

துன்பத்திற்கும் காரணம் யாமன்றோ. அத்தகைய சோர்வையும், துன்பத்தையும் சீவர்களுக்கு அளிக்காது நாமே அநுபவிப்பது நன்றன்றோ என்றார்.

அதனை வினவிய வேவுகர்கள் மெய்சிலிர்த்து தேவாதிதேவா! தலைத்தார்ந் வேந்தனென்னும் சக்கிரவர்த்திப்பீடத்தைத் துறந்தீர் அதுவும் பெரிதல்ல. இரத கஜ துரக பதாதிகளென்னும் நான்குவகை சேனைகளையுந் துறந்தீர் அதுவும் பெரிதல்ல. அரிய மனைவியாம் அசோதரையைத் துறந்தீர் அதுவும் பெரிதல்ல. ஏகபுத்திரனாம் இளமகவைத் துறந்தீர் அதுவும் பெரிதல்ல. எக்காலும் இரதமூர்ந்துசெல்லும் தாமரை பாதமானது முள்ளுங் கல்லும் ஊன்றும் பாதையில் நடப்பதைப்பார்க்கப் பொறுக்கவில்லையே யாது செய்வோமென்று கலங்கினார்கள்.

அன்பர்களே! மனிதன் தனக்கு மெத்த சுகத்தை விரும்பியவிடத்து சொற்ப துக்கமும் பெருந்துக்கமாகவே தோன்றும். சுகத்தை அதிகம் விரும்பாதவிடத்து பெருந்துக்கமும் சொற்பதுக்கமாகவே தோன்றும். சுகத்திற்குந் துக்கத்திற்குங் காரணம் நாமும் நம்முடையச்செயலுமாகவே இருக்கின்றோம்.

சுகதேகிகளாக உலாவச் செய்துக்கொள்ளுகிறவர்களும் நாமே, பிணியின் உபத்திரவங்களால் துக்க தேகிகளாக உலாவுகிறவர்களும் நாமே.

உலகத்தில் பகையைப் பெருக்கிக்கொள்ளுகிறவர்களும் நாமே, சாந்தத்தை நிறப்பிக்கொள்ளுகிறவர்களும் நாமே.

அதிக லாபத்தைப் பெருக்கிக்கொள்ளுகிறவர்களும் நாமே, அதிக நஷ்டத்தை அடைபவர்களும் நாமே.

மறுமெய் தோற்றுவதற்கும் ஆதாரம் நாமே, மறுமெய்த் தோற்றாமல் செய்துக்கொள்ளுவதற்கும் ஆதாரம் நாமே என்று சத்திய தன்மத்தை விளக்கிக்கொண்டே மகதநாட்டை நெருங்கியகாலத்தில் சக்கிரவர்த்தித் திருமகன் வருகையை உணர்ந்த நாட்டுக்குடிகளும், நகரக்குடிகளும், குதூகலித்து வீதிகடோரும் பழயமணல்களைப் பேர்த்தும், புது மணல்களைப் பரப்பியும், வாழைக் கமுகு முதலியவைகளை நாட்டியும், அரசிலைத் தோரணங்களைக் கூட்டியும், அறிவையர்கள் ஆலவட்டம், வெண்சாமரை வீசவும், கற்புடை மாதர் கர்ப்பூரவாலாத்தி ஏந்தியும், கமலபாதன் வருகையை எதிர்பார்த்திருக்குங் கால் எண்குணத்தோனும் வந்து தோன்றினார்.

நமதையன் ஞானகருணாகரமுகங் கண்டவுடன் பொல்லுறவோர், தொல்லுறவோர் யாவரும் நல்லுறவோரெனத்தோன்றி நாதனை யாசிகூறி சாமரை வீசி ஆலார்த்தி யார்த்தி பல்லாண்டுபாடி சாரணர் கதிவேண்டி சிரமீது இருகைகூப்பி ஜெகத்திரட்சகா! ஜெகந்நாதா! ஜெகத்குருவே! எங்களை ஆண்டு ரட்சிக்கவேண்டுமென்று இரைஞ்சி நின்றார்கள்.

மகதநாட்டை அடைந்த மாதவன் சகலருக்கும் அறிவு பெருகுக என்னும் ஆசிகூறி அரண்மனை சேர்ந்தவுடன் அமைச்சர்கள் யாவருமெதிர் நோக்கிவந்து அவலோகிதரை வணங்கி அழைத்துச்சென்று சுத்தோதயச் சக்கிரவர்த்தி படுக்கையறையில் விடுத்தார்கள்.

சக்கிரவர்த்தியாரும் தனக்குள்ளிருந்த வியாதியின் உபத்திரவம் நீங்கி திருமகனை விழித்துப்பார்த்து அருமெய் மைந்தனே என்று அழைக்கலாமோ என்று சிந்தித்தான். மறுபடியும் தன்னைத்தேற்றிக்கொண்டு நாமவருக்கு பிதாவாயினும் நமக்கவர் ஞானப்பிதாவாம் தாதாவாச்சுதே அவரை மைந்தனென்று அழைக்கலாமோ என்று மருண்டான். அவரது முகதேஜசைக் கண்டு ஆனந்தக்கண்ணீரை சொரிந்தான்.

சுத்தோதயச் சக்கிரவர்த்தியின் இத்தியாதி எண்ணங்களின் உதயங் களையும், ஒடுக்கங்களையும் உள்ளுணர்ந்த ஒப்பிலா அப்பன் சுத்தோதயன் அருகில் சென்று ஐயனே! யாது குறை என்று வினவினார்.

சுத்தோதயனும் சித்தார்த்தரைநோக்கி ஐயனே! அரசுக்கு யாதோர் அதிகாரியும் இல்லையே யாது செய்யலாம் என்றான்.

புருஷோத்தமன் புன்னகை கொண்டு ஐயனே! உமக்குமுன் இத்தேசத்தை வல்லமையுடன் ஆண்டுவந்த இட்சுவாகு, வீரவாகு, குலவாகு, கலிவாகென்னுஞ்